வினாவெண்பா

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக



உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த

தொகு

வினா வெண்பா- மூலம்

தொகு

வெண்பா 01 (நீடுமொளியும் )

தொகு

நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக் () நீடும் ஒளியும் நிறை இருளும் ஓர் இடத்துக்

கூட லரிது கொடுவினையேன்- பாடிதன்முன் () கூடல் அரிது கொடு வினையேன் - பாடு இதன் முன்

னொன்றவார் சோலை யுயர்மருதச் சம்பந்தா () ஒன்ற வார் சோலை உயர் மருதச் சம்பந்தா

நின்றவா றெவ்வாறு நீ. () நின்றவாறு எவ்வாறு நீ.



வெண்பா 02 (இருளிலொளி )

தொகு

இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி () இருளில் ஒளி புரையும் எய்தும் கலாதி

மருளி னிலையருளு மானுங் - கருவியிவை () மருளின் நிலை அருளும் மானும் - கருவி இவை

நீங்கி னிருளா நிறைமருதச் சம்பந்தா () நீங்கின் இருளாம் நிறை மருதச் சம்பந்தா

வீங்குனரு ளாலென் பெற. () ஈங்கு உன் அருளால் என் பெற.


வெண்பா 03 (புல்லறிவு )

தொகு

புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான () புல் அறிவு நல் உணர்வது ஆகா பொது ஞானம்

மல்லதில துள்ளதெனி லந்நியமாந் - தொல்லையிரு () அல்லது இலது உள்ளளது எனில் அந்நியமாம் - தொல்லை இருள்

ளூனமலை யாவா றுயர்மருதச் சம்பந்தா () ஊனம் மலையாவாறு உயர் மருதச் சம்பந்தா

ஞானமலை யாவாய் நவில். () ஞான மலை ஆவாய் நவில்.


வெண்பா 04 (கனவு)

தொகு

கனவு கனவென்று காண்பரிதாங் காணில் () கனவு கனவு என்று காண்பு அரிதாம் காணில்

நனவி லவைசிறிதும் நண்ணா - முனைவனரு () நனவில் அவை சிறிதும் நண்ணா - முனைவன் அருள்

டானவற்றிலொன்றா தடமருதச் சம்பந்தா () தான் அவற்றில் ஒன்றா தட மருதச் சம்பந்தா

யானவத்தை காணுமா றென். () யான் அவத்தை காணுமாறு என்.


வெண்பா 05 (அறிவறிந்த )

தொகு

அறிவறிந்த தெல்லா மசத்தாகு மாயின் () அறிவு அறிந்தது எல்லாம் அசத்து ஆகும் ஆயின்

குறியிறந்த நின்னுணர்விற் கூடா - பொறிபுலன்கள் () குறி இறந்த நின் உணர்வின் கூடா - பொறி புலன்கள்

தாமா வறியா தடமருதச் சம்பந்தா () தாமா அறியா தட மருதச் சம்பந்தா

யாமா ரறிவா ரினி. () யாம் ஆர் அறிவார் இனி.



வெண்பா 06 (சிற்றறிவு )

தொகு

சிற்றறிவு முற்சிதையிற் சேர்வாரின் றாஞ்சிறிது () சிற்றறிவு முன் சிதையின் சேர்வார் இன்றாம் சிறிது

மற்றதனில் நிற்கிலருள் மன்னாவாந்- துற்றமுகில் () மற்று அதனில் நிற்கில் அருள் மன்னாவாம்- துற்ற முகில்

மின்கொண்ட சோலை வியன்மருதச் சம்பந்தா () மின் கொண்ட சோலை வியன் மருதச் சம்பந்தா

வென்கொண்டு காண்பே னியான். () என் கொண்டு காண்பேன் யான்.


வெண்பா 07 (உன்னரிய )

தொகு

உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்கா லொண்கருவி () உன் அரிய நின் உணர்வது ஓங்கியக்கால் ஒண் கருவி

தன்னளவு நண்ணரிது தானாகும் - என்னறிவு () தன் அளவும் நண் அரிது தானாகும் - என் அறிவு

தானறிய வாரா தடமருதச் சம்பந்தா () தான் அறிய வாராது தட மருதச் சம்பந்தா

யானறிவ தெவ்வா றினி. () யான் அறிவது எவ்வாறு இனி.


வெண்பா 08 (அருவேல் )

தொகு

அருவே லுருவன் றுருவே லருவன் () அருவேல் உரு அன்று, உருவேல் அரு அன்று

றிருவேறு மொன்றிற் கிசையா - வுருவோரிற் () இருவேறும் ஒன்றிற்கு இசையா - உரு ஓரில்

காணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடற் () காணில் உயர் கடந்தைச் சம்பந்தா கண்ட உடல்

பூணுமிறைக் கென்னாம் புகல். () பூணும் இறைக்கு என் ஆம் புகல்.

வெண்பா 09 (இருமலத்தார்க் )

தொகு

இருமலத்தார்க்கில்லை யுடல்வினையென் செய்யு () இரு மலத்தார்க்கு இல்லை உடல் வினை என் செய்யும்

மொருமலத்தார்க் காரா யுரைப்பேன் - திரிமலத்தா () ஒரு மலத்தார்க்கு ஆராய் உரைப்பேன் - திரி மலத்தார்

ரொன்றாக வுள்ளா ருயர்மருதச் சம்பந்தா () ஒன்றாக உள்ளார் உயர் மருதச் சம்பந்தா

வன்றாகி லாமா றருள். () அன்று ஆகில் ஆமாறு அருள்.


வெண்பா 10 (ஒன்றிரண்டாய் )

தொகு

ஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாக () ஒன்று இரண்டாய் நின்று ஒன்றில் ஓர்மையதாம் ஒன்றாக

நின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் - துன்றிருந்தார் () நின்று இரண்டாம் என்னில் உயிர் நேராகும்- துன்று இருந்தார்

தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி () தாங்கிய வாழ் தண் கடந்தைச் சம்பந்தா யான் ஆகி

வோங்கியவா றெவ்வா றுரை. () ஓங்கியவாறு எவ்வாறு உரை.


வெண்பா 11 (காண்பானுங் )

தொகு

காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு னீத்துண்மை () காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்து உண்மை

காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானுங் () காண்பார்கள் நல் முத்தி காணார்கள்- காண்பானும்

காட்டுவதுங் காண்பதுவுந் தண்கடந்தைச் சம்பந்தன் () காட்டுவதும் காண்பதுவும் தண் கடந்தைச் சம்பந்தன்

வாட்டுநெறி வாரா தவர். () வாட்டும் நெறி வாராதாவர்.


வெண்பா 12 (ஒன்றி )

தொகு

ஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலு () ஒன்றி நுகர்வது இவன் ஊணும் உறு தொழிலும்

மென்று மிடையி லிடமில்லை - யொன்றித் () என்றும் இடையில் இடம் இல்லை - ஒன்றித்

தெரியா வருள்மருதச் சம்பந்தா சேர்ந்து () தெரியா அருள் மருதச் சம்பந்தா சேர்ந்து

பிரியாவா றெவ்வாறு பேசு. () பிரியாவாறு எவ்வாறு பேசு.


வெண்பா 13 (அருளாலுணர் )

தொகு

அருளா லுணர்வார்க் ககலாத செம்மைப் () அருளால் உணர்வார்க்கு அகலாத செம்மைப்

பொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா () பொருள் ஆகி நிற்கும் பொருந்தித் - தெருளா

வினாவெண்பா வுண்மை வினவாரே லூமன் () வினா வெண்பா உண்மை வினவாரேல் ஊமன்

கனாவின்பா லெய்துவிக்குங் காண். () கனாவின் பால் எய்துவிக்கும் காண்.


உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த வினாவெண்பா முற்றும்

பார்க்க:

தொகு
சிவஞானபோதம்
உண்மைநெறிவிளக்கம்
திருவருட்பயன்
இருபாஇருபது
உண்மைவிளக்கம்
சித்தாந்தச் சாத்திரங்கள்
"https://ta.wikisource.org/w/index.php?title=வினாவெண்பா&oldid=1731321" இலிருந்து மீள்விக்கப்பட்டது