விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 13

அத்தியாயம்-13.

முப்பதாண்டுகளுக்கு அதிகமாகவே சுதந்திரத்து காகப் போராடி வந்த காங்கிரஸ், ஆங்கிலேயரின் போ கை கன்கு புரிந்து கொண்ட பிறகும் சும்மா இருக்க விரும்பவில்லே. நாட்டினரின் உள்ளத்துடிப்பை உணர்ந்த காந்திஜி தீவிரச் செயலுக்கு வழிகாட்ட ஒன்றினால்.

1942-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி பம்பாய் நகரில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியது. அசிரத்தை காட்டும் அரசாங் கத்துடன் போராடியே தீர வேண்டும். செயலாற்ற வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும்' என்று நாட்டுக்கு ஆணையிட்டார் மகாத்மா.

அன்று இரவு காரியக் கமிட்டிக் கூட்டம் முடிந்த பிறகு தலைவர்கள் ஒய்வுபெற வீடுகள் சேர்ந்தனர். அவர்கள் வெகு நேரம் தூங்கியிருக்க மாட்டார்கள். அரசாங்கத்தின் சட்டக் கைகள் அவர்களைத் தட்டி எழுப்பின. பின்னிரவு மூன்று மணிக்கு போலீஸார் காந்திஜியையும் இதர தலைவர்களையும் கைதுசெய்து எங்கே கொண்டு போய்விட்டார்கள்.

இப்படிச் செய்தால் மக்கள் பயந்து ஒடுங்கிப் போவார்கள்ந நாட்டில் அமைதி நிலவும் என்று ஆளும் இனத்தினர் நம்பினார்கள். ஆனால் அவர்கள் எதிர்பாராத விபரீத விளைவுகளே நாடெங்கும் தலைதூக்கி விட்டன.

தலைவர்கள் என்ன ஆணார்கள் அவர்களைப் போலீசார் எங்கே கொண்டு போனர்கள் ? இவ்விஷயம் எது வும் யாருக்கும் விளங்கவில்லை. திவாங்தரங்களுக்கு அனுப்பிவிட்டனர்.நாடு கடத்திக் கப்பலேற்றி விட்டனர் என்ற வதந்தி பரவியது எங்கும். இரவோடு இரவாக இவ்வளவு மர்மமாக தலைவர்களைக் கைது செய்தது அக்கிரமம் என்ற உணர்ச்சி காரணமாக நாட்டில் கோபமும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.

வெள்ளையனே, வெளியேறு என்று மகாத்மா காந்தி அருளிய மணிவாசகத்தைச் செயல் முறைக்குக் கொண்டுவந்து அவர்களை வெளியேற்ற ஆவனசெய்வோம் என்று நாட்டினர் துணிந்தனர்.அஹிம்ஸையை அந்தரத்திலேவிட்டனர்.அழிவுவேலைகளைச் செய்து களித்தனர்,

ரயில்களைக் கவிழ்த்தார்கள் ; ரயில் பாலங்களை உடைத்தார்கள் கட்டிடங்கள் பலவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினர்கள். போலீசாரைத் தாக்கி, ஆயுதங்களப் பறித்தார்கள். கொள்ளை, கொலை, தீ-நாடு முழுவதும் கோபக் கொந்தளிப்பு. ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மக்கள் கொதித்து எழுந்தால் காடு எப்படி மாறும் என்பதற்குப் பிரமாணமாக விளங்கியது இந்தியா,

ஆட்சியினர் வேடிக்கை பார்த்து நிர்பார்களா ? வெறி வேகத்தில் செயல் புரிந்தார்கள். அடக்குமுறைகளை அளவில்லாமல் கையாண்டார்கள். கிராமங்களையே சுட்டெரித்தார்கள். ஜனக் கூட்டங்கள் மீது பீரங்கிப் பிரயோகம் செய்தனர். விமானங்களிலிருந்து வெடிகுண்டுகள் வீசினர். மக்களைச் சித்திரவதை செய்தார்கள்.  வெளியே இருந்த தலைவர்கள் மக்கள் தாங்களாகவே மேற்கொண்டுவிட்ட போராட்டம் தகாத செயல் என்று எடுத்துச் சொல்லி, நாட்டில் அமைதியைப் பரப்ப அரும் பாடு பட்டார்கள். விஜயலக்ஷ்மி பண்டிட்டும் பல இடங்களுக்கு அலைந்து திரிந்து பிரசாரம் செய்தாள். அதிகார ஆணவத்தை எதிர்த்துப் பழி வாங்கும் நினைவில் எழுச்சியுற்ற மக்களிடையே, நாட்டு நலம் நாசமுறக் கூடாது என்று போதித்து வந்தாள் அவள்.

அவள் குரல் அப்போது மக்களிடையே எடுபடவுமில்லை அரசாங்கத்தினரால் போற்றப் படவுமில்லை. இரவு நேரத்தில் அவள் அயர்ந்து துங்கிக் கொண்டிருந்த வேளையில் போலீஸார் வீடு தேடிச் சென்று அவளைக் கைது செய்தனர்.

அது நிகழ்ந்தது 1942 ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி, சிறை செல்வது அவளுக்குப் புதிய விஷயம் அல்ல. தனியளான தன்னைப் பிடித்துச் செல்ல மாஜிஸ்ட்ரேட்டும், போலீஸ் அதிகாரியும், பலப்பல போலிஸ் வீரர்களும் வந்து சேர்ந்ததைக் கண்டு அதிசயித்தாள் அவள்.

மூன்று புதல்வியரில் கடைசிப் பெண் வயதில் சிறியவளாக இருந்தாள். இனி அவளை யார் கவனிப்பது என்ற கவலை தான் தாய் உள்ளத்தில் எழுந்தது. அன்னயின் மனக்குழப்பத்தை உணர்ந்து விட்டவள் போல் ரீதா பேசினாள். இந் நாட்களில் வாழ்வதே அற்புதமாக இருக்கிறது. என்னை இவர்கள் ஜெயிலுக்கு அழைத்துப் போகமாட்டார்களா என்ற எண்ணம் எனக்கு உண்டாகிறது. என்றாள் அவள். மகளின் பேச்சு தாயின் மனக் கவலையைத் துரத்தி விட்டது. ரீதாவை முத்தமிடக் குனிந்தாள் விஜயலக்ஷ்மி. ’நாங்கள் வெளியே வந்து வழி அனுப்புவோம். இதை எல்லாம் நாம் எப்படி ஏற்றுக் கொள்கிறோம் என்பதைப் போலீஸ்காரர்களும் தெரிந்து கொள்ளட்டுமே!’ என்றாள் இரண்டாவது மகள் தாரா.

மூத்த பெண் லேகா சொன்னாள் ’கவலைப்படாதே அம்மா. இவர்களை நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று.

’அருமை அம்மா, போய்வா, நமது கொடி தாழ்வுறாதபடி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று தாரா சொன்னாள்.

இளையவள் ரீதா தாயைத் தழுவிக் கொண்டு, உறுதியான குரலில் சொன்னாள்:’அம்மா, உன் உடம்பைப் கவனித்துக் கொள். நீ உள்ளே அடைபட்டுக் கிடக்கிறபோது, நாங்கள் வெளியே பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடுவோம்’.

’ஈன்ற பொழிதினும் பெரிது’ உவந்தாள் தன் புதல்வியின் வீரவாசகம் கேட்டதாய்.

அங்கு சில தினங்கள் தங்கிச் செல்ல வந்திருந்த இந்திராவும், புதல்வியரும், பணியாளரும் வழியனுப்ப விஜயலக்ஷ்மி மகிழ்ச்சியுடன் சிறைசென்றாள். இம்முறையும் அவள் நைனி ஜெயிலில் தான் இடம் பெற்றாள். முன்பு பழக்கமான அறையே இப்பொழுதும் கிடைத்தது.

சிறைவாசம் தொல்லைகள் மலிந்ததாகத்தான் இருந்தது. கோடைவெயிலின் உஷ்ணம் வேறு கஷ்டப்படுத்தியது. எனினும் அவள் அயர்வுறாது பொழுது போக்கி வந்தான்.

ஆகஸ்டு 30-ம் தேதி மலர்ந்த முகத்துடனும், மலர்மாலைகள் சுமந்த தோள்களோடும், மிடுக்காக சிறை புகுந்த மகள் லேகாவைத் தாய் காண நேர்ந்தது. முதலில் மகள் தன்னைச் சக்திக்க வருவதாக எண்ணினாள் அவள். உண்மை புரிந்ததும், ‘இச்சிறுமிக்கா சிறைவாசம்?’ என்று துடித்தது அவள் உள்ளம். பெருமிதமும் ஏற்பட்டது.

விஜயலக்ஷ்மி சிறையிலிருந்த போது மகாதேவ தேசாய் காலமான செய்தி கிடைத்தது. மிகுந்தவேதனை அடைந்தாள் அவள். அவளது வாழ்வின் பழைய கால நினைவுகள் அவள் எண்ணவெளியிலே நிழலாடின. ரஞ்சித் பற்றிமுதன் முதலில் தெசாய் அறிமுகம் செய்த சந்தர்ப்பமும் அவளுக்கு நினைவு வந்தது. உத்தம் நண்பரின் பிரிவு ரஞ்சித் பண்டிட்டுக்கு ஆற்ற முடியாத் துயரம் அளிக்கும் என்று கலங்கினாள் அவள்.

சில தினங்களிலேயே ரஞ்சித்தும் கைது செய்யப்பட்டார். அவரும் நைனி சிறையில் ஓர் புறம் பாதுகாப்பில் வைக்கப்பட்டார் இருவரும் அபூர்வமாக என்றாவது சந்திக்க அனுமதி கிடைத்து வந்தது. ஒரே கட்டிடத்தினுள் அருகருகே இருந்தும் கூட அவர்களுக்கிடையே வெகுதாரம் பரவிக் கிடந்தது போல்தான் தோன்றியது. பரஸ்பரம் புத்தகங்கள் பரிமாறிக் கொள்ள அவர்கள் சிலசமயம் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடிதத் தொடர்பு கொள்ள உரிமை இருந்ததில்லை.

6 இந்திராவும் பெரோஸ் காந்தியும் கைது செய்யப் பெற்று நைனி ஜெயிலில் நேரு குடும்ப முகாமாக மாறி விட்டது!