விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூலை 2012/10

ஐங்குறுநூறு
1. வேட்கை பத்து - முதலாவது நூறு மருதம்
பாடியவர்: ஓரம்போகியார்


வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோ ளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க எனவேட் டேமே.