Siva Temple Architecture etc./சிவாலயங்களில் கல் வெட்டுகள்
சிவாலயங்களில் கல் வெட்டுகள்
மிகவும் புராதனமான சிவாலய கல் வெட்டுகள் பூர்வீக பல்லவ கிரந்த எழுத்துகளில் வெட்டப்பட்டனவாம் :- உதாரணமாக மஹாபலிபுரத்து கோயில்களிலுள்ள கல் வெட்டுகளைக் கூறலாம்.
பிறகு அவைகள் பெரும்பாலும் கிரந்த எழுத்துகளிலும் தமிழ் எழுத்திகளிலும் உள்ளன ; தெலுங்கு தேசத்து சிவாலயங்களில் தெலுங்கிலும் மைசூர் முதலிய இடங்களில் கன்னட எழுத்துகளிலும் உள்ளன, பெரும்பாலும்.
கல்வெட்டிகளில் மிகவும் பழய தமிழ் எழுத்துகளுக்கு வட்டெழுத்து என்று பெயர். பெரும்பாலும் வட்டவடிவமாக இருக்கிறபடியால் இவைகளுக்கு அப்பெயர் வந்திருக்கலாம்.
பிற்காலத்திய தமிழ் கல் வெட்டுகள் தமிழிலேயே இருந்த போதிலும், "ஸ்வஸ்தி ஸ்ரீ" என்று கிரந்த எழுத்துகளில் ஆரம்பிக்கின்றன.
இக்கல் வெட்டுகள் முக்கியமாக அந்தந்த கோயில்களுக்கு அரசர்கள் முதலியோர் தானம் செய்த நிலங்கள், ஆபரணங்கள், தீபக் கட்டளைகள் முதலியவற்றைக் குறிக்கும். இவைகள் பெரும்பாலும் கோயில் கர்ப்க் கிரஹத்தின் வெளிப்புரம் வெட்டப்பட்டிருக்கும் ; சில தூண்கள், மண்டபங்கள், பக்க சுவர்கள் முதலிய இடங்களிலும் உண்டு, இக்கல் வெட்டுகளின் எழுத்துகளின் மாதிரியைக்கொண்டு, கோயில்களின் காலத்தை ஒருவாறு நாம் கணிக்கலாம்.
இதைப்பற்றி இன்னும் அறிய விரும்புவோர் டாக்டர் பர்னல் என்பவர் அச்சிட்டுள்ள "பேலியாக்கரபி" என்னும் புஸ்தகத்தில் கண்டுகொள்க.