அஞ்சில் ஆந்தையார்

அஞ்சில் ஆந்தையார் தொகு

குறுந்தொகை- 294. நெய்தல்திணை தொகு

(பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பறிவுறீஇயது)


கடலுட னாடியுங் கான லல்கியுந்
தொடலை யாயமொடு தழூஉவணி யயர்ந்தும்
நொதுமலர் போலக் கதுமென வந்து
முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே
துத்திப் பாந்தட் பைத்தக லல்குற் (5)
றிருந்திழைத் துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத்
தழையினு முழையிற் போகாள்
தான்றந் தனன்யாய் காத்தோம் பல்லே.


நற்றிணை- 233. குறிஞ்சித்திணை தொகு

(வரையாது நெடுங்காலம் வந்தொழுக இவள் ஆற்றாளென்ப துணர்ந்து சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது)


கல்லாக் கடுவ னடுங்கமுள் ளெயிற்று
மடமா மந்தி மாணா வன்பறழ்
கோடுய ரடுக்கத் தாடுமழை யொளிக்கும்
பெருங்கன் னாடனை யருளினை யாயின்
இனியென கொள்ளலை மன்னே கொன்னொன்று (5)
கூறுவன் வாழி தோழி முன்னுற
நாருடை நெஞ்சத் தீரம் பொத்தி
ஆன்றோர் சென்னெறி வழாஅச்
சான்றோ னாதனற் கறிந்தனை தெளிமே.


பார்க்க தொகு

சங்க இலக்கியம் ஆசிரியர் அகரவரிசை அடிப்படையில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அஞ்சில்_ஆந்தையார்&oldid=1083842" இலிருந்து மீள்விக்கப்பட்டது