அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/அகில வளமை
- கயிலை வளமை கட்டுரைக்கக் கூடாது
- அகில வளமை அருளக்கேள் அம்மானை
- தேவாதி தேவர் திருக்கூட்டமாய் இருக்க
- மூவாதி மூவர் மிக்கஒரு மிக்கஒரு
- சிங்காசனத்தில் சிறந்து இருக்கும் வேளையிலே
- மங்காததேவி மாது திரு இலட்சுமியாள்
- ஈரேழு உலகும் இரட்சித்த உத்தமியாள்
- பார் ஏழும் படைத்த பரமதிரு லட்சுமியாள்
- நன்றாய் எழுந்திருந்து நாராயணர் பதத்தை
- தெண்டனிட்டு இலட்சுமியும் செப்புவாள் அம்மானை
- தேவரீர் என்னைத் திருக்கல்யாணம் முகித்துக்
- கோவரிக் குண்டக் குடியிருப்பிலே இருத்திப்
- போவது என்ன புதுமை எனக்கறியத்
- தேவரீர் நீர்தான் செப்பிட்டீர் என்றுரைத்தாள்
- பின்னும் அந்த இலட்சுமியாள் பெருமாள்தமைத் தொழுது
- என்றும் இருக்க இறவாது இருப்போனே
- ஆதியால் சூச்சம் அளவெடுக்காக் கூடாது
- நாதியாய் நின்ற நாராயணப் பொருளே
- தேவாதிக்கு எல்லாம் திருமுதலாய் நின்றோனே
- மூவாதிக்கு எல்லாம் முதன்மையாய் நின்றோனே
- உமக்கும் எதிரி உலகமதில் உண்டோகாண்
- தமக்கும் எதிரி வந்த தன்மை மிகஉரையும்
- யுகத்துக்குகம் பிறந்து உலகிடத்திலே இருக்க
- அகத்து வந்த ஞாயம் அருளுவீர் எம்பெருமாள்
- என்று திருவும் ஈதுரைக்க மாயவரும்