விக்கிமூலம் பேச்சு:முதற் பக்கம்/பழந்தமிழ் இலக்கியங்கள்

செவ்வியல் இலக்கியங்கள் பகுப்பு உருவாக்கக் கோரி. தொகு

வணக்கம். தமிழின் சிறப்பு செவ்வியல் இலக்கியங்கள் என்ற இலக்கிய வரிசை தான். பழந்தமிழ் இலக்கியங்கள் என்ற பகுப்பிற்குப் பதில் செவ்வியல் இலக்கியங்கள் என்ற பகுப்பின் தலைப்பில் சங்க இலக்கியங்களுக்கு முன்பாக முதலில் வைக்க வேண்டிய தமிழ் நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் தொல்காப்பியம் பொருளதிகாரம் என இது மூன்று நூல்களாக உள்ளன.\ சங்க இலக்கியங்களான பத்துப் பாட்டு, எட்டுத் தொகை -ஆகியவை முதலாக (18 நூல்களை) வைக்கலாம்.

அடுத்துச் செவ்வியல் பகுப்பில்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்(18), காப்பியங்கள் (10)(ஐம்பெரும்காப்பியங்கள் ஐஞ்சிறுங்காப்பியங்கள்), பெருங்காப்பியங்கள்(கம்பராமாயணம்,பெரிய புரானம் போன்றவை), ஆகியவற்றை வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தளத்தில்[1] இந்த வைப்புமுரை மிகச் சரியாக உள்ளது. அதையே பின்பற்றலாம்.


ரா.கார்த்திக் 06:47, 17 ஆகத்து 2022 (UTC)

சங்க இலக்கியம் வர்த்தமானன் பதிப்பகம் பற்றி தொகு

வர்த்தமானன் பதிப்பகம் பதிப்பித்த சங்க இலக்கியங்கள் 18 நூல்களுக்குமான உரை, உலகெங்கும் உள்ள வாசகர்களால் மிகச்சிறந்த உரையாகக் கருதப்படுகிறது. இந்த பதிப்பகத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு சங்கப் பாடல் எந்தச் சூழலில் பாடப்பட்டது என்பதைக் கூறி, பின்னர் அப்பாடலின் பொருளை விளக்கியுள்ளனர். மிகச் சிறந்த உழைப்பு இந்த உரை எழுதியவர்களிடம் இருந்து வெளிப்பட்டுள்ளதால் இதையே விக்கிமூலத்தில் பதிப்பிக்கலாம். மிக அதிகம் பேர் விரும்பிப் பயிலும் இந்தச் சங்க இலக்கியம் தொகுதி தற்போது எளிதில் கிடைக்காததாக உள்ளது. எனவே இப்பதிப்பகத்தின் நூல்களை விக்கிமூலத்தில் பதித்து உலக சமூகம் பயனடைய உதவ வேண்டுகிறேன். ரா.கார்த்திக் 06:59, 17 ஆகத்து 2022 (UTC)

  1. https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141
Return to the project page "முதற் பக்கம்/பழந்தமிழ் இலக்கியங்கள்".