அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் அஞ்சியார்
தொகுநற்றிணை- 90. மருதத்திணை
தொகு- (தோழி தலைமகளுக் குரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயின்மறுத்தது)
- ஆடியல் விழவி னழுங்கன் மூதூர்
- உடையோர் பான்மையிற் பெருங்கை தூவா
- வறனில் புலைத்தி யெல்லித் தோய்த்த
- புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
- வாடா மாலை துயல்வர வோடிப் (5)
- பெருங்கயிறு நாலு மிரும்பனம் பிணையற்
- பூங்க ணாய மூக்க வூங்காள்
- அழுதனள் பெயரு மஞ்சி லோதி
- நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்
- ஊச லுறுதொழிற் பூசற் கூட்டா (10)
- நயனின் மாக்களொடு கெழீஇப்
- பயனின் ற்ம்மவிவ் வேந்துடை யவையே.
பார்க்க
தொகுசங்க இலக்கியம்ஆசிரியர் அகரவரிசை அடிப்படையில்.