அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/காப்பு
- ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
- காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
- ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
- நாராயணர்பாதம்நாவினில் பாண்டவர்தமக்காய் தோன்றி
- பகைதனைமுடித்துமாயோன் வீன்றியகலியன்வந்த
- விசனத்தால் கயிலையேகிச் சான்றவர் தமக்கயிந்த
- தரணியில் வந்தஞாயம் ஆண்டவர் அருளிச் செய்ய
- அம்மானை யெழுதலுற்றேன் சிவமேசிவமேசிவமணியே
- தெய்வமுதலே சிதம்பரமே தவமே தவமே தவக்கொழுந்தே
- தாண்டவசங்கராத்தமியே யெங்களுடபவமேபவமே
- பலநாளுஞ்செய்த பவமறுத்துன்னகமேவைத்
- தெங்களையாட்கொள்வாய் சிவசிவசிவசிவ
- அரகரா அரகரா அலையிலேதுயிலாதிவராகவா
- ஆயிரத்தெட்டாண்டினிலோர்பிள்ளை சிலையிலே பொன்மகர
- வயிற்றினுள்செல்லப்பெற்று திருச்சம்பதி தனில்
- முலையிலேபொன்மகரப்பாலை உமிழ்ந்துபின் னுற்றதெட்சணம்
- மேதிலிருந்துதான் உலகில்சோதனைபார்த்தவர்
- வையிந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே
- திருமொழிசீதையாள்க்கு சிவதலம்
- புகழவெங்குமொருபிள்ளை உருவாய்த்தோன்றி
- யிகபரசோதனைகள்பார்த்து திருமுடிசூடி தர்மச்சீமையில்
- செங்கோலேந்தி ஒருமொழியதர்க்குள்ளாண்ட
- உவமையையுரைக்கலுற்றார்.