விக்கிமூலம்:கருவிகளும் பயனர் நிரல்களும்

விக்கிமூலத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளும் பயனர் நிரல்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

எழுத்துணரி

தொகு

OCR எனப்படும் எழுத்துணரி கருவியை தொகுத்தல் பெட்டியின் பட்டைக்குள் கொண்டுவர விருப்பத்தேர்வுகள் சென்று கருவிகள் தத்தலுக்குச் சென்று "கூகுள் ஒளிவழி எழுத்துரு அறிதல்" என்ற தெரிவைத் தேர்வு செய்து சேமிக்கவும். இதன்பிறகு, தொகுத்தல் பெட்டியில் படத்திலுள்ளவாறு காட்டப்படும். இதைச் சொடுக்கினால், வலது பக்கத்திலுள்ள படத்தை எந்திரவழி படித்துணர்ந்து எழுத்துக்களாக இடதுபுற காட்டும். புதியதாக ஏற்றப்பட்ட நூல்களுக்கு இதனைக் கொண்டு தொடக்கநிலை உரையைப் பெற்று, பின்னர் மெய்ப்புப் பார்க்கலாம்.

படங்கள் இணைத்தல்

தொகு

விக்கிப்பீடியா போல விக்கிமூலத்தில் புதிய படங்களை ஏற்றும் தேவை இல்லை. ஆனால் மூலநூலில் உள்ள படங்களை மெய்ப்புப் பார்க்கையில் கொண்டுவரும் தேவை உள்ளது. அதற்கு அவரவர் தங்களது பயனர்வெளியில் உள்ள இந்தப் பக்கம் common.js சென்று,(முதல்முறையாக இப்பக்கத்திற்குச் சென்றால் "உருவாக்கவும்" கொண்டு உருவாக்கவேண்டும்) கீழ்க்கண்ட நிரலை இடப் பக்கத்தைப் பதிப்பிக்க வேண்டும். mw.loader.load("//bn.wikisource.org/w/index.php?title=Mediawiki:Cropimage.js&action=raw&ctype=text/javascript");

இவ்வாறு இட்டபிறகு புதிய படவுரு(icon) தொகுத்தல் பெட்டியில் காணப்படும். அந்தப் படவுருவைச் சொடுக்கி, வலதுபுறப் பக்கததைத் தொட்டால், புதிய சாளரத்தில் ஒரு இழுவிடு(drag & drop) நிலையில் அந்தப்படம் காட்டப்படும். அதில் வேண்டிய பகுதியை மட்டும் அளவை மாற்றியமைத்து உள்ளீடு செய்தால் வலது புறத்தில் அந்தக் குறிப்பிட்ட பகுதி மட்டும் படமாகக் காட்டப்படும். உதாரணம் இந்தப் பக்கம்.