அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/சதுர யுகம்
- சதிரயுகமெனவே தான்வகுத்தாரோர்பீடத்தை
- அவ்வுகத்திலேயுதிரம் அசுரர்குலமாகி
- முவுகத்துப்பாவி முடிந்தவொரு துண்டமதை
- குண்டோமசாலி எனவேகொடியவனாய்
- பண்டோர்குறோணி பாதக ஆறுதுண்டமதில்
- வந்துபிறந்தான் சதிரயுகத்திலம்மானை
- முந்துபிறந்த முழுமோசமானதிலே
- மந்துமுகமாய் மாபாவிதன்னுயிரை
- நானூறாயிரமுழங்கள் நாடுமவன்கரங்கள்
- முன்னூறு கால்கை வேள்கள்துதிபோலே
- உடைதோளுடம்பு உருவமறியாமாபாவி
- படைத்தோனையறியான் பாரியென்றுந்தானறியான்
- அட்டைபோலேசுருண்டு அம்மிபோலேகிடப்பான்
- மட்டைபோலேதிரிவான் வயிறுமிகப்பசித்தால்
- அன்னுகத்திலுள்ள அசுரகுலங்களையும்
- தன்வயிறுக்கிட்டு தடிபோலுருண்டிடுவான்
- இப்படியே நாளுமிவன் குலங்களானதெல்லாம்
- அப்படியேதின்றவன் பசிகளாற்றாமல்
- அய்யையோவென்றலறினான் காணம்மானை
- மெய்யையனான விறுமாவதுகேட்டு