அன்னப் பறவைகள்/தீப்பெட்டி விற்கும் சிறுமி
தாங்க முடியாத குளிர்; பனி பெய்துகொண்டிருந்தது; மாலை மயங்கி இருள் படர்ந்து கொண்டிருந்தது. இத்துடன் அன்று ஆண்டின் இறுதி நாள்; பொழுது விடிந்தால் புது வருடப் பிறப்பு. குளிரிலும் இருளிலும் ஏழைச் சிறுமி ஒருத்தி தெருக்களின் வழியாக கடமாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய தலைமீது செவிகளே மறைத்துக் கட்டும் துணியில்லை; பாதங்களில் மிதியடிகள் βδού8,υ, வீட்டைவிட்டுப் புறப்படும்பொழுது அவள் தன் தாயின் பழைய பெரிய மிதியடிகளே அணிந்து கொண்டுதான் வந்தாள். ஆளுல் வழியில், வேகமாக ஓடிக்கொண்டிருந்த இரண்டு வண்டிகளுக்கு இடையே அவள் ஒடிச் சென்று, சாலையைக் கடக்க வேண்டியிருந் தது. அப்பொழுது மிதியடிகள் அவளுடைய கால்களை விட்டுக் கழன்று விழுந்துவிட்டன. பின்னல் அவள் தேடிய பொழுது ஒரு மிதியடிதான் அகப்பட்டது; மற்றதை ஒரு பையன் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். தன்னுடைய பொம்மையை வைத்துத் 1799–7 54 தொட்டிலாட்டுவதற்கு அது பயன்படும் என்று அவன் எண்ணி யிருப்பான். பனி மழையில் சிறுமி தன் சின்னஞ் சிறு பாதங்களால் தரையை மிதித்து கடந்துகொண்டே யிருந்தாள். அவளுடைய முன்முனையில் ஏராளமான தீப்பெட்டிகள் இருந்தன; கையிலும் திப் பெட்டிக் கட்டுகள் இருந்தன. அன்று பகல் முழுதும் அவளிடம் எவரும் திப்பெட்டி வாங்கவில்லை; யாரும் ஒரு பைசாகூட அவளுக்குக் கொடுக்கவில்லை. பசி ஒரு புறம், குளிர் ஒரு புறம். பனியால் உடல் மரத்துப் போய்விட்டது. அந்தோ பாவம் விரிந்து தோள்களின் மீது பரந்து கிடந்த அவளுடைய தங்க நிறமான கூந்தலின்மீது பனிச் செதிள்கள் விழுந்துகொண்டே யிருந்தன. சுருட்டை சுருட்டை யாக அடர்ந்திருந்த தன் தலைமயிரின் அழகைப் பற்றிச் சிந்திக்க வறுமையிலே வாடி வதங்கிய அப் பெண்ணுக்கு நேரம் ஏது? எல்லா வீடுகளின் சாளரங்களிலும் பளிரென்று வெளிச்சம் தெரிந்துகொண்டிருந்தது. அவைகளின் வழியாக உள்ளே சமைத்து வைத்திருந்த இறைச்சி முதலிய உணவுப் பொருள்களின் நறுமண மும் வந்துகொண் டிருந்தது. அன்று மக்கள் முக்கியமாக முழு வாத்தை வாட்டி வதக்கி உண்பது வழக்கம். அந்த வாடை வந்த வுடன் சிறுமிக்கு அதன் நினைவு உண்டாயிற்று. வழியில் ஒரு விட்டுக்கு அடுத்த விடு சற்று முன்னல் தெருப் பக்கம் நீண்டிருந்ததால், இரண்டு வீடுகளுக்கும் இடையில் ஒரு மூலை இருந்தது. அந்த முனையை அடைந்ததும், சிறுமி கால்கள் தள்ளாடி, குனிந்து கீழே அமர்ந்தாள். பனிச் செதிள்களே மிதித்து மிதித்து விறைத்திருந்த பாதங்களே இழுத்து அவள் தன் உடலோடு சேர்த்து வைத்துக்கொண்டாள். ஆயினும் அவளால் குளிரைத் தாங்க முடிய வில்லை. அவள் தன் வீட்டுக்குத் திரும்பிச் செல்லவும் இயல்ாது; ஏனெனில் அவள் அன்று ஒரு தீப்பெட்டிகூட விற்கவில்லை; கையில் ஒரு காசுகூட இல்லை; இதற்காக அவளுடைய தங்தை அவளே அடித்து வதைப்பார். மேலும் திறந்த வெளியைப் பார்க்கிலும் அவள் விடு அதிக வசதியுள்ளதும் அன்று. விட்டுக் கூரையில் பல இடைவெளிகளும் துவாரங்களும் இருந்தன. ஒலை யில்லாத இடங் களில் வைக்கோலும் கந்தல் துணிகளும் வைத்து அடைக்கப்பட் டிருந்தன. எனினும் பனி மழையும் காற்றும் கூரை வழியாக வீட்டி துள் புகுந்ததால் அங்கேயும் குளிர் நடுக்கிக்கொண்டுதான் இருக்கும். சிறுமியின் சிறு கைகள் விறைத்துப் போயிருந்தன. அப்பொழுது ஒரு திக்குச்சியைக் கொளுத்தினால் எவ்வளவு உதவியாயிருக்கும் என்று அவள் எண்ணினாள். ஆனால் மரத்துப் போன கைகளால் தீப்பெட்டியை எடுப்பது எப்படி, குச்சியைச் சுவரில் கீச்சி நெருப்புண்டாக்குவது எப்படி? அவள் மிகவும் சிரமப்பட்டு ஒரு குச்சியை எடுத்துவிட்டாள்! கீச்சியவுடன் அது எவ்வளவு பிரகாசமாக எரியத் தொடங்கியது சுற்றிலும் சிறிது சூடு உண்டாகி
விட்டது அவள் தீயின்மேலே ஒவ்வொரு கையாகச் சிறிது நேரம் காட்டினாள். குச்சி எரியும்பொழுது சுற்றிலும் ஒளிமயமாயிருந்தது. விடுகளிலே குளிர் காயும் கணப்புச் சட்டியின் முன்னால் இருப்பது போல, அவளுடைய உடலுக்கு வெதுவெதுப்பாயிருந்தது. கால்களுக்கும் சூடு உண்டாக்குவதற்காக அவள் தன் கால்களையும் மெதுவாக முன்புறம் நீட்டிக்கொண்டாள். தீக்குச்சி அணைணந்து போய் விட்டது. அந்த குச்சியை விரல்களால் பிடித்துக்கொண்டே அவள் சிறிது நெரம் அமர்ந்திருந்தாள். மீண்டும் ஒரு குச்சி பொருத்தப்பட்டது. சுற்றிலும் ஒளி பரவி விட்டது. பின்புறம் இருந்த சுவரில் ஒளி வீசியவுடன், சிறுமி சுவரை ஒரு மெல்லிய திரையாகக் கருதி, விட்டினுள் இருப்பவையெல்லாம் தன் கண்ணுக்குத் தெரிவதாக எண்ணிக்கொண்டாள். அங்கே ஒரு மேசைமீது தட்டுத் தட்டாகப் பண்டங்கள் இருந்தன. ஒரு பெரிய தட்டில் வாத்து ஒன்று பொரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் மேலும் வியப்பு என்னவென்ருல், அந்த வாத்து, மேசையிலிருந்து துள்ளிக் கீழே குதித்து, அவள் பக்கமாக உருண்டு வருவதாகத் தோன்றியதுதான் வாத்தின் உடலுள் ஆப்பிள் முதலிய கனிகளும் வைக்கப்பட்டிருந்தன. வாத்து தன்னிடம் வந்ததாக அவள் எண்ணிய வுடன் தீக்குச்சி அணைந்துவிட்டது. மீண்டும் ஒரே இருள். பின் புறம் வெறும் சுவரைத் தவிர வேறு எதுவும் தென்படவில்லை. அவள் மறுபடி ஒரு குச்சியைப் பொருத்தினுள். வீடுகளில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக வைக்கும் அலங்காரம் செய்த மரம் ஒன்றின் அடியில் தான் அமர்ந்திருப்பதாக அவளுக்குத் தோன் றிற்று. சென்ற வருடம் செல்வச் சீமான் ஒருவருடைய வீட்டில் கண்ணுடிக் கதவு வழியாக அவள் பார்த்திருந்த கிறிஸ்மஸ் மரத்தை விட இது மிகப் பெரிதா யிருந்தது. பச்சை இலைகளுடன் விளங்கிய அதன் கிளைகளில் ஆயிரம் மெழுகு வத்திகள் எரிந்துகொண் டிருங் தன. பக்கம் பக்கமாகப் பல வண்ணப்படங்களும் வைக்கப்பட் டிருந்தன. சிறுமி அவைகளைக் கண்டு தன் இரு கைகளையும் மீட்டி ள்ை. அதற்குள் தீக்குச்சி அனைங்து போய்விட்டது. அவள் கண்ட நூற்றுக்கணக்கான மெழுகு வத்திகளும் சிறிது சிறிதாக உயரே எழும்பி வானம்வரை சென்றன. அங்கே அவைகள் ஒளி வீசும் கட்சத் திரங்களாக அமைந்து நிற்பதையும் அவள் கண்டாள். அந்தத் தாரகைகளில் ஒன்று கீழே விழுந்தது; அப்பொழுது வானிலிருந்து கெருப்பு மயமான பேரொளி ஒன் று பூமிக்கு இறங்கி வருவது போலிருந்து. சிறுமி, இப்பொழுது யாரோ ஒருவர் இறந்துபோகின்றனர். என்று சொன்னுள். ஏனெனில் அவளுடைய பாட்டி, ஒரு கட்சத்திரம் உதிரும்பொழுது, ஓர் ஆவி கடவுளிடம் போய்ச் சேர்கிறது என்று முன்பு சொல்லியிருந்தாள். அந்தப் பாட்டி ஒருத்திதான் இந்த உலகில் அச்சிறுமியிடம் அன்பு கொண்டிருந்தவள். அவளும் போய் விட்டாள்! 57 சிறுமி மேலும் ஒரு திக்குச்சியைக் கீச்சினுள் சுற்றிலும் ஒளி பரவியது. அந்த ஒளியின் நடுவே அவளுடைய பாட்டி தெய்விக அருளுடனும், அமைதியுடனும், அழகுடனும் தோன்றினுள்.
'பாட்டி பாட்டி என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்! ஆல்ை;என் கையிலுள்ள தீக்குச்சி அனைந்தவுடன், ரீயும் மாற து விடுவாய் என்பது எனக்குத் தெரியும் முன்னுல் மார் பார்க்க 58 கணப்புச்சட்டி, பொரித்த வாத்து, கிறிஸ்மஸ் மரம் எல்லாம் மறைந்து போய்விடவில்லையா? அவைகளைப்போல நீயும் மறைந்து விடாதே' என்று சொல்லிக்கொண்டே சிறுமி பெட்டி பெட்டியாகத் திக்குச்சிகளை மொத்தமாகச் சேர்த்துக் கொளுத்தினுள். தீக்குச்சிகள் பகல் வெளிச்சத்தைக் காட்டிலும் அதிக ஒளியுடன் சுடர்விட்டு எரிக் தன. அந்த நேரத்தில் பாட்டியும் மிகுந்த பொலிவுடன் விளங்கி ளுள். அவள் தன் இரு கைகளாலும் பேர்த்தியை வாரி எடுத்துக் கொண்டாள்; இருவரும் சுவர்க்கம் போய்ச் சேர்ந்தனர். அங்கே குளிரில்லை; பசியில்லை; துயரமும் கிடையாது. அவர்கள் அங்கே ஆண்டவருடன் இருந்தனர். ஆளுல் இரண்டு விடுகளுக்கு நடுவே யிருந்த முலையில் சுவ ரோடு சாய்ந்திருந்த சிறுமி அப்படியே இருந்தாள். அவள் கன் னங்கள் சிவந்திருந்தன; இதழ்களில் புன்சிரிப்பு தவழ்ந்துகொண் டிருந்தது. அவளுடைய உடல் பழைய ஆண்டின் இறுதி காளில் விறைத்துப் போய்விட்டது. புதிய வருடப் பிறப்பன்று பாதி எரிந்த திப்பெட்டிகள், சாம்பல் ஆகியவற்றின் கடுவே சாய்ந்திருந்த அந்தச் சிறு உடலின்மீது கதிரவன் கதிர்கள் வீசிக்கொண்டிருந்தன. காலையில் அந்த உடலைப் பார்த்தவர்கள், அவள் விறைத்துப் போன தன் உடலுக்குச் சிறிது சூடுண்டாக்க முயற்சி செய்திருக்கிருள்! என்று சொன்னர்கள். ஆனல் முந்திய நாள் இரவில் அவள் கண்ட அழகிய காட்சிகளைப் பற்றியோ, வருடப் பிறப்புக் கொண்டாட்டத் திற்கு அவள் தன் பாட்டியுடன் வானகம் சேர்ந்துவிட்டதைப் பற்றியோ, எவருக்கும் எதுவும் தெரியாது.