விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/அக்டோபர் 2016/22

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"சுழலில் மிதக்கும் தீபங்கள்", ராஜம் கிருஷ்ணன்‎ எழுதிய சமூக நூல். சமூகப் பிரச்னைகளையே மையமாகக் கொண்டு எழுதி வரும் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் இந் நாவலிலும் இன்று தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை விரிவாகச் சித்தரித்துள்ளார். மனித நேயம் தேய்ந்து வரும் இந்நாளில் இவர் காட்டும் சில கதாபாத்திரங்கள் தம்முள் நம்பிக்கையை மலரச் செய்கின்றன.

கண்ணிருந்தும் குருடராய், வாயிருந்தும் ஊமையராய், சுமைதாங்கியாய், மேலும் நகை தாங்கிகளாய் நம்முள் உலா வரும் பெண்கள் பலப் பலர். எது சுதந்திரம் என்றே தெரியாது தவித்தும் மேலைநாட்டு நாகரீகத்தையும் முழுமையாகப் பின்பற்ற இயலாது நம்நாட்டுப் பண்பாட்டையும் கைவிட இயலாது தத்தனித்து, கருத்திழக்கும் மகளிரும் பலப் பலர். இப்படியாகக் குழம்பும் பண்பாட்டுத் தெளிவின்மைக்கு ஒர் நல்ல தெளிவைத் தருகிறது இந்நாவல்.

சமூக அவலங்களைச் சுட்டிக் காட்டுவதுடன் நாம் எங்கே போகவேண்டும். என்ற பாதையையும் தெளிவாக்கிக் காட்டுகிறது. இந்நாவல்.

சுழலில் மிதக்கும் தீபங்கள்
1

கிரிஜா காபித்தூளை அடைத்து, ஃபில்டரில் கொதி நீரை ஊற்றி விட்டு, ரொட்டித் துண்டுகளுக்கிடையில் ‘சீஸ்கறி’யைப் பொதிந்து, வாட்டும் கூட்டுக்குள் நெய் தடவி மூடித் தீயில் வாட்டுகையில் மணம் எட்டுருக்குப் பரவுகிறது.

“அம்மா, ஜமேதாரி வந்திருக்கா!” என்று அறிவித்துக் கொண்டு சாரு சமையலறைக்குள் வருகிறாள். “ஹை, எனக்குக் கொஞ்சம் சீஸ் கறிம்மா!” என்று கையில் அவள் அனுமதி இன்றியே எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஒடுகிறாள்.

“காலங்காத்தால, பல்லுக்கூடத் தேய்க்காம...சை!”

பன்னிரண்டு வயசுக்கு எந்தப் பொறுப்பும் தெரியாத தீனிப்பட்டறை! உடம்பு பக்கவாட்டில் வளாச்சி பெற்று ‘விகாரம்’ என்று சொல்லும் எல்லைக்குப் போயாகி விட்டது

“ஏ, கழுதை! குருவியை வேடிக்கை பார்க்கிறியே? வந்தனாவுக்கு வாசக்கதவைத் திறந்து விடு? உள்வழியே வந்து ‘கச்சடா டப்பாவை’ எடுத்துக்கட்டும்!”

(மேலும் படிக்க...)