யாப்பருங்கலம்
அமிதசாகரர்
தொகுஇயற்றியருளிய
யாப்பருங்கலம் (மூலம்)
தொகுபாயிரம்
தொகு- முழுதுல கிறைஞ்ச முற்றொருங் குணர்ந்தோன்
- செழுமலர்ச் சேவடி செவ்விதின் வணங்கிப்
- பாற்படு தென்றமிழ்ப் பரவையின் வாங்கி
- யாப்பருங் கலம்நனி யாப்புற வகுத்தோன்
- தனக்குவரம் பாகிய தவத்தொடு புணர்ந்த
- குணக்கடற் பெயரோன் கொள்கையின் வழாஅத்
- துளக்கறு கேள்வித் துகள்தீர் காட்சி
- அளப்பருங் கடற்பெயர் அருந்தவத் தோனே.
- -என்பது பாயிரம்.
சிறப்புப் பாயிரம்
தொகு- (தெய்வவணக்கம்)
- வெறிகமழ் தாமரை மீமிசை ஒதுங்கிய
- அறிவனை வணங்கி அறைகுவன் யாப்பே.
- (பாயிரம் முற்றியது)
உறுப்பியல்
தொகு1. எழுத்தோத்து
தொகுநூற்பா: 1 (எழுத்தசை)
தொகு(யாப்பு)
- எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோ(டு)
- இழுக்கா நடைய தியாப்பெனப் படுமே.
நூற்பா: 2 (உயிரேமெய்யே)
தொகு(அசைக்கு உறுப்பாகும் எழுத்துகள்)
- உயிரே மெய்யே உயிர்மெய் யென்றா
- குறிலே நெடிலே அளபெடை யென்றா
- வன்மை மென்மை இடைமை யென்றா
- சார்பில் தோன்றும் தன்மைய வென்றா
- ஐஒள மகரக் குறுக்கம் என்றாங்(கு)
- ஐம்மூ வெழுத்தும் ஆமசைக் குறுப்பே.
நூற்பா: 3 (தனிநிலை)
தொகு(ஆய்தம், ஒற்றிற்குச் சிறப்பு விதி)
- தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே
- அளபெடை அல்லாக் காலை யான.
நூற்பா: 4 (தளைசீர்)
தொகு(குறறியலிகரம், குற்றியலுகரம், உயிரளபெடைகட்கு ஓர் இலக்கணம்)
- தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே
- குறுகிய இகரமும் குற்றிய லுகரமும்
- அளபெடை ஆவியும் அலகியல் பிலவே.
- (எழுத்தோத்து முடிந்தது)
2.அசையோத்து
தொகு(அசையின்வகை)
நூற்பா: 5 (நேரசை)
தொகு- நேரசை யென்றா நிரையசை யென்றா
- ஆயிரண் டாகி அடங்குமன் அசையே.
(நேரசை)
நூற்பா: 6 (நெடில்குறில்)
தொகு- நெடில்குறில் தனியாய் நின்றுமொற் றடுத்தும்
- நடைபெறும் நேரசை நால்வகை யானே.
(தனிக்குறில் நேரசை ஆகாத இடங்கள்)
நூற்பா: 7 (குறிப்பே)
தொகு- குறிப்பே யேவல் தற்சுட் டல்வழித்
- தனிக்குறில் மொழிமுதல் தனியசை யிலவே.
(நிரையசை)
நூற்பா: 8 (குறிலிணை)
தொகு- குறிலிணை குறினெடில் தனித்துமொற் றடுத்தும்
- நெறிமையின் நான்காய் வருநிரை யசையே.
(ஐகாரக்குறுக்கம் இணைந்த நிரையசை)
நூற்பா: 9 (ஈறுமிடையும்)
தொகு- ஈறு மிடையு மிணைந்து மிணையசை
- ஆகும்ஐ என்ப அறிந்திசி னோரே.
- அசையோத்து முடிந்தது.
3.சீரோத்து
தொகு(சீர்களி்ன் பெயர்வேறுபாடு)
நூற்பா: 10 (இயற்சீர்)
தொகு- இயற்சீர் உரி்ச்சீர் பொதுசசீர் என்றா
- மயக்கற வகுத்த சீர்மூன் றாகும்.
(இயற்சீ்ர்)
நூற்பா:11 (ஈரசை)
தொகு- ஈரசை கூடிய சீரியற் சீரவை
- ஈரிரண் டென்ப இயல்புணர்ந் தோரே.
(உரிச்சீர்)
நூற்பா:12 (மூவசைச்)
தொகு- மூவசைச் சீருரிச் சீரிரு நான்கனுள்
- நேரிறு நான்கும் வெள்ளை யல்லன
- பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே.
(பொதுச்சீர்)
நூற்பா:13 (நாலசைச்)
தொகு- நாலசைச் சீர்பொதுச் சீர்பதி னாறே.
(ஓரசைச்சீர்)
நூற்பா:14 (ஓரைசைச்சீரு)
தொகு- ஓரசைச் சீருமஃ தோரிரு வகைத்தே.
(சீர்கள் செய்யுளில் நிற்கும்முறை)
நூற்பா:15 (விரவியும்)
தொகு- விரவியு மருகியும் வேறும் ஒரோவழி
- மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே.
(நேர்நடு வஞ்சியுரிசசீர்)
நூற்பா:16 (நிரைநடு)
தொகு- நிரைநடு வியலா வஞ்சி யுரிச்சீர்
- கலியினோ டகவலிற் கடிவரை யிலவே.
- சீரோத்து முடிந்தது
4. தளையோத்து
தொகு(தளையும் அதன் தொகையும்)
நூற்பா: 17 (சீரொடுசீர்)
தொகு- சீரோடு சீர்தலைப் பய்வது தளையவை
- ஏழென மொழிப இயல்புணர்ந் தோரே.
(வெண்டளை)
நூற்பா:18 (வெண்சீர்)
தொகு- வெண்சீ ரொன்றலும் இயற்சீர் விகற்பமும்
- என்றிரண் டென்ப வெண்டளைக் கியல்பே.
(ஆசிரியத்தளை)
நூற்பா: 19 (ஈரசைச்சீர்)
தொகு- ஈரசைச் சீர்நின் றினிவரும் சீரொடு
- நேரசை யொன்றல் நிரையசை யொன்றலென்
- றாயிரு வகைததே யாசிரி யத்தளை.
(கலித்தளை)
நூற்பா: 20 (நிரையீறில்லா)
தொகு- நிரையீறில்லா உரிச்சீர் மு்ன்னர்
- நிரைவருங் காலை கலித்தளை யாகும்.
(வஞ்சித்தளை)
நூற்பா: 21 (தன்சீரிறுதி)
தொகு- தன்சீ ரிறுதி நிரையொடு நேர்வரின்
- வஞ்சித் தளையின் வகையிரண் டாகும்.
(தளைமயக்கம்)
நூற்பா: 22 (வெள்ளையுட்)
தொகு- வெள்ளையுட் பிறதளை விரவா அல்லன
- எல்லாத் தளையும் மயங்கி வழங்கும்.
- தளையோத்து முடிந்தது
5. அடியோத்து
தொகு(அடியின் வகை)
நூற்பா: 23 (குறளடி)
தொகு- குறளடி சிந்தடி அளவடி நெடிலடி
- கழிநெடி லடியெனக் கட்டுரைத் தனரே.
(முதல் நான்கடிகள்)
நூற்பா: 24 (குறளடி..இருசீ)
தொகு- குறளடி சிந்தடி இருசீர் முச்சீர்
- அளவடி நெடிலடி நாற்சீர் ஐஞ்சீர்
- நிரனிறை வகையால் நிறுத்தனர் கொளலே.
(கழிநெடிலடி)
நூற்பா: 25 (கழிநெடிலடியே)
தொகு- கழிநெடி லடியே கசடறக் கிளப்பின்
- அறுசீர் முதலா ஐயிரண் டீறா
- வருவன பிறவும் வகுத்தனர் கொளலே.
(வஞ்சிப்பாவிற்குரிய அடி)
நூற்பா: 26 (சிந்தடி...என்றிரண்)
தொகு- சிநதடி குறளடி என்றிரண் டடியான்
- வஞ்சி நடக்கும் என்மனார் புலவர்.
(வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா அடிகள்)
நூற்பா: 27 (கலியொடு)
தொகு- கலியொடு வெண்பா அகவல் கூறிய
- அளவடி தன்னால் நடக்குமன் அவையே.
(பாவினங்களுக்குரிய அடி)
நூற்பா: 28 (பாவினம்)
தொகு- பாவினம் எல்லா அடியினும் நடக்கும்.
(அடிமயக்கம்)
நூற்பா: 29 (இயற்சீர்வெள்ளடி)
தொகு- இயற்சீர் வெள்ளடி வஞ்சி அடியிவை
- அகப்பட வரூஉம் அகவலும் உளவே.
(கலிப்பாவில் பிற பா விரவுதல்)
நூற்பா: 30 (வெள்ளடி)
தொகு- வெள்ளடி கலியினுள் விரவவும் பெறுமே.
(வஞ்சியுள் பிற பா மயங்கல்)
நூற்பா: 31 (வஞ்சியுள்)
தொகு- வஞ்சியுள் அகவல் மயங்கினும் வரையார்.
(பாக்களின் அடிச்சிறுமை)
நூற்பா: 32 (ஈரடிவெண்)
தொகு- ஈரடி வெண்பாச் சிறுமை மூவடி
- ஆசிரி யத்தொடு வஞ்சி எஞ்சிய
- தீரிரண் டடியே இழிபென மொழிப.
- அடியோத்து முடிந்தது.
6. தொடையோத்து
தொகு(தொடை)
நூற்பா: 33 (தொடையே)
தொகு- தொடையே அடியிரண் டியையத் தோன்றும்.