விக்கிமூலம்:விக்கித்தரவு
Wikidata's red, green and blue barcode logo
விக்கித்தரவு இலச்சினை

அறிமுகம் தொகு

விக்கித்தரவு என்பது ஒரு கட்டற்ற தரவுத்தளம் ஆகும், இது விக்கிமீடிய திட்டங்களில் உள்ள பொதுவான தகவல்களை ஒரே இடத்தில் தரவுகளை சேமிக்க உதவுகிறது. இத்திட்டத்தில் யார் வேண்டுமானாலும் பங்களிக்கலாம்.

விக்கித்தரவு தரவு உருப்படிகளால் (data items) ஆனது. ஒவ்வொன்றும் ஒரு தகவலுடன் தொடர்புடையது. எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு தரவு உருப்படியைக் கொண்டிருக்க வேண்டும், அந்த உருப்படியில் உள்ள விக்கியிணைப்புகள் (interwikis) மூலம் எந்தவொரு திட்டத்திலும் அந்த ஆசிரியரைப் பற்றிய ஒவ்வொரு பக்கத்தையும் காணலாம், ஆசிரியரைப் பற்றிய தரவு அறிக்கைகளை (statements) விக்கித்தரவில் காணலாம்.

 
விக்கித்தரவு உருப்படி வடிவம்

ஒவ்வொரு தரவு உருப்படியும் ஒரு பெயர் (label), விளக்கம் (description), மாற்றுப்பெயர்கள் (alias), அறிக்கைகள் (statements), விக்கியிணைப்புகள் (interwikis) ஆகியவற்றை கொண்டுள்ளது. விக்கிமூலம் பார்வையில் ஒவ்வொரு தரவு உருப்படியும் இரண்டு முக்கியமான விடயங்களை கொண்டுள்ளது: தரவு அறிக்கைகள் மற்றும் விக்கியிணைப்புகள். காண்க: d:Help:Label, d:Help:Description, d:Help:Aliases, d:Help:Statements, d:Help:Sitelinks

விக்கிமூலத்தில் உள்ள அனைத்து நூல்கள், ஆசிரியர்கள் பக்கங்கள் விக்கித்தரவில் இணைக்கப்பட வேண்டும். தானியக்க தகவல் சேர்த்தலுக்கு மிகவும் விக்கித்தரவு அவசியமானது. பின்வரும் காலங்களில் நாம் விக்கித்தரவு சார்ந்த நுட்பங்களை தமிழ் விக்கிமூலத்திற்கு கொண்டு வரும்போது இது மிகவும் உதவும்.

வழிகாட்டுதல்கள் தொகு

ஆசிரியர்கள் தொகு

அனைத்து ஆசிரியர்களும் பயன்படுத்த வேண்டிய முக்கியமான அறிக்கைகள்
 • வகை (P31) → மனிதர் (Q5)
 • பாலினம் (P21) → மனிதர்களுக்கு (ஆசிரியர்களுக்கு) பொருத்தமான பாலினங்கள்: ஆண்பால் (Q6581097), பெண்பால் (Q6581072), ஊடுபாலினம் (Q1097630), திருநங்கை (Q1052281), திருநம்பி (Q15145783), genderqueer (Q48270)
சேர்க்க வேண்டிய பிற பொதுவான அறிக்கைகள்
 • பிறந்த நாள் (P569)
 • இறந்த நாள் (P570)
 • பிறப்பிடம் (P19)
 • இறந்த இடம் (P20)
 • குடியுரிமை நாடு (P27)
 • தொழில் (P106) → ஆசிரியர் Q482980 உட்பட குறிப்பிட்ட தொழில்களும் அடங்கும்
 • பணி செய்யும் துறை (P101) → எ-கா: இயற்பியல், வேதியியல் (அல்லது குறிப்பிட்ட துணைத் துறைகள்) போன்றவை.
 • பொறுப்பு (P39)
 • படிமம் (P18) → பொதுவகத்திலுள்ள ஒரு கோப்பு (ஆசிரியரின் உருவப்படம்)
 • தாய் மொழி (P103)
 • VIAF அடையாளம் காட்டி (P214) போன்ற ஏதேனும் அதிகார கட்டுப்பாட்டு அறிக்கையையும் சேர்க்கலாம். அனைத்து அடையாள காட்டிகள் பட்டியல்

சிறந்த எடுத்துக்காட்டு உருப்படிகள்: இரவீந்திரநாத் தாகூர் (Q7241)

படைப்புகள் தொகு

விக்கித்தரவில் படைப்புகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன: படைப்பு உருப்படிகள்: பொதுவான நூல் தகவலை கொண்ட உருப்படி ஒரு விக்கிபீடியா கட்டுரை இல்லை எனினும் உருவாக்கலாம், இது பொதுவான தகவல்கள், அதிகார கட்டுப்பாடுகள் கொண்டிருக்க வேண்டும். இது பொதுவாக விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு பயன்படுகிறது (விக்கிப்பீடியாவில் ஒரு பதிப்பிற்கு கட்டுரை எழுதவில்லை)
பதிப்பு உருப்படிகள்: ஒரு நூலின் ஓரு குறிப்பிட்ட பதிப்பிற்கு (இது விக்கிமூலத்தில் உள்ள நூல்களுக்கு பொருந்தும், ஒரு பதிப்பு நூலை குறிக்கும். இது பொதுவாக ஒரு நூலை குறிக்காது).

படைப்பு உருப்படிகள் தொகு

அனைத்து படைப்பு உருப்படிகள் பயன்படுத்த வேண்டிய முக்கியமான அறிக்கைகள்:

சேர்க்க வேண்டிய பிற பொதுவான அறிக்கைகள்:

படைப்புக்குப் பொருந்தும் அதிகார கட்டுப்பாடுகள்:

பதிப்பு உருப்படிகள் தொகு

அனைத்து பதிப்புகளுக்கும் பயன்படுத்த வேண்டிய முக்கியமான அறிக்கைகள்:

சேர்க்க வேண்டிய பிற பொதுவான அறிக்கைகள்:

 • படிமம் (P18) → பொதுவக்கத்திலுள்ள கோப்பு, பதிப்பின் அட்டை அல்லது தலைப்புப் பக்கம்
 • (P955)
 • பதிப்பாசிரியர் (P98)
 • illustrator (P110)
 • தோன்றிய நாடு (P495) → பதிப்பு தோன்றிய நாடு, அசல் தவிர மற்ற நாடுகளில் வெளியிடப்பட்ட படைப்புகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்
 • படைப்பின் மொழி (P407) → இந்த பதிப்பின் மொழி, இதைக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட படைப்புகளுக்கும் பதிப்புகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
 • பதிப்பு எண் (P393) → பதிப்பு எண் (எ.கா. 1, 2)
 • மொத்த பக்கங்கள் (P1104) → மொத்த பக்கங்கள் பொதுவாக இரண்டாக பிரிக்கப்படுகிறது உரோமன் எண் (I, II, III) பக்கங்களைக் கொண்ட மொத்த பக்கங்கள், மற்றொன்று சாதாரணமாக (1, 2, 15) என்று உள்ள பக்கங்கள். இவை இரண்டும் இரண்டு அறிக்கைகளாக சேர்க்கப்பட வேண்டும். (குறிப்பு: விக்கிதரவில் உரோமன் எண் பக்கங்களை சாதாரணமாகவே குறிப்பிட வேண்டும் (மொத்தமாக IX இருந்தால் 9 குறிப்பிட வேண்டும்) காண்க: அண்ணா சில நினைவுகள்
 • விக்கிமூலம் அட்டவணை பக்க உரலி (P1957)

பதிப்புகளுக்குப் பொருந்தும் அதிகாரக் கட்டுப்பாட்டுகள்:

படைப்புகளின் மின்வருடல் செய்யப்பட்ட ஆதாரங்களின் இணைப்புகள் அல்லது அடையாளங்காட்டிகள்: (இதுவும் இதனின் பதிப்பு மின்வருடலாக இருக்க வேண்டும்)

இவற்றையும் காண்க தொகு

d:Wikidata:Wikisource