விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஜீலை 2017/10

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"புது மெருகு", கி. வா. ஜகந்நாதன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.

பழைய நகைக்குப் புதிய மெருகு கொடுப்பது வழக்கம். நகையின் மதிப்பு எப்போதும் மாறாமல் இருந்தாலும் அதைக் கண்ணிலே படும்படி செய்வது மெருகு. இலக்கியங்களிலும் உரைகளிலும் இலைமறை காய் போலவும் வெளிப்படையாகவும் அரிய நிகழ்ச்சிகள் பல உள்ளன. அவற்றை இந்தக் காலத்துக்கு ஏற்ற தோரணையில் சிறுகதையைப் போல ஆக்கினால் சுவையாக இருக்கும் என்ற கருத்தினால் எழுதி வந்தவை இத்தொகுதியிலே காணும் வரலாறுகள். இத்துறையில் என் ஆசிரியப் பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் முன்பே வழி காட்டியிருக்கிறார்கள் என்பதைத் தமிழர் நன்கு அறிவார்கள்.

இதிலுள்ள வரலாறுகளை அப்படியே சரித்திரமாகக் கொள்ளல் கூடாது. சிறிய உருவத்திலே கண்ட மூலக்கருவைக் கற்பனை வண்ணம் கொண்டு பெரிது படுத்தியவையாதலால் இவை முழுச் சரித்திரமும் அல்ல; முழுக் கற்பனைக் கதைகளும் அல்ல.

தொல்காப்பியரின் வெற்றி
1

தென்னாட்டிற்கு அகத்திய முனிவர் புறப்பட்டார்.

தாம் போகிற நாட்டிலே வாழ்வதற்கு அந்த நாட்டு மொழி தெரிய வேண்டாமா? சிவபெருமானிடத்திலே தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். போகிற இடத்தில் காடும் மலையும் அதிகமாக இருப்பதால் தமக்குத் தெரிந்தவர்கள் வேண்டும். 'குடியும் குடித்தனமு'மாக வாழ்வதற்கு வேண்டிய சௌகரியங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக அவர் ' கங்கையாரிடத்தில் காவிரியாரையும், யமதக்கினியாரிடத்தில் திருணதூமாக்கினியாரையும், புலத்தியனாரிடத்தில் உலோபமுத்திரையாரையும், துவாரகைக்குப் போய் பதினெட்டு அரசர்களையும், பதினெண் கோடி வேளிர்களையும் அருவாளரையும் பிறரையும்' பெற்றுப் புறப்பட்டார், ஜமதக்கினியின் புதல்வர் திருணதூமாக்கினி அகத்தியருக்கு மாணாக்கரானார்.

போகிற இடத்தில் தாம் போய் நிலைத்த பிறகு மனைவியை, அழைத்து வரவேண்டும் என்பது அகத்தியர் எண்ணம்போலும். புலத்தியர் கன்னிகாதானம் செய்து கொடுக்க மணந்துகொண்ட அந்த லோபா முத்திரையை அங்கேயே விட்டுவிட்டு, "பிறகு அழைத்துக்கொள்கிறேன்" என்று சொல்லி வந்து விட்டார்.

(மேலும் படிக்க...)