அடைநெடுங் கல்வியார்
அடைநெடுங் கல்வியார்
தொகுபுறநானூறு- 283
தொகுதிணை: தும்பை; துறை: பாடாண்பாட்டு
தொகு- ஒண்செங் குரலித் தண்கயங் கலங்கி
- வாளை நீர்நாய் நாளிரை பெறூஉப்
- பௌவ வுறையள வா... ....
- .... .... ....வி மயக்கி
- மாறுகொண் முதலையொ டூழ்மாறு பெயரு
- மழும்பி லனடாங்கா றைகுயு மென்றும்
- வலம்புரி கோச ரவைக்களத் தானு
- மன்று ளென்பது கெட... .....
- .... .... ..ஈனே பாங்கற்
- கதிர்சூழ் குறட்டின் வேனிறத் திங்க ( )
- வுயிர்புறப் படாஅ வளவைத் தெறுவரத்
- தெற்றிப் பாவை திணிமண லயரு
- மென்றோண் மகளிர் நன்று புரப்ப
- .... ..... ...ண்ட பாசிலைக்
- கவிழ்பூந் தும்பை நுதலசைத் தோனே.
புறநானூறு: 344
தொகுதிணை: காஞ்சி; துறை: மகட்பாற் காஞ்சி
தொகு- செந்நெ லுண்டபைந்தோட்டு மஞ்ஞை
- செறிவளை மகளி ரோப்பலிற் பறந்தெழுந்து
- துறைநணி மருதத் திறுக்கு மூரொடு
- நிரைசால் விழுப்பொருள் தருத லொன்றோ
- புகைபடு கூரெரி பரப்பிப் பகைசெய்து (5) ( )
- பண்பி லாண்மை தருத லொன்றோ
- விரண்டினு ளொன்றா காமையோ வரிதே
- காஞ்சிப் பனிமுறி யாரங் கண்ணி...
- கணிமே வந்தவ ளல்குலவ் வரியே.
புறநானூறு: 345
தொகுதிணை: காஞ்சி; துறை: மகட்பாற் காஞ்சி
தொகு- களிறணைபக் கலங்கின காஅ
- தேரோடத் துகள்கெழுமின, தெருவு
- மாமறுகலின் மயக்குற்றன, வழி
- கலங்கழாஅலிற் றுறை கலக்குற்றன
- தெறன்மறவ ரிறைகூர்தலிற் (5) ( )
- பொறைமலிந்து நிலனெளிய
- வந்தோர் பலரே வம்ப வேந்தர்
- பிடியுயிர்ப் பன்ன கைகவ ரிரும்பி
- னோவுற ழிரும்புறங் காவல் கண்ணிக்
- கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை (10)
- மைய னோக்கிற் றையலை நயந்தோ
- ரளியர் தாமேயிவள் தன்னை மாரே
- செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
- நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக்
- கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர் (15) ( )
- குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு
- கழாஅத் தலையர் கருங்கடை நெடுவே
- லின்ன மறவர்த் தாயினு மன்னோ
- வென்னா வதுகொல் தானே
- பன்னல் வேலியிப் பணைநல் லூரே. (20)
பார்க்க
தொகு