அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/நெடிய யுகம்
- மாலும்பிரமாவும் வாய்த்த பரமேசுரனாரும்
- நாலுமறையோரும் நடுவர்மிகக்கூடி
- முன்னுள்ளதுண்டமொன்றை ரண்டக்கிவைத்து
- பின்னேபிறப்புப் பிரமவுருப்படைக்க
- சிவாயப்பொருள்தான் சிவநிலைகொடுக்க
- உபாயப்பொருள்தான் உல்லாசமேகொடுக்க
- முண்டமிருபேரும் உருவாயுருவெடுத்து
- தெண்டமதுகொண்டார் சிவனைமிகப்போற்றி
- அப்போதுமாயன் ஆதியடிவணங்கி
- இப்பொழுதீசுரரே இவர்களிருபேர்க்கும்
- என்னபேருதானு இடுவோமெனவுரைக்க
- வன்னப்பரமேசுரனார் வகுத்துரைப்பார்
- திறந்தான்பெருகுந் திருமாலே நீர்கேளும்
- பிறந்தவசுரருக்குப் பேரிடவேணுமென்றால்
- மாயனேநானுமொரு உபாயம்வகுப்பேன்கேள்
- ஆயனேநீயுமதுகேட்க வேணுமென்றார்
- அண்டபிண்டங்காணு ஆதிகயிலாசமதில்
- தெண்டனிட்டு நிஸ்டைசெய்கிறான் சுருதிமுனி
- இந்தமுனியடுக்க இவர்கள்ரண்டுபேரைவிட்டு
- அந்தமுனிதவத்தை அழிக்கவேசொல்லிடுவோம்
- என்றுசிவமுரைக்க எல்லோருஞ்சம்மதித்து
- அன்றுபிறந்த அசுரர்களைத்தானேவ
- போறானேசூரன் பொருப்பொருநூறானதுபோல்
- வாரானேசூரன் வாய்களிருகாதவழி
- சூரருடகைகள் தொண்ணூற்றிரஞ்சதுவும்
- மூரன்கால்நூறு உயர்ந்த சிரசன்பதுவும்
- கண்கள்ஒருநூறு வெண்டாளமிருகலமே
- துங்கணங்களாகச் சூரரடந்தேறி
- கண் கவிழ்ந்துயோகங் கருத்துருத்தாய் நிற்குகின்ற
- வண் கவிழ்ந்த மாமுனியை வாரியெடுத்தவர்கள்
- அலைமேலெறிய ஆர்ப்பரிக்குமளவில்
- கைலைமேல்ப்பரந்த கடியமுனிபகர்வான்
- ஏனெடாயென்னை இருந்ததவசழித்து
- வீணடாசெய்தாய் விழலாயறமோடா
- என்னையெடுத்து இக்கடல்மேல் போட்டாலும்
- உன்னையறுக்க ஓர் அம்பாயுருவெடுத்து
- பங்காயக்கண்மாயன் பக்கமதில் நான் சேர்ந்து
- உங்களிருபேரை ஊடுருவநானறுத்து
- இந்தக்கடலி லெடுத்துஉங்களையெறிந்து
- உங்களுடவூரை வொக்கக்கரிக்காடக்கி
- நானும் வைகுண்டம் நற்பேருபெற்றிருபேன்
- வானுதிருவானையென்று மாமுனியுஞ்சாபமிட்டான்
- உடனேமுனியை உயர்த்தியெடுத்தே சூரர்
- கடல்மேலெறிந்தாம் கர்மவிதிப்படியே
- அந்தமுனியும் அரனாரருளாலே
- மந்திரபுரக்கணையாய் வாரியலைக்குள்ளிருந்தான்
- சுருதிமுனிதனையுந் தோயமதில்விட்டெறிந்து
- உறுதிகுடிசூரர் ஓடிவந்தேகயிலை
- ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிநின்றாரம்மானை
- சுருதிமுனியுட நெட்டைதொலைத்தவர்
- சுருதியசுரர் கைலைமேவியே
- பருதீசூடும் பரமனைப்போற்றியே
- வருதிகேட்டு வருத்தினார்சூரரே