விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/அக்டோபர் 2013/9

திருக்குர்ஆன்

நபிமார்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

  1. மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.
  2. அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய நினைவூட்டுதல் வரும்போது அவர்கள் விளையாடியவர்களாக அதை செவி மடுக்கிறார்களே தவிர வேறில்லை.
  3. அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?" என்று கூறிக்கொள்கின்றனர்.
  4. "என்னுடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் (பேசப்படும்) சொல்லையெல்லாம் நன்கறிபவன்; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்" என்று அவர் கூறினார்.
  5. அப்படியல்ல! "இவை கலப்படமான கனவுகள்" இல்லை, "அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்" இல்லை, "இவர் ஒரு கவிஞர்தாம்" (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும் கூறுகின்றனர். மேலும்...