24. குன்றக் குரவை

சிலப்பதிகாரம் தொகு

வஞ்சிக் காண்டம் தொகு

24. குன்றக் குரவை தொகு

1. உரைப்பாட்டுமடை
குருவியோப்பியுங் கிளிகடிந்துங் குன்றத்துச்சென்று வைகி
அருவியாடியுஞ் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேமுன்
மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே
மணமதுரையோ டரசுகேடுற வல்வினை வந்துருத்தகாலை /5/
கணவனையங் கிழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்
என்றலு மிறைஞ்சியஞ்சி யிணைவளைக்கை யெதிர்கூப்பி
நின்ற வெல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து
குன்றவருங் கண்டுநிற்பக் கொழுநனொடு கொண்டுபோயினார்
இவள்போலு நங்குலக்கோ ரிருந்தெய்வ மில்லையாதலின் /10/
சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே
நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே /15/
தொண்டகந் தொடுமின் சிறுபறை தொடுமின்
கொடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின் /20/
ஒருமுலை யிழந்த நங்கைக்குப்
பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே.


2. கொளுச்சொல்
ஆங்கொன்று காணாய் அணியிழாய் ஈங்கிதுகாண்
அஞ்சனப் பூழி அரிதாரத் தின்னிடியல்
சிந்துரச் சுண்ணஞ் செறியத்தூய்த் தேங்கமழ்ந்து
இந்திர வில்லின் எழில்கொண்டு இழுமென்று
வந்தீங்கு இழியு மலையருவி யாடுதுமே.
3.
ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி
அஞ்சலோம்பு என்று நலனுண்டு நல்காதான்
மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே.
சிறைப்புறம்
4.
என்றொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைக்
கற்றீன்றி வந்த புதுப்புனல்
கற்றீன்றி வந்த புதுப்புனல் மற்றையார்
உற்றாடின் நோந்தோழி நெஞ்சன்றே.
5.
என்னொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைப்
பொன்னாடி வந்த புதுப்புனல் மற்றையார்
முன்னாடி னோந்தோழி நெஞ்சன்றே
6.
யாதொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைப்
போதாடி வந்த புதுப்புனல்
போதாடி வந்த புதுப்புனல் மற்றையார்
மீதாடின் நோந்தோழி நெஞ்சன்றே.
பாட்டுமடை
7.

உரையினி மாதராயுண்கண் சிவப்பப்

புரைதீர் புனல்குடைந்து ஆடினோம் ஆயின்
உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக்
குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழி
"https://ta.wikisource.org/w/index.php?title=24._குன்றக்_குரவை&oldid=11184" இலிருந்து மீள்விக்கப்பட்டது