4.கடலாடு படலம்

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் தொகு

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் தொகு

ஓர் அங்கதக் காவியம் தொகு

நேர்ந்த வெல்லாம் நெடுநா ளாகியும்
நெஞ்சைவிட் டின்னும் நீங்க வில்லையே!
இவற்றை
இறந்து போகுநாள் அன்றி இடையில்
மறந்து போய்விட மருந்து இல்லையே!
சென்ற,
ஆடி மாதம் அமாவாசை யன்று
குடும்பத் தோடு குமரித் துறையில்
தீர்த்த மாடச் சென்று, நாங்கள்
பட்ட பாடும் பரிசு கேடும்
மருமக்கள் தாயமுறை-விளக்கம்

“மருமக்கள் தாய முறைப்படி ஒருவரின் உடைமைகள், அவருக்குப்பின் அவருடைய மக்களைச் சாராமல், அவருடன் பிறந்த சகோதரிகளுடைய ஆண்மக்களில் மூத்தவனைச் சாரும். சொத்தில் உரிமையை வைத்திருந்தவர் ‘காரணவர்’ என்றும், அவருக்குப்பின் அவ்வுரிமையை அடையும் மருமகன் ‘அனந்தரவன்’ என்றும் அழைக்கப்பட்டனர். காரணவர் இறந்தபின், அவரது மனைவி மக்களுக்கு அவ்வீட்டில் ஒரு உரிமையும் இல்லை. அவள் தன்மக்களுடன் பிறந்த வீட்டுக்குச் சென்றாக வேண்டிய சூழ்நிலை அன்று இருந்தது. அனந்தரவன் மனம் உவந்து கொடுக்கும் ‘உகந்துடைமையால்’ அவர் வயிறு வளர்ப்பர். ஆனால், பெரும்பாலும் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காமலிருந்தது. இம்முறையால் வழக்குகள் மலிந்தன. பலதார மணமும், மாதரை இழிவுபடுத்தும் நிலையும் சமூகத்தில் தோன்றின. சமுதாயத்தில் கொடுமைகள் மலிந்தன.”
-முனைவர் வை.கிருஷ்ணமூர்த்தி, 2007.

சொல்லி முடியுமோ! சொல்லி முடியுமோ!
கரையில் தர்ப்பணக் கடனெலாம் முடித்து,
நீரில் இறங்காது நின்றனர் கணவர்.
நின்றனர் நின்றனர் நெடிது நின்றனர்,
கண்டவர், ‘இதற்கென் காரணம்’ என்றனர்.


அவரும்,
ஏக காலத் திவர்களை எல்லாம்
அங்கை பிடித்துநீர் ஆடு தற்குதான்
பன்னிரு கரத்துப் பரமன் அல்லவே,
இருபது கரத்து இராக்கதன் அல்லவே, (20)
ஆயிரங் கரத்தவ் அண்ணலும் அல்லவே!
என்று பலபல சொல்லி இறுதியில்
மணந்த முறையாய் மனைவிய ரெங்களைத்
தனித்தனி யாகத் தடங்கை பற்றிக்
கடல்நீ ராடினர், கதையிது பெரிதே!
இங்ஙனம்,
ஐந்து முறைநீ ராடிவந்த தனால்
ஐயோ! அவரும் அறுபது நாள்விடாச்
சுரத்தில் விழுந்து துன்பம் அடைந்தனர்,
அடையவே,
ஏட்டைத் திருப்பித் திருப்பி யிருந்தும்
பாட்டைப் பாடிப் பாடி யிருந்தும்
நாட்டு வைத்தியர் நாளைக் கடத்தினர்.
முடிவில்,
மிஷியன் தெரசர், மிகத்தய வுள்ளவர்,
பொறுமை நல்வகைப் புண்ணிய முள்ளவர்,
இறைவன் அடிகள் இதயத் துள்ளவர்
வந்தொரு வாரம் மருந்து கொடுத்துக்
கணவரை மீட்டிஎம் கைகளி லாக்கினர்.
இவர்,
காட்டை வெட்டிக் கஷாய மிடவோ
கடலைக் குறுக்கிக் குடிநீர் காய்ச்சவோ
மலையை யிடித்துச் சூரணம் வைக்கவோ
சொல்லி, எங்களைத் தொந்தரை செயவிலை,
அன்றியும்,
பணமோ காசோ பாதிவெற் றிலையோ
எமக்குச் செலவுகள் ஏற்பட் டதுமிலை!
இவ்வறம்,
வையகத் தென்றும் வளர்க! வளர்கவே!
வையகத் தென்றும் வளர்க! வளர்கவே! (50)


நான்காவது கடலாடு படலம் முற்றியது

பார்க்க தொகு

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
1.குலமுறை கிளத்துப் படலம்
2.மாமி அரசியற் படலம்
3.கேலிப் படலம்
5.பரிகலப் படலம்
6.நாகாஸ்திரப் படலம்
7.கருடாஸ்திரப் படலம்
8.வாழ்த்துப் படலம்
9.கோடேறிக் குடிமுடித்த படலம்
10.யாத்திரைப் படலம்
11.கும்பியெரிச்சல் படலம்
"https://ta.wikisource.org/w/index.php?title=4.கடலாடு_படலம்&oldid=452321" இலிருந்து மீள்விக்கப்பட்டது