கந. புல்லி தமிழகத்தின் வடவெல்லையாக விளங்கும் வேங்கடத் தையும், அவ்வேங்கடத்தைச் சூழ உள்ள நாடுகளேயும் ஆண்டிருந்தவன் புல்லி. புல்லி ஆண்டிருந்த நல்ல நாட் டைக் கடந்தால் வடுகு மொழி வழங்கும் வடுகர்நாடு வந் துறும் எனத் தெரிவதால், தமிழகத்தின் வடவெல்லையைக் காத்து கின்றவன் இப்புல்லி எனல் பொருந்தும். 'புடையலம் கழற்கால் புல்லி குன்றத்து நடையரும் கானம் விலங்கி, நோன்சிலேத் தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர் பிழியார் மகிழர் கவிசிறந்து ஆர்க்கும் மொழி பெயர் தேஎம்.” (அகம்: உகடு) புல்லி, கள்வர் என்ற இனத்தாரின் தலைவனுவன் ; சங்ககாலத்திற்குப் பிறகு, கமிழகத்து அரசியல் அமை தியை அழித்து, போாசுகளேயெல்லாம் பாழாக்கிப் பெருங் கேடு விளைத்து வந்தாராய களப்பாளர் என்ற இனத்தார், புல்லி பிறந்த கள்வர் குலத்தாரே எனக் கூறுவர் சில ஆராய்ச்சியாளர், தென்னவர் என அழைக்கப்படுவாராய பாண்டியர் கள்வர் தலைவராவர் என்றும், அப்பாண்டியர் படைக்குப் பயன்பெறும் யானேகள் எல்லாம், கள்வர் பெருமகனய புல்லி வாழும் வேங்கடத்தினின்றே வந்தன என்றும், புல்லியின் வரலாறுகளை விளங்க உரைக்கும் புலவர் மாமூலனர் கூறவதால், புல்லி, யாதோ ஒருவகை யால், பாண்டியர் குலத்தோடு தொடர்புடையணுதல் வேண்டும் எனத் தெரிகிறது. -- கேழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம்.” (அகம்: சுக) "ஆகொள் மூதார்க் கள்வர் பெருமகன் ,
பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/73
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை