விக்கிமூலம்:நாங்கூர் பள்ளியில் நடைபெற்ற தொடர் தொகுப்பு
இது தமிழக அளவில் நடைபெற்ற முதல் வரலாற்றுச் சாதனையாகும். இதனைக் கண்டு நீங்களும் முயற்சிகளை, உங்கள் பள்ளிகளில் எடுக்கலாம். நாங்களும் உதவுவோம்.
இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி, நாங்கூர்
நாள்: 03-03-2020
நேரம்: 9.30 மணி முதல் 4.30 மணி வரை.
பங்கேற்பாளர்கள்:
- SIVARANJANI SCHOOL
- AMIRTHA SCHOOL
- Pradeeban nangur
- DIVYA SCHOOL
- Senthiyadevi nangur
- MAHA SCHOOL
- SUBHI SCHOOL
- SRIBAN SCHOOL
- BHUVANESHWARI SCHOOL
- Pradeep nangur
- RAJESHWARI SCHOOL
- DEVATHARSHINI SCHOOL
- SAMEERA SCHOOL
- MOHANA SCHOOL
- MAHALAKSHMI SCHOOL
- SANTHIYA SCHOOL
- ESWARI NANGUR
- BALA SCHOOL
- SUGI SCHOOL
- UMA SCHOOL
- VIKKI SCHOOL
- JEYA NANGUR
- Rithani nangur
- DHANAM SCHOOL
- Abirami nangur
- SAROJINI SCHOOL
Mentor : Sridhar G
உதவி : Balajijagadesh
நிகழ்வு முன்னேற்பாடு
தொகுகடந்த வருடம் பெங்களூருவில் நடைபெற்ற wiki SAARC education நிகழ்வில் மாணவர்களை எவ்வாறு விக்கி தொடர்பாக கல்வி சார்ந்த செயல்களில் ஈடுபடுத்தலாம் எனும் கருத்து பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது. எனவே விக்கிமூலம் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தக்கூடியதாகவும் நல்ல பல கருத்துக்களை உள்வாங்கிக்கொள்வதற்கு வாய்ப்பாகவும் அதே சமயம் தமிழுக்கு அவர்களால் இயன்ற பங்களிப்பினையும் வழங்கவும் உதவுகரமானதாகவும் இருக்கும் எனும் கருத்தின் அடிப்படையில் அவர்களுக்கு விக்கிமூலம் தொடர்பான சில தகவல்களை அவர்களிடம் கூறி அவர்களுக்கு அது ஏற்புடையதாக உள்ளதா என கேட்டறிந்தேன். அவர்களுக்கு அது மிகவும் பிடித்தமானதாக இருந்தது இதில் பலர் கணிப்பொறியில் எழுதலாம் எனும் ஆர்வத்தின் அடிப்படையில் சேர்ந்தனர். தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்ற பிறகு பெப்ரவரி 18 ஆம் நாள் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் வகுப்பிற்கு 6 மாணவர்களைத் தேர்வு செய்து கணக்கினை உருவாக்கினோம். பள்ளி நேரம் முடிவடைந்த பிறகு தினமும் ஒரு மணி நேரம் இவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். பின்னர் ஒருநாள் தொடர் தொகுப்பு நடத்தத் திட்டமிட்டோம்.
CIS-A2K
தொகுஇந்த நிகழ்வு நடைபெறுவதற்கு CIS-A2K வின் உதவியினை நாடினோம். மிகக் குறுகிய காலத்தில் விண்ணப்பம் செய்திருந்த போதிலும் அவர்கள் இந்த நிகழ்வு நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கினர் (குறிப்பாக ஆனந்த் ). CIS-A2K விடம் நமது கோரிக்கையின் முழு விவரத்தினை இங்கு காணலாம்.
நிகழ்வுச் சுருக்கம்
தொகுகாலை 9.30 க்கு இறைவணக்கம் முடிந்த பிறகு தொடர் தொகுப்பினை சிறு விளக்கத்துடன் தொடங்கினோம். பின்னர் வழக்கம் போல் நாங்கள் ஒரு நூலினை அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் தொகுக்க வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கையினை தெரிவித்தோம். பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4.30 வரை அவர்கள் மெய்ப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் குழு புகைப்படம் எடுத்தோம்.
கற்றது
தொகுபலரிடம் 9 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களை இந்தப் பணிக்குத் தேர்வு செய்துள்ளோம் என்று கூறியபோது பலர் என்னிடம் தங்களது தயக்கங்களைத் தெரிவித்தனர் அதில் சிலர் சக ஆசிரியர்கள். ஆனால் எனது மாணவர்கள் மிகச் சிறப்பாக மெய்ப்பு பணியில் ஈடுபட்டனர். சில தவறுகள் இருக்கலாம். அதனால், மெய்ப்பு பார்ப்பதில் ஆர்வமும் திறமையும் கொண்ட மாணவர்களை மட்டும் சரிபார்க்கத் திட்டமிட்டோம். அதன்படி 20 மாணவர்கள் மெய்ப்பு பார்ப்பதற்கும் ஆறு மாணவர்கள் சரி பார்க்கவும் கூறினோம். மாணவர்களுக்கு ஒரு நூலினை ஐந்து, ஐந்து பக்கங்களாக பிரித்துக் கொடுத்தோம். இதன்மூலம் அவர்களுக்கு சலிப்பு ஏற்படா வண்ணம் பார்த்துக் கொண்டோம். ஒரு நூல் முடிந்தவுடன் அனைவரையும் கைதட்டச் சொல்லி அவர்களையே உற்சாகப்படுத்தக் கூறினோம்.
அடுத்த நிகழ்வில் கவனத்தில் வேண்டியவை
தொகு- சில நூல்கள் வாசிக்க தெளிவற்றதாக இருந்தது. எனவே அடுத்த முறை பெரும்பாலான பக்கங்கள் தெளிவானதாக உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும்.
- அதிகம் அட்டவணைகள் இல்லாத நூல்களாக பார்க்க வேண்டும்.
கணினியினை இதற்கு முன்பு ஆன்/ஆஃப் செய்யாத என் மாணவர்கள் (20) தற்போது அவர்கள் கணினியில் மெய்ப்பு பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இவர்களில் சிலர் இதனை எவ்வாறு மற்றவருக்கு கற்றுக் கொடுப்பது என்றும் கூறும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். எனவே இவர்களைக் கொண்டு இன்னும் சில எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் அருகில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்க நினைக்கிறோம்.
புள்ளிவிவரங்கள்:
விவரங்கள் | எண்ணிக்கை |
---|---|
தொகுப்பு எண்ணிக்கை | 676 |
பங்குபெற்ற பயனர் எண்ணிக்கை | 26 |
தொகுக்கப்பட்ட தனித்த பக்கங்கள் | 577 |