அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/கந்தன் அவதாரம்
- ஆறுமுகமாய் ஆயனளவிடவே
- கூறிடவேசத்திதனைக் கொண்டார்வேலாயுதமாய்
- நல்லசிவனாரை நந்தீசுரராக்கி
- வல்லபிலமுள்ள வாய்த்திக்கெட்டிலுள்ள
- பாலரைவீரர்களாய்ப் பண்ணினாரெம்பெருமாள்
- வாலமுள்ளசன்னாசி மாரைப்பெருப்படையாய்
- கந்தனெனநாமங் கனத்தசடையாண்டியுமாய்
- கொந்துகொந்தாய் பீற்றைக்கூறைமிகவணிந்து
- வேலுமிகப்பிடித்து வெண்ணீறுமேதரித்து
- நாலுரண்டுசிரசில் நல்லருத்திராச்சமிட்டு
- பத்துரண்டுகாதில் பைம்பொன்னாச்செம்பணிந்து
- முத்திரிகளிட்டுக்கந்தப் பொக்கணங்கள்தோழிலிட்டு
- சன்னாசிபோலே தானடந்தெம்பெருமாள்
- நன்னாதானாவெனவே நாலஞ்சிகவிதான்படி
- வந்துஒருமலைபோல் வாய்த்தகூடாரமிட்டு