விக்கிமூலம்:பதிப்புரிமை

விக்கிமூலம் என்பது ஒரு அமெரிக்க மாநிலமான ஃபுளோரிடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமான விக்கிமீடியா அறக்கட்டளையால் நிருவகிக்கப்படுகிறது. எனவே அமெரிக்கப் பதிப்புரிமை விதிகளுக்கு உட்பட்டு வருகிறது.

விக்கிமூலம், இலவசமாக மூலங்களைத் தொகுக்கும் திட்டமாகும். இலவச மூலம் என்பது பொதுவாக பகிரப்பட்ட அல்லது சட்டதிட்டத்திற்கு உட்பட்டு பிறருக்கு பகிர உரிமையளிக்கப்பட்ட மூலமாகும்.


பதிப்புரிமை

தொகு

விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும் ஆக்கங்கள் பதிப்புரிமைக்கு உட்பட்டவை. குனூ தளையறு ஆவண உரிமம் (GNU) / கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் 3.0 (CC BY SA 3.0) ஆகிய பதிப்புரிமங்கள் விக்கிமீடியா ஆக்கங்களுக்குப் பொருந்தும். சுருக்கமாக இவற்றை பின்வருமாறு விளக்கலாம்:

  • விக்கிமீடியாத் திட்ட உள்ளடக்கங்கள் பிறர் எடுத்துப் பயன்படுத்தவும், மாற்றவும், விநியோக்கவும், விற்பனை செய்யவும், வர்த்தக ரீதியில் பயன்படுத்தவும் உரிமை பெற்றுள்ளன.
  • அவ்வாறு பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் விக்கிமீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

உள்ளடக்கங்களைச் சேர்ப்போர் கவனிக்க வேண்டியன

தொகு
  • பிற தளங்களில் வெளியான ஆக்கங்களை - படங்கள், உரை, கட்டுரை, சின்னங்கள், படைப்புகள் - போன்றவற்றை ஆக்கியவரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி விக்கிப்பீடியாவில் பதிவேற்ற இயலாது.
  • இணையதளங்களிலும் நூல்களிலும் கிடைக்கும் படங்கள் இலவசப் படங்களல்ல. அனைத்து படைப்புகளுக்கும் பதிப்புரிமை உண்டு. பிறர் செய்கிறார்கள், இங்கு செய்தால் என்ன; கல்விக்காகத் தானே செய்கிறோம், நல்ல நோக்குடன் தானே செய்கிறோம் போன்ற வாதங்களுக்கு இங்கு இடமில்லை.
  • பிறரது படைப்புகளை விக்கிப்பீடியாவில் இணைக்க அவரது எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும். எப்படி இதைச் செய்வது, அதற்கான வழிமுறைகள் இப்பக்கத்தில் - Requesting copyright permission தரப்பட்டுள்ளன.
  • மேற்குறிப்பிட்ட விதிகளை மீறி பதிவேற்றப்படும் மூலங்கள் எந்நேரத்திலும் நீக்கப்படலாம்.

விதிவிலக்குகள்

தொகு

மேற்குறிப்பிட்ட விதிகளுக்கு சில விதிவிலக்குகள் உள்ளன. அமெரிக்க பதிப்புரிமை விதிகள், கல்வி நோக்குக்காக “ நியாயப் பயன்பாடு” (Fair use) என்றொரு விதிவிலக்கினை அளிக்கின்றன. இதனைப் பயன்படுத்தி பின்வரும் பதிப்புரிமை பெற்ற படங்களைப் பதிவேற்றலாம்:

  • நூல் அட்டைகளின் குறைந்த தெளிதிறன் படங்கள்

ஆனால் இவ்விதிவிலக்கு உள்ளதே என்பதைப் பயன்படுத்தி பதிப்புரிமை விதிகளைப் புறந்தள்ள இயலாது. ஒரு கட்டுரையில் மூன்று அல்லது நான்கு நியாயப் பயன்பாட்டுப் படிமங்களுக்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் பயன்படுத்தக்கூடிய பதிப்புரிமையற்ற படிமங்கள் கிடைக்குமெனில், நியாயப்பயன்பாட்டுப் படிமம் நீக்கப்படும். (எடுத்துக் காட்டாக, ஒருவரது கட்டுரையில் அவரது உருவத்தை சித்தரிக்க ஒரு பதிப்புரிமையற்ற படிமம் இருக்குமெனில் நியாயப் பயன்பாட்டுக் காரணம் கொண்டு வேறெந்த படத்தையும் அவர் உருவத்தை சித்தரிக்கப் பயன்படுத்த இயலாது)

மேலும் நியாயப் பயன்பாட்டுக்காக பதிவேற்றப்படும் ஒவ்வொரு படத்திற்கும், தெளிவான நியாயப் பயன்பாட்டுக் காரணம் தரப்பட வேண்டும்.