அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/சக்திதேவியின் சாபம் தீர்த்தல்
- ஆதியேனாதி ஆதித்திருவுளமே
- சோதியே என்னுடைய சூல்சாபந் தீரும்
- என்று வுமையாள் எடுத்து மிகவுரைக்க
- நன்றெனவே யந்த நாராயணருரைப்பார்
- சாபமது தீர சாந்தி மிக வளர்த்தார்
- தாபமுடன் மாயன் சாந்தியது வளர்க்க
- அம்மை உமையாளின் ஆனசாபந் தீர்ந்து
- செம்மையுடன் கயிலை சென்றனர் காணம்மானை
- சத்தி சாபந்தீர்த்துத் தவலோகமே யனுப்பி
- தத்தியாய்ச் சூரனையுஞ் சங்காரஞ் செய்து அந்த
- சூரனூர் தன்னைத் தீயோன் தனக்களித்து
- வீரசூரன்றனையும் மேலுமந்த யுகத்தில்
- பார இரணியனாய்ப் படைத்தார் காணம்மானை