விக்கிமூலம்:கணியம் திட்டம்

குறுக்கு வழி:
WS:K

இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கிமூலம் திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் நேரடியாகப் பங்களிக்க முன்வந்துள்ளது.

இத்திட்டத்திற்கான தேவை தொகு

சனவரி 2016 முதல் விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம் நடைப்பெற்று வருகிறது. இத்திட்டதின் மூலம் இதுவரை 2090 நூல்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்நூல்களின் மூலம் 4, 03, 345 பக்கங்கள் மெய்ப்பு செய்ய உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சூலை மாதம் 2020 ஆண்டு 149 நூல்கள் பலவகையான மின்னூல்களாக உருவாக்கப்பட்டுளன. இவற்றின் மொத்தப் பக்கங்கள் ஏறத்தாழ 22, 236 பக்கங்கள் ஆகும். அவையனைத்தும் இருவரால் மெய்ப்புக்காணப்பட்டு, சரிபார்க்கப்பட்டும் உள்ளன. பிறகு மின்னூல்களாக மூவரால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 149 நூல்கள் விக்கிமூலத்தில் கட்டற்ற முறையில் அனைவரும் படிக்க பதிப்பிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது திட்டம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தன்னார்வளர்களின் சிறப்பான பங்களிப்பு மூலம் நாம் செய்ய முடிந்தது வெறும் 149 நூல்களே. இதே வேகத்தில் நாம் மெய்ப்பு பணிகளை செய்து வந்தால் 2090 புத்தகங்களை மெய்ப்பு செய்ய முப்பது வருடங்களாகும். 2090 நூல்கள் என்பது முதல் முயற்சிதான். மேலும் பல ஆயிரம் புத்தகங்கள் மெய்ப்பு செய்ய அடுத்தடுத்த கட்டங்களில் உள்ளன. அதனால் தன்னார்வளர்களுடன் சேர்ந்து விரைவாக மெய்ப்பு செய்ய கணியம் அறக்கட்டளை முன்வந்துள்ளது. இத்திட்டதின் மூலம் கணியம் அறக்கட்டளை மெய்ப்பு/சரிபார்பபு பணியில் ஈடுபடுவர்களுக்கு ஊக்கத் தொகை இந்திய உரூபாயில் வழங்க உள்ளது. ஏறத்தாழ ஒரு பக்கத்திற்கு பத்து உரூபாய் ஒதுக்கப்பட்டு, அது வேலைக்கொப்ப, மூவருக்கு ஊக்கத்தொகையாகப்பகிரந்தளிக்கப்படுகிறது. ஆக, இதுவரை சற்றேறக்குறைய 2, 25, 000 உரூபாயை இந்த அறக்கட்டளை, விக்கிமூலத்திற்கு நன்கொடை அளித்துள்ளது.

கணியம் அறக்கட்டளையின் தெரிவிப்பு தொகு

இந்த அறக்கட்டளையின் செயற்பாட்டிற்க்கும் விக்கிமூலம், விக்கிப்பீடியா முதலிய தளங்களை செயல்படுத்திவரும் விக்கிமீடியா அறக்கட்டளைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கணியம் அறக்கட்டளை, இப்பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை எப்பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விக்கிமீடியா அறக்கட்டளையிடம் இருந்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கமை ஆகும்.

இத்திட்டம் செயற்படும் விவரம் தொகு

மெய்ப்புப்பார்க்கும் பணியானது இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. முதல்நிலையில் மெய்ப்புப் பணி முடிந்த பிறகு, அப்பக்கம் மஞ்சளாக மாற்றப்படும். இரண்டாம்நிலை சரிபார்ப்புப்பணி முடிந்த பிறகு அப்பக்கம் பச்சையாக மாற்றப்படும். இந்த இரண்டு பணிகளும், வெவ்வேறு நபர்களால் செய்யப்பட வேண்டும். மேலும், மெய்ப்புத் தரத்தை உறுதி செய்ய, தன்னார்வல விக்கிப்பங்களிப்பாளர் ஒருவர், சரிபார்த்து, பக்கங்களை ஒருங்கிணைவு (transclusion) செய்வார். அந்நூல் பதிப்பு செய்யப்பட்ட பின்பு தான், ஊக்கத் தொகை உரியவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் தரம் உறுதி செய்யப்படுகிறது.

கணியம் திட்ட உறுப்பினர்கள் தொகு

 1. Abirami kaniyam
 2. Divya kaniyam
 3. Booklover kaniyam
 4. Roopa - kaniyam
 5. Shobia kaniyam
 6. arun kaniyam
 7. Athithya kaniyam
 8. The employee kaniyam
 9. Balabarathi kaniyam
 10. Sasi kaniyam
 11. Deepa arul kaniyam
 12. Kumaran kaniyam
 13. Muthulakshmi kaniyam
 14. Monika kaniyam
 15. Kaleeswari kaniyam
 16. Ramesh kaniyam
 17. Iswarya kaniyam
 18. fathima kaniyam
 19. rabiyathul kaniyam

பணிகள் தொகு

 • கணியம் பணியட்டவணைப் பக்கத்தில், இத்திட்டத்தில் உறுப்பினர்களின் நடப்புப் பங்களிப்புகளை, விரிவான அட்டவணையாகக் காணலாம்.

கணியம் திட்டத்தால் உருவான நூல்கள் தொகு

இத்திட்ட நெறிமுறைகள் தொகு

இத்திட்ட பங்களிப்பு விதிகள் தொகு

 • கணியம் திட்டத்தில் இணைந்து பங்களிப்போர் kaniyam என்று முடியுமாறு பயனர் பெயர் ஒன்றை உருவாக்கி கொள்ளவேண்டும். தாங்கள் கணியம் அறக்கட்டளை மூலம் கட்டணம் பெறுவதற்கு உரிய தொகுப்புகளை இக்கணக்கில் செய்ய வேண்டும். கட்டணமில்லாத் தொகுப்புகளை, தங்கள் வேறு தன்னார்வ கணக்கில் தொகுப்புகளைச் செய்யலாம்.
 • கணியம் திட்டத்தில் பங்களிப்போர் விக்கிமீடியா அறக்கட்டளை கட்டணத் தொகுப்புகள் பற்றி வகுத்திருக்கும் கொள்கைக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். அதாவது, தாங்கள் கணியம் திட்டத்தில் இணைந்து செயற்படுகிறோம் என்பதையும் இதற்காகக் ஊக்கத் தொகை பெறுகிறோம் என்பதையும் தங்கள் பயனர் பக்கத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனை தெரிவிக்க கீழ்கண்ட வார்ப்புருவை பயன்படுத்தலாம்.
{{கட்டணத் தொகுப்பு|அமர்த்துநர்=[http://www.kaniyam.com/foundation/ கணியம் அறக்கட்டளை]|userbox=yes}} 

இந்த வார்ப்புருவை அனைவரும் தங்களது பயனர் பக்கத்தில் பதிவிட வேண்டும்.

 • தங்களுக்கு வேறு தன்னார்வ கணக்கு இருந்தால் அதன் விவரங்களையும் இப்பேச்சு பக்கத்தில் தெரிவிக்க வேண்டும். இதனை தெரிவிக்க கீழ்கண்ட வார்ப்புருவை பயன்படுத்தலாம்
{{பயனர் மாற்று கணக்கு|தங்களின் தன்னார்வ பயனர் பெயர்}}
 • தாங்கள் செய்துள்ள தொகுப்புகளின் விவரங்களையும் தங்களது பேச்சு பக்கத்தில் தெரியபடுத்த வேண்டும்.
 • கணியம் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திட்டத்தின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து இந்தப் பக்கத்தில் இற்றைப்படுத்தி வர வேண்டும்.
 • நிர்வாகிகள் தேர்தல், விக்கிமூலம்/விக்கிஊடக அறக்கட்டளை தொடர்பான பயண உதவித் தொகை வாய்ப்புகள் போன்ற சூழ்நிலைகளில், ஒருவர் கட்டணம் பெறாமல், தன்னார்வமாகப் பங்களிக்கும் கணக்கின் பங்களிப்புகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இந்தப் புரிதல், விக்கிமூலம் திட்டம் தொடர்ந்து தன்னார்வமான தலைமைத்துவத்துடன் இயங்குவதை உறுதி செய்யும் நோக்கில் முன்மொழியப்படுகிறது.
 • தற்போதைய நிலையில், இது முழு நேர சம்பளப் பணி கிடையாது. ஒவ்வொரு நூலும் வெளியிடப்படும் அடிப்படையில் பகுதி நேர வாய்ப்பு மட்டுமே உள்ளது. எந்தப் பயனர்கள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பது கணியம் அறக்கட்டளையின் முடிவே இறுதியானது ஆகும். இத்தகைய முடிவுகளிலோ, கணியம் அறக்கட்டளை ஊக்கத் தொகை அளிப்பது குறித்த பிணக்குகள், தொடர்பாடல்களிலோ, விக்கிமீடிய அறக்கட்டளையின் ஒரு திட்டமான இந்த விக்கிமூலம் திட்டம் பொறுப்பு ஏற்காது.

மேலும் இதில் உள்ள நெறிமுறைகளை, நீக்கவோ புதிய நெறிமுறைகளை சேர்க்கவோ, கணியம் அறக்கட்டளை செய்யலாம். அவ்வபோது கணிய அறக்கட்டளையாரால், இற்றைப்படுத்தப்படும் நெறிமுறைகளை, இத்திட்டத்தின் கீழ் பங்களிப்பவர்கள் கடைபிடித்து வர வேண்டியது, அவர்களது கடமையாகும்.

நூலின் மெய்ப்பு மேம்பாடு தொகு

ஒவ்வொரு நூலும் அட்டவணை வடிவில் மெய்ப்பு காண அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு மெய்ப்பு அட்டவணையும், இரண்டு நிலைகளில் மேம்படுத்தப்பட்டு மின்னூல் வடிவங்களாக மாற்றப்பட உள்ளன.

 • முதல்நிலையில் மெய்ப்பு பார்க்கப்பட்டவை என்பதை ஒரு பயனர் குறிக்க வேண்டும்.
 • இரண்டாம் நிலையில், சரிபார்க்கப்பட்டவை என்பதை மற்றொரு பயனர் குறிக்கவேண்டும்.

கட்டணம் பெறுவதற்கான கணியம் கணக்கு, கட்டணமில்லா தன்னார்வபங்களிப்புக் கணக்கு என இரண்டு கணக்குகளை உடையவர், ஒரு பக்கத்தின் இரண்டு மேம்பாட்டுப் பணிகளையும் செய்தல் கூடாது. இரு தனித்தனிநபர்களே, ஒவ்வொரு பக்கத்தினையும் மேம்படுத்த வேண்டும்.

முதல் நிலைக்கான வழிகாட்டுதல்கள் தொகு

 • இத்திட்டத்தின் கீழ் மெய்ப்பு செய்ய இணைபவர், இக்கருவி காட்டும் நூல்களில் ஒன்றினை, முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், மெய்ப்பு தொடங்குமுன் அதன் விவரங்களை இப்பக்கத்தில் முன்பதிவிட வேண்டும். கணியம் அறக்கட்டளை, சில முன்னுரிமைகளை கருதி, சில நூல்களை முதலில் மெய்ப்பு செய்யவும் பரிந்துரைக்கும் சூழ்நிலைகள் உள்ளன.
 • முதல்நிலை மெய்ப்பு செய்பவர், அந்நூலின் மேலடி, கீழடி, எழுத்துப்பிழைகள், வடிவமைப்பிற்கான வார்ப்புரு இடல், (font size, bold, italic, alignment, quotation mark, placing required templates, etc) முதலியவைகளை, அறக்கட்டளையின் வழிகாட்டுதல் படி செய்ய வேண்டும். இரண்டாம் நிலை சரிபார்ப்பவர், செய்து கொள்வார்கள் என்று கருதாமல், அனைத்து பணிகளையும் செய்த பிறகே, இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்து, மஞ்சள் நிறத்திற்கு மாற்ற வேண்டும்.

இரண்டாம் நிலை வழிகாட்டுதல்கள் தொகு

 • முதல்நிலை முடிந்த நூல்களை, இரண்டாம்நிலையில் சரிபார்ப்பவர், கணியம் அறக்கட்டளையின் வழிக்காட்டுதலோடு, ஒரு நூலை தேர்ந்தெடுத்து இப்பக்கத்தில் முன்பதிவிட வேண்டும்.
 • முதல்நிலை மெய்ப்பு முடித்த பக்கங்களில், சிற்சில தவறுகள் இருந்தால், அதனை சரி செய்துவிட்டு பின்புதான், மஞ்சள் நிறத்திலிருந்து, பச்சை நிறத்திற்கு மாற்ற வேண்டும்.
 • முதல்நிலை மெய்ப்பு முடித்த பக்கங்களில், தவறுகள் மிகவும் அதிகமாக இருந்தால், அவற்றினை உரியவரிடம் சுட்டி, மீண்டும் மெய்ப்பு செய்யக் கோர வேண்டும். அக்கோரிக்கையை ஏற்று, அக்குறிப்பிட்ட முதல்நிலை மெய்ப்புப் பணியை செவ்வனே விதிகளின் படி, செய்வார். பிறகே, இரண்டாம்நிலை பணி செய்யப்பட வேண்டும்.

தொடர்பு விவரம் தொகு

கணியம் அறக்கட்டளையின், இக்கணியம் திட்டம் குறித்த வினாக்களையும், ஐயங்களையும் பின்வரும் தொடர்பில், நேரடியாகக் கேட்டு அறியலாம்.