அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/வைகுண்டர் சீர் எடுத்துக் கொடுத்தல்
- தோத்திரம் என்று சுவாமிதமைத் தொழுது
- இராத்திரி தூக்கம் நான் வைத்திருக்கையிலே
- ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்
- கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
- தெய்தி இருபத்தேழில் சிறந்த வெள்ளி நாளையிலே
- சுருதியுடன் நித்திரையில் சுபக் கியான இலக்கமதில்
- நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து
- சீதமுடன் எழுப்பிச் செப்பினாரே காரணத்தை
- காப்பில் ஒரு சீர் கனிவாய் மிகத்திறந்து
- தாற்பரியமாகச் சாற்றினார் எம்பெருமாள்
- மகனே இவ்வாய் மொழியை வகுக்கும் காண்டமதுக்கு
- உகமோர் அறிய ஊணு நீ முதல் காப்பாய்
- சரிசமனாய் நான் வகுப்பேன் தான் எழுது காண்டமதை
- நான் உரைக்க நீ எழுதி நாடு பதினாலறிய
- யான் உரைக்க நீ எழுதி அன்போர்கள் தங்கள் முன்னே