விக்கிரம சோழன் மெய்க்கீர்த்தி
விக்கிரம சோழன் மெய்க்கீர்த்தி
தொகுமெய்க்கீர்த்தி 01
தொகு- பூமாலை மிடைந்து பொன்மாலை திகழப்
- பாமாலை மலிந்த பருமணித் திரள்புயத்
- திருநில மடந்தையொடு ஜயமக ளிருப்பக்
- கனவரை மார்வந் தனதெனப் பெற்றுத்
- திருமகளொருதனி யிருப்பக் கலைமகள்
- சொற்றிறம் புணர்ந்த கற்பின ளாகி
- விருப்பொடு நாவகத் திருப்பத் திசைதொறுந்
- திகிரியொடு செங்கோல் நடப்ப அகில
- புவனமுங் கவிப்பதோர் புதுமதி போல
- வெண்குடை மீமிசை நிழற்றக் கருங்கலி
- யொளித்துவன் பிலத்திடைக் கிடப்பக் குளத்திடைத்
- தெலுங்க வீமன் விலங்கல்மிசை யேறவுங்
- கலிங்க பூமியைக் கனலெரி பருகவும்
- ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கியும்
- வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து
- வடதிசை யடிப்படுத்தருளித் தென்றிசை
- தருமமுந் தவமுந் தானமுந் தழைப்ப
- வேதமும் மெய்ம்மையு மாதியுகம் போலத்
- தலைத்தலை சிறப்பவந் தருளி வெலற்கரும்
- போர்ப்புலி யாணை பார்த்திவர் சூட
- நிறைமணி மகுடம் முறைமையிற் சூடி
- மன்னுயிர்க் கெல்லா மின்னுயிர்த் தாய்போல்
- தண்ணளி பரப்பித் தனித்தனி பார்த்து
- மண்முழுதுங் களிப்ப மனுநெறி வளர்த்துத்தன்
- கோயிற் கொற்ற வாசல் புறத்து
- மணிநா வொடுங்க முரசுகள் முழங்க
- விசையமும் புகழும்மேன்மே லோங்க
- வாழி வாழிஇம் மாநிலங் காக்கத்
- திருமணி பொற்றோட் டெழுதுபத் தாண்டு
- வருதிறை முன்னே மன்னவர் சுமந்து
- திறைநிறைத்துச் சொரிந்த செம்பொற் குவையால்
- தன்குல நாயகன் தாண்டவம் பயிலுஞ்
- செம்பொன்னம் பலஞ்சூழ் திருமா ளிகையும்
- கோபுர வாசல் கூடசா லைகளும்
- உலகு வலங்கொண் டொளிவிளங்கு நேமிக்
- குலவரை உதைய குன்றமொடு நின்றெனப்
- பசும்பொன் வேய்ந்த பலிவளர் பீடமும்
- விசும்பொளி தழைப்ப விளங்குபொன் வேய்ந்து
- இருநிலந் தழைப்ப இமையவர் களிப்பப்
- பெரிய திருநாள் பெரும்பெயர் விழாவெனும்
- உயர்பூரட் டாதி உத்திரட் டாதியில்
- அம்பல நிறைந்த அற்புதக் கூத்தர்
- இம்பர் வாழ எழுந்தருளு வதற்குத்
- திருத்தேர்க் கோயில் செம்பொன் வேய்ந்து
- பருத்திரண் முத்தின் பயி்ல்வடம் பரப்பி
- நிறைமணி மாளிகை நெடுந்திரு வீதிதன்
- திருவளர் பெயராற் செய்துசமைத் தருளி
- பைம்பொற் குழித்த பரிகல முதலாச்
- செம்பொற் கற்பகத் தொடுபரிச் சின்னமும்
- அளவில் லாதன வொளிபெற வமைத்துப்
- பத்தா மாண்டில் சித்திரைத் திங்கள்
- அத்தம் பெற்ற ஆதிவா ரத்துத்
- திருவளர் மதியின் திரையோதசிப் பக்கத்து
- இன்ன பலவும் இனிதுசமைத் தருளி
- ஒருகுடை நிழற்கீழ்த் தலமுழுதுங் களிப்பச்
- செழியர்வெஞ் சுரம்புகச் சேரலர் கடல்புக
- அழிதரு சிங்களர் அஞ்சிநெஞ் சலமரக்
- கங்கர் திறையிடக் கன்னடர் வென்னிடக்
- கொங்க ரொதுங்கக் கொங்கணர் சாயமற்
- றெத்திசை மன்னருத் தத்தமக் கரணெனத்
- திருமலர்ச் சேவடி உரிமையி லிறைஞ்ச
- அங்கவன் மகிழுங் கங்கையொப் பாகிய
- தெரிவையர் திலகம் தியாக பதாகை
- புரிகுழல் மடப்பிடி புனிதகுண வநிதை
- திரிபுவன முழுதுடையா ளெனவுட னிருப்ப
- ஊழி அந்நெடு மாலா கத்துப்
- பிரியா தென்றுந் திருமக ளிருந்தென
- மாதர் மடமயில் பூதலத் தருந்ததி
- அரணியல் கற்பிற் றரணிமுழு துடையா
- ளிவன்திரு மார்வத் திருளொடு மிருப்பச்
- செம்பொன் வீர சிம்மா சனத்து
- திரிபுவன முழுதுடையா ளோடும்
- வீற்றிருந் தருளியகோப் பரகேசரி வர்மரான
- திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரம சோழ தேவர்க்கு யாண்டு...
மெய்க்கீர்த்தி 02
தொகு- பூமாது புணரப் புவிமாது வளர
- நாமாது விளங்க ஜயமாது விரும்பத்
- தன்னிரு பதமலர் மன்னவர் சூட
- மன்னிய வுரிமையால் மணிமுடி சூடிச்
- செங்கோல் சென்று திசைதொறும் வளர்ப்ப
- வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்ப
- கலிங்க மிரியக் கடமலை நடாத்தி
- வலங்கொ ளாழி வரையாழி திரிய
- இருசுட ரளவு மொருகுடை நிழற்ற
- விஜயாபிஷேகம் பண்ணி வீரசிம் ஹாசனத்து
- முக்கோக் கிழானடிக ளோடும்வீற் றிருந்தருளிய
- கோப்பரகேசரி வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்
- ஸ்ரீவிக்கிரம சோழ தேவர்க்கு யாண்டு...
- மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] :[[]] :[[]]