வீரராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தி
வீரராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தி
தொகு
- திருவளர் திரள்புயத் திருநில வலயந்
- தன்மணிப் பூணெனத் தயங்கப் பன்மணிக்
- கொற்றவெண் குடைநிழற் குவலயத்துயிர்களைப்
- பெற்ற தாயினும் பேணி மற்றுள
- அறைகழ லரையர்தன் னடிநிழ லொதுங்க
- உறைபிலத் துடைகலி யொதுங்க முறைசெய்து
- விரைமலர்த் தெரியல் விக்கலன் றன்னொடு
- வரிசிலைத் தடக்கை மாசா மந்தரைக்
- கங்க பாடிக் களத்திடை நின்றுந்
- துங்க பத்திரை துரத்தி யங்கவர் (10)
- வேங்கைநன் னாட்டிடை மீடுமவர் விட்ட
- தாங்கரும் பெருவலித் தண்டுகெடத் தாக்கி
- மாதண்ட நாயகன் சாமுண்ட ராயனைச்
- செற்றவன் சிரத்தினை யறுத்து மற்றவ
- னொருமக ளாகிய விருகையன் றேவி
- நாகலை யென்னுந் தோகையஞ் சாயலை
- முகத்தொடு மூக்குவே றாக்கிப் பகைத்தெதிர்
- மூன்றாம் விசையனு மேன்றெதிர் பொருது
- பரிபவந் தீர்வனெனக் கருதிப் பொருபுனற்
- கூடல் சங்கமத் தாகவ மல்லன் (20)
- மக்க ளாகிய விக்கலன் சிங்கண
- னென்றிவர் தம்மொடு மெண்ணில்சா மந்தரை
- வென்றடு தூசிமுனை விட்டுத் தன்றுணை
- மன்னருந் தானும் பின்னடுத் திருந்து
- வடகட லென்ன வகுத்தவத் தானையைக்
- கடகளி றொன்றாற் கலக்கி யடல்பரிக்
- கோசலைச் சிங்கனைக் கொடிபட முன்னர்த்
- தூசிவெங் களிற்றொடுந் துணித்துக் கேசவ
- தண்ட நாயகன் தார்க்கேத் தரையன்
- திண்டிறல் மாராயன் சினப்போத் தரைய (30)
- னிரேச்சய னிகல்செய்பொற் கோதைமூ வத்தியென்
- றார்த்தடு துப்பி லநேகசா மந்தரைச்
- சின்ன பின்னஞ் செய்து பின்னை
- முதலி யான மதுவண னோட
- விரித்த தலையோடு விக்கல னோடச்
- செருத்தொழி லழிந்து சிங்கண னோட
- அண்ணல் முதலிய அனைவரு மமர்போர்ப்
- பண்ணிய பகடிழிந் தோட நண்ணிய
- ஆகவ மல்லனு மவர்க்கு முன்னோட
- வேகவெங் களி்ற்றினை விலக்கி வாகைகொண் (40)
- டங்கவர் தாரமு மவர்குல தனமுஞ்
- சங்குந் தொங்கலுந் தாரையும் பேரியும்
- வெண்சா மரையு மேக டம்பமும்
- சூகரக்கொடியும் மகர தோரணமும்
- ஒட்டக நிரையு முலோக சனமும் (45)
- புட்பகப் பிடியும் பொருகளிற் றீட்டமும்
- பாய்பரித் தொகையொடும் பறித்துச் சேயொளி
- வீரசிங் காதனம் பார்தொழ வேறி
- எழிறர வுலக முழுதுடை யாளொடும்
- விசையமண மகுடமேய்ந்து எழில்கொள் (50)
- தத்துமாப் புரவிப் பொத்தப்பி வேந்தனை
- வாரணை வன்கழற் கேரளன் றன்னைத்
- தார்சன நாதன் றம்பியைப் போர்க்களத்
- தலங்கல்சூழ் பசுந்தலை யரிந்து பொலங்கழல்
- தென்னவன் ஸ்ரீவல்லவன் மகன் சிறுவன்
- மின்னவில் மணிமுடி வீரகேசரியை
- மதவரை யொன்றா லுதைப்பித் துதகையிற்
- கேரளர் தங்குலர செங்கீரை யோடும்
- வேரறப் பறிந்தோடி மேல்கடல் வீழ
- வாரண மருகுளி செலுத்தி வாரியி (60)
- லெண்ணருங் களிற்றின் இரட்டரைக் கவர்ந்த
- கன்னியர் களிற்றொடுங் கட்டிப் பண்ணுப்
- பிடியொடு மாங்கவர் விடுதிறை தந்த
- வேழ நிரைகொண்டு சூழி புனல்
- கொண்டாற் றிறவர் குறித்த வெம்போரில்
- தண்ட நாயகர் தம்மில் திண்டிறல்
- மல்லியண் ணனையு மஞ்சிப் பய்யனையும்
- பில்குமதக் களிற்றுப் பிரமதே வனையும்
- தண்டா ரசோகையன் தன்னையுந் தி்ண்டிறற்
- சத்தியண் ணனையுஞ் சந்திவிக் கிரகப் (70)
- பக்தி யண்ணன் றன்னையு மத்தகு
- தேமரு தெரியல் வீமயன் றன்னையுஞ்
- மாமதி வங்கா ரனையும் நாமவேற்
- கங்கனை நுளம்பனைக் காடவர் கோனை
- வம்புமத யானை வைதும்ப ராயனை ()
- யிருந்தலை யரிந்து பெரும்புனற் றானாது
- கங்கை மாநகர் புகுந்தபின் திங்களின்
- வழிவரு சளுக்கியிப் பழியொடு வாழ்வதிற்
- சாவது சால நன்றென் றேவமுற்
- றுன்னிய சிந்தைய னாகி முன்னம் (80)
- புதல்வருந் தானுமுதுகிட் டுடைந்த
- கூடலே களமெனக் குறித்துக் கூடலில்
- வாரா தஞ்சினர் மனனரலலர்
- போர்ப்பெ ரும்பழிப் புரட்ட ராகவென்
- றியாவரு மறிய வெழுதிய சபத ()
- மேவரு மோலை விடையொடுங் கொடுத்து
- இரட்ட பாடிப் புரட்டரில் மேதகு
- கங்கா கேத்தனை யேவ ஆங்கவன்
- வந்தடி வணங்கி வாசக முரைத்தலும்
- சிந்தையு முகமுந் திருப்புய மிரண்டும் (90)
- ஏந்தெழி லுவகையோ டிருமடங்கு பொலியப்
- போந்தப் போர்க்களம் புகுந்து கரந்தையில்
- வல்லவர் கோனை வரவு காணாதவன்
- சொல்லிய நாளின் மேலுமோர் திங்கள்
- பார்த்தினி திருந்த பின்னைப் பேர்த்தவன் ()
- கால்கெட வோடி மேல்கட லொளித்தலுந்
- தேவ நாதனுஞ் சித்தியுங் கேசியும்
- மூவருந் தனித்தனி முதுகிடப் பாவரும்
- இரட்ட பாடி ஏழரையிலக்கமும்
- முரட்டொழி லடக்கி முழங்கெரி மூட்டி (100)
- வெங்கதப் புலியேறு வியந்து விளையாடத்
- துங்கபத் திரைக்கரைச் செயபத் திரத்தூண்
- நானிலம் பரச நாட்டி மேனாள்
- வந்தவப் புரட்டனை வல்லவ னாக்கிச்
- சுந்தர கண்டிகை சூட்டியக் குந்தளத்
- தரசனும் மக்களும் ஐம்மடி யஞ்சித்தன்
- புரசை யானைப் புழைக்கையிற் பிழைத்திவ்
- வுலகெலா மறிய ஓடிய பரிசொரு
- பலகையிற் பழுதற எழுதிய பின்னை
- சார்த்தின வுரையுஞ் சளுக்கி பதமேற்ற (110)
- பூத்தள மாவொடு புட்டில் பேர்த்து
- தாம்கைக் கொண்ட வேங்கைநன் னாடு
- மீட்டுக் கொண்டலான் மீள்கிலங் கேட்டுநீ
- வல்ல னாகில் வந்துகாக் கென்று
- சொல்லெனச் சொல்லிய போக்கி எல்லையங்
- கடுத்தவத் தானை எழில்விசய வாடையோ
- டடுத்த பேராற்றில் வந்து தடுத்த
- சனநாதனையுந் தண்டநா யகனாம்
- இனமார் கடக்களிற் றிராசமய் யனையும்
- திப்பர சனையு முதலாக வுடைய (120)
- வப்பெருஞ் சேனையை யடவியிற் பாய்ச்சிக்
- கோதா விரியில்தன் போதக நீருணக்
- கலிங்க மேழுங் கடந்த புலிவலம்
- பொறித்த விமய மகேந்திரத் தளவும்
- மேவருந் தானைத் தாவடி செலுத்தி (125)
- வேங்கை நன்னாடு மீட்டுக் கொண்டுதன்
- பூங்கழற் கடைக்கலம் புகுந்த படைக்கலத்
- தடக்கை விசயா தித்தற் கருளி
- இசைகொடு மீண்டுவிட் டருளி யிகலிடைப்
- பூண்டசெயத் திருவொடுங் கங்காபுரி புகுந்தருளி (130)
- அங்கே ராசாதி ராசன் ராசராசனெனத்
- தராபதி யராகத் தமனியத் தியற்றி
- அப்பதி மன்ன ரடிதொழு தேத்த
- இனமணிப் பீடத்திருத்தி முனையிடை
- வேங்கை நன்னாட் டிடைக் கொண்ட
- இருநிதிப் பிறக்கும் வரிசையிற் காட்டி
- ஆழியு நிகளமும் கழற்றி ஆங்கவர்
- வாழிய விரதமு மாற்றி ஈழத்
- தலைகட லடையாது பலகலஞ் செலுத்தி
- மாப்பெருந் தானை ஏற்ற காப்புடைக் (140)
- கடல்வளை யரணத்து வெல்சமந் தொடங்கியச்
- சிங்களச் சேனை மங்கப் பைங்கழல்
- குருகுலத் தரையனு முருமெனப் பொருசினத்தால்
- சாமந்தனும் பட்டுவிழக் கெட்டுடைந் தாற்றாதோர்
- ஓசைத் தரையி னோடத் தராபதி
- விசைய பாகுவுந் திசைகெட ஓட
- மற்றவன் தேவியைப் பற்றி வென்று
- ... முதலாகிய அளப்பருங் குலதனம்
- மணியின முடியொடு வாரித் திணிமதில்
- இலங்கயுந் தனதே யாக்கித் தெங்காகந் (150)
- தாண்டிக் கொண்டையில் மீண்டுமச் சளுக்கி
- பண்டையில் இரட்டிப் பகட்டொடும் விடு...
- ... தடுத்து கண்டாரில்
- மதியாகையன் மாமரயன் மநுமக் கண்டயன்
- கட்டங்கிள...க் கூற்றுகவதி கைக்காமயன் ()
- ... கொண்டயன் ஆச்சீதரன்
- பற்கொல்லு...முயட்டிக்கோ... யன் முதுலினர்
- மதமழைப் பொருமிடி முதுகிட்டு வாசியோடக்
- கோ... ஓட்டுமடையன் முதலினர்பாத சாமந்தரோடு
- ஐங்களி றிழந்தோட ஆடற்புரவிளங்க கரியு (160)
- அரிவையர் குழாத்தொடு மகப்படப்பிடித்துப்
- பண்டு போலப் பரணியுங் கொண்டு
- தண்டா லமைய துன்னமா ராயன்
- தானுமப் பாகாகன கேசவன் ....
- யோதையும் பதாகின் இடந்தங்கு சிங்கணன் ()
- ... ... .... ....
- சோழிய வரையனென் றேழ்பரி யானை
- மிக்குறு மந்தர பூச...
- புறக்கிகல் புலிசூட்டுக் கல்லில் செயத்தம்பம்
- நாட்டித் தெ... தன்முதல் ... (170)
- .... சனைக் கலிங்க
- மிடையப் படைக்கட லேவி வடதிசை
- சக்கரக் கோட்டத்து மிக்குடன் றெழுந்த
- சளுக்கியன் றானையைக் கனலெரி நூறிச்
- சோனய்ய நகர்சிலைக் சோமயன் எறியமன் ()
- வாமவேல் ஆதித்த பன்மன் றாமிவர்
- குறைத்தலைக் குழாத்தொடுங் குனிப்ப தறைப்ப...
- ஆதச்சப.. ... மலியும் சாகயன்னும்
- வச்சிரப் பைம்பூண்ம... நுமனும்
- வைதும்பனுந் தேவ நாதனுந் தேவிகொ (180)
- ...ண்ண கடமெட்டும்
- பகுதியு மொட்டகத் தொகுதியும் பரிகலப்
- பரிசந்திப் பகுதியும் வரிசையில் கொள்ளையில்
- கூ.... பத்துள்ளழிந் தோடு...
- நாதன்தேவி காவியில் வாளி ()
- மண்ணடுங்க...ண் காயப்பையுந் தம்பியும்
- விச்சத... முதல் தும்பயவதி குழுந்
- தோகைய ரீட்டமு மாக்களத் தகப்படப்
- பிடித்து தி... குற்ற...லமையன் மக்களை
- ஒதுக்கி எல்லை கடந்து நிலையிட்டுக் (190)
- களகாப்பிலி யிருதற் கிடந்த வடதிசை
- இமயத் தொடுங் கிடந்த சேதுவரம் பாகச்
- செங்கோல் செலுத்தி...
- வேத நீதியை விளக்கி மீதுயர்
- வீர்த் தணிக்கொடி தியாகக் கொடியொடும் (195)
- ஏற்பவர் வருகென்று நிற்பக் கோத்தொழில்
- உரிமையி னெய்தி அரைசுவீற் றிருந்து
- மேவரு மனுநெறி விளக்கிய கோவிராசகேசரி வர்மரான
- உடையார் ஸ்ரீவீர ராசேந்திர தேவர்க்கு யாண்டு...