அன்னப் பறவைகள்/கில்லாடி

கீல்லாடி நாட்டுப் புறத்திலே ஒரு காலத்தில் ஒரு பழைய மாளிகையில் பெரியதனக்காரர் ஒருவர் இருந்தார். அவருடன் இரண்டு பிள்ளை களும் வசித்திருந்தனர். அந்த இருவரும் அரசிளங் குமரியை விவாகம் செய்துகொள்ள விரும்பினர். அவள் எவன் தன்னைப்பற்றி அதிகம் பேசுகிருனே அவனை மணந்துகொள்வதாக விளம்பரம் செய் திருந்தாள். அதல்ைதான் சகோதரர்கள் தாமும் போட்டியிட்டு, இருவரில் ஒருவன் அவளை அடையலாம் என்று நம்பிக்கொண் டிருந்தனர் இருவரும் நகரத்திற்குப் புறப்படுவதற்கு ஒரு வாரமாகத் தங் க2ள ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். ஒருவன் லத்தின் மொழியிலுள்ள அகராதியை மனப்பாடம் செய்து கரைத்துக் குடித் தான்; மூன்று வருடமாக வந்த பத்திரிகைகளையும் உருத் தட்டினன். அவைகளை முதலிலிருந்தோ, கடைசியிலிருந்தோ ஒப்பிக்க அவல்ை முடியும். இரண்டாமவன் நகர்மன்றச் சட்டங்களைப்பற்றி ஆராய்ந்து 72 கற்றுக்கொண்டான். இளவரசியிடம் அரசியல் விஷயங்களைப் பேச லாம் என்பது அவன் எண்ணம். தவிரவும் குதிரைச் சேனங்களை அலங்கரித்துச் செப்பனிடுவது போன்ற சில நுணுக்கமான வேலை களும் அவனுக்குத் தெரியும். கானே அரசர் மகளை அடைவேன்! என் று அவர்களில் ஒள் வொருவனும் சொல்லிக்கொண்டான். தந்தை ஆளுக்கு ஒரு குதிரை யைக் கொடுத்தார். அகராதியும் பத்திரிகைகளும் ஒப்பிக்கக் கூடிய வன் கரிய குதிரையைப் பெற்றிருந்தான். நகர் மன்றச் சட்டங்களே அறிந்தவன் வெள்ளை நிறக் குதிரையைப் பெற்றிருந்தான். இரு வரும் புறப்படு முன்னல் உதடுகளில் ஒருவகை எண்ணெயைத் தடவிக் கொண்டனர். எண்ணெய்ப் பசை இருந்தால், மளமள என்று தட்டாமல் பேசலாம் என்பது அவர்கள் எண்ணம். அவர்கள் குதிரைகளில் ஏறிச் செல்லும்பொழுது வழியனுப்பு வதற்காக வேலைக்காரர்கள் அனைவரும் வாயிலில் வந்து கூடி கின்ற னர். அந்த நேரத்தில் முன்ருவது சகோதரன் ஒருவனும் அங்கு வந்து சேர்ந்தான்-அவன்தான் கடைசிப் பையன். அவனே எவரும், மதித்துக் கவனிப்பதில்லை. ஏனெனில் மற்ற இருவரைப்போல அவ னிடம் படிப்பு கிடையாது. அவன் பெயர் கில்லாடி. கல்ல சட்டைகளெல்லாம் அணிந்துகொண்டு, நீங்கள் எங்கே போகிறீர்கள்?' என்று சகோதரர்களை அவன் கேட்டான். "இளவரசியை அடைவதற்காகப் போட்டியில் கலந்துகொள் ளப் போகிருேம். நாடெங்கும் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது உனக்குத் தெரியாதா?’ என்று சகோதரர்கள் கேட்டார்கள். 'நல்ல வேளை, அப்படியானுல் நானும் வரவேண்டியதுதான்' என்ருன் தம்பி. அவனுடைய அசட்டுத் தனத்தைக் கண்டு சிரித்துக் கொண்டே சகோதரர்கள் தங்கள் குதிரைகளில் ஏறிக்கொண்டு வேக மாய்ச் சென்றுவிட்டனர். கில்லாடி தங்தையிடம் கெஞ்சினுன்: அப்பா, எனக்கும் ஒரு குதிரை கொடுங்கள். நானும் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இளவரசி என்னை ஏற்றுக்கொண்டால் சரி, இல்லையென்றலும் அவளே நான் அடைவது திண்ணம்.' அட பயித்தியமே உனக்கு நான் குதிரை எதுவும் தரமுடி யாது. அங்கே போய் நீ என்ன திறமையைக் காட்டப் போகிருய்?" என்று அவர் ஏளனம் செய்தார். o o

கில்லாடி, குதிரை இல்லாவிட்டால், நான் ஆட்டுக் கடாமீது ஏறிச் செல்கிறேன். அது என்னுடைய சொந்த ஆடு, என்னைச்

74

சுமந்து செல்லும்! என்ருன். அவன் சொன்னபடியே அதன்மீது ஏறிக்கொண்டு, சாலை வழியாக அதை ஒட்டிச் சென்ருன். ஆடு ஜில், ஜில்" என்று வேகமாக ஒடிற்று. அவன் ஆனந்த மாகப் பாடிக்கொண்டிருந்தான். மூத்தவர் இருவரும் சவாரி செய்யும் பொழுது ஒருவருக் கொருவர் எதுவும் பேசவில்லை. ஒவ்வொருவனும் தான் கற்றவைகளை நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. இளவரசி முன்பு பேசவேண்டிய விஷயங்களே அவர்கள் மனத்திலே முறையாகத் தொகுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களைத்தொடர்ந்துகில்லாடியும்போய் நெருங்கிவிட்டான். டோய், என் கையிலே என்ன இருக்கிறது என்பதைப் பாருங்கள்; இதை நான் வழியிவே கண்டெடுத்தேன்! என்று அவன் கூவினுன். அவனுடைய இடதுகையிலே செத்துப்போன காக்கை ஒன்றிருந்தது. 'கில்லாடி, இதைக் கொண்டு நீ என்ன செய்யப் போகிருய் : என்று அவர்கள் கேட்டார்கள். "இதை கான் இளவரசிக்கு கொடுப்பேன்! இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே அவர்கள் போய் விட்டனர். 75 சிறிது துாரம் சென்றபின் கில்லாடி மறுபடியும், டோய், இங்கே பாருங்கள் என்று கூப்பிட்டான். சகோதரர்கள் திரும்பிப் பார்த்து, கில்லாடி, இது என்னது? மரத்தினல் செய்த ஜோடு அதிலும் மேல் பகுதி உடைந்து போய் விட்டது. இதையும் இளவரசிக்கா கொடுக்கப் போகிருய்? என்று கேட்டனர். m ஆமாம், இதுவும் அவளுக்குத்தான் சகோதரர்கள் மீண்டும் சிரித்துக்கொண்டே சவாரி செய்தனர். சிறிது நேரத்திற்குப் பின் தம்பி மீண்டும் சகோதரர்களைக் கூப்பிட்டான். இங்கே பாருங்கள், ஆச்சரியமான பொருள் ! என்ருன். + 'இந்தத் தடவை என்ன கொண்டு வந்திருக்கிருய் ' "இளவரசி இதைக் கண்டு மகிழ்ச்சியடைய மாட்டாளா? 'இது என்னடா, வெறும் மணல்தானே ஓடைக் கரையில் அள்ளி வந்திருக்கிருய் 1, ஆமாம், இது மணல்தான், ஆளுல் பொடி மணல் ! கையிலே வைத்திருக்க முடியாது, கழுவிக் கீழே உதிர்ந்துவிடும் 1 சட்டைப் பைகள் இரண்டிலும் இந்த மணலை நிறையச் சேர்த்து வைத்திருக் கிறேன்.' - மூத்தவர் இருவரும் குதிரைகளை விரட்டிக் கொண்டு வேகமாகச் சென்ருர்கள். கில்லாடிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அவர்கள் நகர வாயிலை அடைந்துவிட்டனர். திருமணப் போட்டிக்காக வந்தவர்களுக்கு வாயிலில் வரிசைக் கிரமமாகச் சீட்டுகள் கொடுக்கப்பட்டன. முதலில் வந்தவருக்கு முதல் சீட்டு, பிந்தி வந்தவர்களுக்கு அந்தந்த நேரப்படி சீட்டுகள் வழங்கப்பட்டன. போட்டியாளர் அனைவரும், ஒரு வரிசைக்கு ஆறு பேர்கள் வீதம், ஒருவர் பின் ஒருவராக நின்றனர். ஒவ்வொரு வரிசை யையும் ஒட்டிற்ைபோல மற்றவரிசைகளும் நிறுத்தப்பட்டன. இது ஒரு நல்ல ஏற்பாடு. இல்லையெனில், கைகால்களை நீட்ட மடக்க இட மிருந்தால், போட்டிக்காரர்கள் ஒருவரை ஒருவர் பிய்த்தெறிந்திருப் பார்கள். ககர மக்கள் அரண்மனையைச் சுற்றித் திரளாக வந்து குழுமியிருந்தனர். சாளரங்கள் தோறும் தலைகள் உள்ளே நடப்பதை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தன. முக்கியமாகப் போட்டியாளர் 76 களிடம் இளவரசி என்ன பேசுகிருள், எப்படிப் பேசுகிருள், என் பதைக் காணுவதிலேயே மக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். போட்டியில் கலந்துகொண்டவர்கள் வெளியே எவ்வளவு செளடாலாகப் பேசிலுைம், உள்ளே இளவரசி இருந்த அறைக்குள் கால் வைத்தவுடன் வாயடைத்துப் போயினர். அத்தகையவர்களே இளவரசி, பயனில்லை! அடுத்தவர்!" என்று சொல்லி அனுப்பிவிட் டாள். அகராதியைக் கரைத்துக் குடித்த சகோதரனுடைய முறை வங் தது. அவன் வெளியில் வரிசையில் கிற்கும்பொழுதே அதெல்லாம் மறந்துபோய்விட்டது. அறையினுள் தரையில் கால் வைக்கும் பொழுதே வழுகிற்று. மேல் தளமெல்லாம் இரசம் பூசிய கண்ணுடி கள் பதிக்கப்பட்டிருந்ததால், அவன் தலைகீழாக நிற்பது போன்ற பிரதிபிம்பங்கள் தெரிந்தன. ஒவ்வொரு சாளரத்திலும் மூன்று நிருபர் களும், ஓர் அதிகாரியும் அமர்ந்திருந்தனர். அறையினுள் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும். பேச்சையும் அவர்கள் உடனுக்குடன் எழுதி வெளியே அனுப்பி வந்தார்கள். அவை விரைவில் பத்திரிகை யில் அச்சாகி, சிறிது நேரத்தில் தெருக்களில் விற்பனைக்கு வந்து விடும். குளிர் காய்வதற்காக உள்ள கணப்புச் சட்டிகளில் நெருப்பு அதிகமாக்கப்பட்டு, அறை முழுவதும் கொதிப்படைந்திருந்தது. "இளைஞன் இளவரசியைப் பார்த்து, இங்கே மிகவும் சூடா யிருக்கிறது!’ என்று சொன்னன். 'இன்று என் தங்தையார் கோழிக் குஞ்சுகளை வாட்டிக்கொண் டிருக்கிருர், அதுதான் காரணம், என்ருள் இளவரசி. அவ்வளவுதான் என்ன,பேசுவதென்று தெரியாமல் கின்ருன் இளைஞன். இத்தகைய பேச்சை அவன் எதிர்பார்க்கவில்லை. மிக வும் சாதுரியமாகப் பேசவேண்டும் என்று அவன் எண்ணிய நேரத் தில், வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வெளிவர மறுத்தது. பயனில்லை, இவரை அழைத்துப் போங்கள்' என்று சொல்லி விட்டாள் இளவரசி, அடுத்தாற்போல் இரண்டாவது சகோதரன் உள்ளே சென் ருன்; சென்றதும், இங்கே பயங்கரமான வெப்பம் இருக்கிறது!’ என்ருன். 77 "ஆம், இன்று இங்கே கோழிக் குஞ்சுகளை வாட்டிக்கொண் டிருக்கிருேம்,' என்ருள் அர சர் மகள். யார்-எதை? என்று அவன் வினவினன். உடனே நிருபர்கள் அனைவரும், யார்-வதை' என்று குறித்துக்கொண்டனர். o | "Ist

  • 画 - oil- s so いリア/兵3 幽 o

. W {ಿ. -- 1_ ‘o ཟླ་བརྒྱུད---་་ o “ . . "ন্ত্ৰ o ( ( ് =് Nス o - oSo 2 !'", o.” _ _ ~NN ~\ SEF — a= B * also “ጢo፡ 二エーへ。 -

  1. ・エ =S o I تكريتيــس -- Eجد - / پر== བོ༄ - ། ଧ୍ଯ. -- 画 -. -S - -Հ TSJ i :حيث *_ o "... " "Fu

lo 'சரிதான். இவரையும் அழைத்துப் போங்கள்! என்ருள் இள வரசி. - -, அடுத்தாற்போல் கில்லாடி வந்தான். அவன் கீழே இறங்கா மல் ஆட்டின்ாேம் இருந்துகொண்டே அறைக்குள் போன்ை. IT IJI) – 1 0 78 இங்கு அறையெல்லாம் கொதிக்கிறது என்று அவ ன் சொன்ஞன். "நான் கோழிக் குஞ்சுகளை வாட்டிக்கொண் டிருப்பதுதான் காரணம், என்று இளவரசி தெரிவித்தாள். கில்லாடி, அதுவும் நல்லதுதான் எனக்கு ஒரு காகத்தையும் வாட்டித் தரலாம் என்று நம்புகிறேன்! என்று கேட்டான். இராஜகுமாரி, ஆகா, வாட்டலாம் ஆல்ை வாட்டுவதற்கு என் னிடம் சட்டியுமில்லை, தட்டுமில்லையே! உம்மிடம் ஏதாவது இருக் கிறதா?’ என்ருள். இருக்கிறது! என்று சொல்லி, கில்லாடி, மரத்தில் செய்த ஜோட்டினை எடுத்து, அதனுள் காகத்தை வைத்தான். அதனுடன் சேர்த்து வதக்குவதற்கு இங்கு ஒன்றுமில்லையே! என்ருள் இளவரசி. கானே கொணர்ந்திருக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, அவன் தன் பைகளிலிருந்த மணலில் கொஞ்சம் எடுத்து ஜோட்டினுள் போட்டான். இன்னும் வேண்டுமானுலும், இருக்கிறது என்ருன். 'உமது பேச்சை நான் விரும்புகிறேன். எந்த விஷயத்திற்கும் நீர் ஒரு பதில் வைத்திருக்கிறீர். உம்மைப் பற்றியே பேசவும் உம் மிடம் விஷயமிருக்கிறது. உம்மையே நான் கணவராக ஏற்றுக் கொள்கிறேன். ஆளுல், இங்கு நாம் பேசிய ஒவ்வொரு சொல்லும் காளை பத்திரிகையில் வெளிவரும் என்பது உமக்குத் தெரியுமா? இதோ சாளரங்களில் இருந்துகொண்டு எழுதுகிறவர்கள் அனைவரும் கிருபர்கள். ஒவ்வொரு சாளரத்திலும் சட்டநிபுணரான ஓர் அதிகாரி யும் இருக்கிருர் சட்டநிபுணர்களுக்கோ ஒன்றும் புரியாது' இதைக் கேட்டவுடன் நிருபர்களுக்குத் துக்கிவாரிப் போட் டது. அவர்களுடைய பேணுக்களிலிருந்து தரையெல்லாம் மை சிக் திற்று. - - கில்லாடி அவர்களைத் திரும்பிப் பார்த்து, ஓ, இவர் கள் எல்லோரும் நாகரிகக் கனவான்கள்! இவர்களில் மேலான சட்ட கிபுணர்களுக்கு மட்டும் என்னிடமுள்ள பரிசைக் கொடுக்கத்தான் வேண்டும்!" என்று சொல்லிக்கொண்டே அவர்கள் கண்களில் மணலை வாரி வீசின்ை. + 79 'கல்ல வேலை! நான் இதைச் செய்திருக்க முடியாது, ஆளுல் இனிமேல் படித்துக்கொள்கிறேன்! என்றள் இளவரசி, இவ்வாறு 4εύουπις. அரசனைன். அவனுக்கு ஒரு மகுடமும், மனைவியும் கிடைத்ததால், அவன் அரியாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். go് ੋਂ リジエ. . - լD . 2 ¬м л ү முறறு "പ - ༄། །འགིན་ཚེལ་ཚར་ན་་་་་ * - Π. Ζ9

"https://ta.wikisource.org/w/index.php?title=அன்னப்_பறவைகள்/கில்லாடி&oldid=1638664" இலிருந்து மீள்விக்கப்பட்டது