அன்னப் பறவைகள்/பறக்கும் பெட்டி
முன் ஒரு காலத்தில் ஒரு நகரத்தில் வணிகன் ஒருவன் இருந்தான். அந்த நகரத்தை நீங்கள் பூகோளப் படத்தில் தேடிப் பார்க்க வேண்டாம். அது படத்தில் இராது. வணிகன் பெருஞ் செல்வன். அவன் விரும்பினால், அவனுடைய தெரு முழுதிலும் வெள்ளி ரூபாய்களாகப் பாவியிருக்கலாம். பக்கத்து முடுக்கிலும் வெள்ளித் தகடுகளாகப் பதித்திருக்கலாம். ஆனால் அவன் அப்படி ஒன்றும் செய்யவில்லை. பணத்தை என்ன செய்ய வேண்டும், என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் கையிலிருந்து ஒரு ரூபாய் வெளியே போனால், அது ஒரு பவுனாகத்தான் திரும்பி வரும். அவன் அத்தகைய வணிகனாக இருந்தான். ஆயினும் கடைசியில் அவனும் இறக்கத்தான் வேண்டியிருந்தது.
அவனுக்கு ஒரு மகன் இருந்தான். செல்வம் எல்லாம் அவனுக்கே வந்து சேர்ந்தது. அவன் தங்தையைப் போல் செல்வத்தின் அருமையை அறிந்தவனில்லை. நாடகங்களிலும் கேளிக்கைகளிலும் அவன் பணத்தை வாரி இறைத்தான். உயர்ந்த மதிப்புள்ள பண நோட்டுகளைக் கொண்டு அவன் காற்றாடிகள் செய்து பறக்கவிட்டு வந்தான். ஏரியில் ருபாய்களை விட்டெறிந்து சிறுவர்களைக் கொண்டு அவைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லுவான். இப்படியெல்லாம் பணம் குறைய வேண்டும் என்று அவன் எண்ணினான். அவ்வாறே அது குறைந்து தேய்ந்து போய்விட்டது. இறுதியாக அவனிடம் மிஞ்சியிருந்தவை நான்கு ருபாய்களும், ஒரு பழைய மேலங்கியும், இரண்டு மிதியடிகளுமேயாகும். இந்த நிலையில் அவனுடைய பழைய நண்பர்கள் அவனை விட்டுப் பிரிந்தார்கள். அவனுடன் சேர்ந்து தெருவில் நடப்பதற்கே அவர்கள் கூசினர்கள். ஆனால் அவர்களிலே கல்வவன் ஒருவன் இருந்தான். அவன் தன் நண்பன் மேற்கொண்டு நகரில் தங்கியிருப்பதில் பயனில்லை என்று கண்டு, அவனுக்கு ஒரு பெட்டியைக் கொண்டுவந்து பரிசாகக் கொடுத்தான்.
பெட்டியிலே வைப்பதற்கு வணிகன் மகனிடம் என்ன இருந்தது? இறு அவன் தன் அங்கியை அணிந்து பெட்டியின்மீது அமர்ந்து கொண்டு, அதைப் பூட்டினான். அந்தப் பெட்டி மாயமான ஒன்று. அதன் பூட்டை அழுத்தினால் அது உயரே கிளம்பிச் செல்லும், ஆகவே அது அவனைத் தூக்கிக்கொண்டு அப்படியே ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்றது. விமானத்தில் செல்வதுபோல அவன் மேகமண்டலத்தை எல்லாம் தாண்டிச்சென்றன். பெட்டியின் அடிப் பாகத்தில் ஏதாவது ஒசை கேட்டால், அவன் அஞ்சி கடுங்கினன். இவ்வாறு பறந்து சென்று அவன் கடைசியாக துருக்கியர் நாட்டை அடைந்தான். அங்கே அவன் இறங்கிவிட எண்ணிஞன். அவ்வாறே பெட்டி கீழே இறங்கிவிட்டது. ஒரு வனத்தில் பெட்டியை வைக்து, அதன்மேல் காய்ந்த சருகுகளைக் குவித்து முடிவிட்டு, அவன் நகருக்குள்ளே சென்றான். துருக்கியர்கள் நீண்ட மேலங்கியும் மிதியடிகளுமே அணிந்திருந்ததால், அவன் தன் அங்கியை அணிந்து கால்களில் மிதியடிகளை மாட்டிக்கொண்டு சென்றதில் ளிபரீதம் எதுவுமில்லை.
வழியில் அவன் ஒரு தாதிப் பெண்ணைக் கண்டான். அவள் கையில் ஒரு குழந்தை இருந்தது. அவன் அவளை அழைத்து, அதோ நகருக்கு அருகிலே தெரியும் பெரிய மாளிகை யாருடையது?" என்று வினவினான்.
'அதில் அரசகுமாரி வசிக்கிறாள்.' என்று அவள் கூறினாள். ஒரு காதலனால் அவளுக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படும் என்று சோதிடர் சொல்லியிருப்பதால், அரசரும் அரசியும் அவளுடன் இல்லாத நேரத்தில் அங்கே எவரையும் விடுவதில்லை!" என்றும் அவள் தெரிவித்தாள்.
வாலிபன் அவளுக்கு நன்றிசொல்லிவிட்டு, மீண்டும் வனத்திற்குத் திரும்பிச் சென்றான். அங்கே தன் பெட்டியின்மீது அமர்ந்து கொண்டு, அவன் கேராக இளவரசியின் மாளிகை மாடிக்குப் பறந்து
சென்றான். அங்கு ஒரு சாளரத்தின் வழியாக உள்ளே நுழைந்து இளவரசி இருந்த அறைக்கே போய்ச் சேர்ந்தான்.
அவள் ஒரு கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தாள். அவளுடைய பேரழகைக் கண்டதும் வணிகன் மகன் ஒடிச்சென்று அவளை முத்தமிடாமல் இருக்க முடியவில்லை. இதனால் அவள் திடுக்கிட்டு விழித்தாள். அவன், தான் துருக்கியருடைய தெய்வங்களில் ஒருவன் என்றும், அவளுக்குத் துணையாக இருப்பதற்காக வான வெளியிலே பறந்து வந்ததாகவும் தெரிவித்தான். இதனால் அவளும் வெறுப்படையாமல், மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் அமர்ந்துகொண்டு அந்தரங்கமாகப் பேசத் தொடங்கினர். அவன் அவளுடைய கரிய கண்களைப் பற்றிக் கதைகள் கூறினான். அவைகள் ஆழங் காணாத அழகிய ஏரிகள் என்றும், அவைகளில் தேவ கன்னியர் விழுந்து நீங்திக் கொண்டிருந்தனர் என்றும் அவன் கூறினான். அவளுடைய பிறை நெற்றி பனிமலைபோல் ஒளிர்வதாக அவன் புகழ்ந்தான். நாரைகளைப் பற்றியும், அவைகள் அழகிய சிறு குழந்தைகளைத் தூக்கிச் செல்வது பற்றியும் அவன் கதைகள் கட்டினான்.
கதைகளும் கற்பனைகளும் இனியவைகளாக இருந்தன. பிறகு இளைஞன் மேலும் இனிய சொற்களால் தன் காதலை அவளிடம் தெரிவித்து, தன்னை மணந்து கொள்ள வேண்டினான். அவளும் உடனே 'சரி' என்று இசைவு தெரிவித்தாள்.
அவள் மேலும் கூறியதாவது: அடுத்த சனிக்கிழமை மாலை நீ இவிடம் வரவேண்டும். மாலை ஆறு மணிக்கு அரசரும் அரசியும் தேநீர் அருந்த இங்கே வருவார்கள். ஒரு தெய்வமே தங்கள் குமாரிக்குக் கணவனாக வரப் போவதை அறிந்து அவர்கள் எல்லையற்ற இன்பமடைவார்கள். அன்று நீ எங்களுக்கு ஓர் அருமையான கதை சொல்ல வேண்டும். இப்பொழுது முதலே நினைவில் வைத்துக் கொள்! என் தாய்க்கு உயர்ந்த நீதிக் கதைதான் பிடிக்கும். ஆளுல் என் தந்தைக்கு வேடிக்கையும் நகைச் சுவையும் நிறைந்த கதைதான் பிடிக்கும்.'
நல்லது, அந்தக் கதைதான் எனது திருமணப் பரிசு!' என்று சொல்லி அவன் அவளை அணைத்துக் கொண்டு கூறினான். அவர்கள் பிரியும் நேரத்தில் இளவரசி உடை வாள் ஒன்றை அவன் இடையில் கட்டி அனுப்பினாள். வாளின் உறையின் மேல் தங்கப் பவுன்கள் பதிக்கப் பெற்றிருந்தன. அந்த நேரத்தில் பவுன்கள் அவனுக்கு எவ்வளவு தேவை என்பது அவளுக்குத் தெரியாது.
அவன் வெளியே பறந்து சென்றான். முதலாவதாக நல்ல புதிய மேலங்கி ஒன்றை விலைக்கு வாங்கிக் கொண்டு. அவன் தன் வனத்தை அடைந்தான். சனிக்கிழமை சொல்ல வேண்டிய கதையைப் பற்றி அவன் சிந்தனை செய்யலானான். மற்ற வேலைகளைப் போல், கதை கட்டுவது அவ்வளவு எளிதான காரியமன்று.
சிறிது சிறிதாகக் கதை உருவாயிற்று. சனிக்கிழமை மாலைக்குள் முழுக் கதையும் அவன் மனத்தில் பதிந்து விட்டது. மாலை ஆறு மணிக்கு இளவரசியின் மாளிகையில் மன்னரும், இராணியும், மந்திரிகள் முதலியோரும் ஆயத்தமாகக் காத்திருந்தனர். வாலிபன் வந்ததும், அவர்கள் அனைவரும் மிகுந்த மரியாதையுடன் அவனை வரவேற்றனர்.
எல்லோரும் தேநீர் அருந்திய பின், அரசி, அவன் ஒரு கதை சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். 'கதை ஆழ்ந்த கருத்தும் உயர்ந்த நீதியும் கொண்டிருத்தல் நலம் என்று அவள் கூறினாள்.
'நாங்கள் சிரித்து மகிழும்படியாகவும் இருக்கட்டும்!' என்று சொன்னார் அரசர்.
'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லி, இளைஞன் மூன்று முறை தொண்டையைக் கனைத்துக்கொண்டு கதை சொல்லத் தொடங்கினான்:
'ஒரு வீட்டுச் சமையலறையில் ஒரு கட்டுத் திக்குச்சிகள் இருந்தன. அவைகள் தாங்கள் உயர்ந்த வமிசத்தில் பிறந்தவர்கள் என்ற பெருமையால் தலைகிறங்கி யிருந்தன. தாங்கள் ஒரு மெல்லிய தேவதாரு மரத்தின் குச்சிகள் என்பதுதான் அவைகளின் தலைக்கனத்திற்குக் காரணம். அந்த மரம் வெட்டப்படுகையில், அடிமரம் கப்பல் கட்டுவதற்காகக் கொண்டு போகப்பட்டது; கிளைகள் வேறு பல வேலைகளுக்குப் பயன்பட்டன. மென்மையான பகுதிகள் தீக்குச்சிகளாகச் செதுக்கப்பட்டன. அவைகள் இப்பொழுது இருக்கும் இடம் சமையலறை; ஆயினும் தங்கள் பழம் பெருமையைக் கூறு வதில் அவைகள் சலிப்படைவதேயில்லை. எப்பொழுது பேசிலுைம், "அந்தக் காலத்திலே நாங்கள்" என்றுதான் அவைகள் தம்பட்டம் அடிக்கும். ஒரு நாள் மாலையில் அவை தங்கள் பழம் பெருமையைச் சொல்லிவிட்டு, இருளை ஒட்டுவதற்கு நாங்கள் இல்லாமல் முடியாது!' என்று பேசின.
இதைக் கேட்ட இரும்புச் சட்டி, இந்த வீட்டிலேயே நான் தான் முதன்மையானவள். எதை வதக்க வேண்டுமானலும், பொரிக்க வேண்டுமானுலும் என்னைத்தான் எடுப்பார்கள். நான் இல்லாமல் உணவே தயாராக முடியாது. வீட்டில் சாப்பாடு முடிந்ததும், என்னைக் கழுவி அலமாரியிலே வைத்துவிடுவார்கள். பிறகு நான் நண்பர்களுடன் கதை பேசிக் கொண்டிருப்பேன். என்னுடன் சேர்ந்தவர்களில் வாளிமட்டும் இடையிடையே வெளியே போய்வரும். நான் 1779–4 வெளியே போவதில்லை. கன்னிகா மடத்துப் பெண்களைக் காட்டிலும் நான் ஒதுக்கமாக, அடக்கமாக இருப்பவள். சந்தைக்குப் போய் வரும் கூடைதான் எங்களுக்கு வெளி உலகச் செய்திகளை அறிவிப்பான். நேற்று அவைகளைக் கேட்ட அதிர்ச்சியில் ஒரு பழைய ஜாடி கூடக் கீழே விழுந்து உடைந்து சிதறிப் போய்விட்டது!' என்று கூறிற்று.
"நீ மிகவும் அதிகமாய்ப் பிதற்றுகிருய்!" என்று அருகிலிருந்த தீக்கல் பெட்டி சீறிப் பாய்ந்தது. அது சிக்கி முக்கி என்ற தீக்கல்லில் செய்யப்பட்டிருந்ததால், அதில் எது உரசினாலும் தீப்பொறிகள் பறக்கும். அதுவும் இரும்புச் சட்டியும் பொருத பொழுது அறைப் பொறிகள் பறந்ததில் வியப்பேயில்லை. கடைசியில் பெட்டி, 'மாலைப் பொழுதை நாம் இனிய முறையில் கழிப்போம்!' என்று சொல்லிற்று.
'தீக்குச்சிகள் மறுபடி தலைகளை நீட்டி, நம்மில் யார் யார் உயர் குடிப் பிறப்பு என்பதை முதலில் சொல்லுங்கள்!' என்றன.
'அப்பொழுது ஒரு பீங்கான் தட்டு, "நாம் சொற்பொழிவு செய்ய வேண்டியதில்லை, நண்பர்களாக இருந்து உரையாடுவோம்!" என்று சொல்லித் தன் வரலாற்றைத் தொடங்கிற்று. "முற்காலத்தில் ஜெர்மன் கடற்கரையிலே ஒரு வீட்டு அடுக்களையில் நான் இருந்தேன்."
இதைககேட்ட மற்ற தட்டுகள் யாவும் மேசைமீது துள்ளிக் குறித்து, "எடுப்பே எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது!" என்று ஆரவாரம் செய்தன.
'பீங்கான் தட்டு மேலும் பேசலாயிற்று: "இளமையில் நான் அமைதியான ஒரு குடும்பத்தில் இருந்தேன். அந்த வீட்டில் நாற்காலி, மேசைகள், அலமாரிகள் யாவும் சுத்தமாக இருந்தன. பாத்திரம், பண்டங்கள் எல்லாம் பளபளப்பாகத் துலக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாள் காலையிலும் தரைகூடச் சுத்தமாகக் கழுவப்பட்டிருககும். வாயில் திரைகள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சலவை செய்யப்பட்டிருக்கும். பார்த்த இடமெல்லாம் சுத்தம், சுத்தம், சுததம்தான்I"
இதைக் கேட்டுத் துடைப்பம் தலையை ஆட்டிக்கொண்டு, "நீ எவ்வளவு அருமையாகக் கதை சொல்லுகிறாய்! நீ ஒரு பெண்ணாயிருப்பதால் தான் wரு தாதா. இவ்வளவு தெளிவாகவும் இனிமையாகவும் பேச முடிகிறது!" என்று பாராட்டிற்று. 'மேசை மீதிருந்த தட்டுகள் எல்லாம் எழும்பிக் குதித்து ஆரவாரம் செய்தன. +வாளியும் பாராட்டில் கலந்து கொண்டு ஒருமுறை துள்ளிற்று. அதிலிருந்த தண்ணீ ர் தரையில் சிந்தி எங்கும் பரவிவிட்டது.
தட்டுகளின் கும்மாளம் அடங்கவில்லை. அந்த நேரத்தில் உலர்ந்து கிடந்த மலர் மாலை ஒன்றை எடுத்து வந்து துடைப்பம் பீங்கான் தட்டுக்கு அதைச் சூட்டிவைத்தது. 'இன்றைக்கு நான் தட்டுக்கு மாலை சூட்டினால், நாளை அது எனக்கு மாலை போடும்!' என்று துடைப்பம் பெருமையாக ஒரு வார்த்தையும் சொல்லி வைத்தது.
'பீங்கான் தட்டு தான் ஆரம்பித்தது போலவே கதையைக் குறையும், இனிமையாகச் சொல்லி முடித்தது.
உடனே இடுக்கி எழுந்து நின்று தன் இரண்டு கால்களாலும் நடனமாடிக் காண்பித்தது. அது ஒரு காலை மேசைமீது ஊன்றிக் கொண்டு, மற்ற ஒரு காலை எவ்வளவு உயரம் தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு ஆடிற்று. தெரியுமா ? பயிற்சி பெற்ற நடன மாதர்கள் கூட அதனிடம் தோற்றுப் போவார்கள். அந்த நடனத் தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நாற்காலியின் உறை, களிப்பு மிகுதியால் படீரென்று இரண்டாக கிழிந்துவிட்டது!
'எனக்கு மாலை யில்லையா?' என்று கேட்டது இடுக்கி. அதற்கும் மாலை சூட்டப் பெற்றது.
"இவர்கள் எல்லாரும் தாழ்ந்த சாதியார்கள்!” என்று தீக்குச்சிகள் எண்ணிக்கொண்டன.
'அங்கிருந்த பொருள்கள் யாவுமே கர்வம் பிடித்தவைகளாக இருந்தன. வெந்நீர் வேம்பா தான் குளிர்ந்திருப்பதால், தன்னால் பாட இயலாது என்று சொல்லிற்று. சமையற்காரி எழுத உபயோகிக்கும் பேனா. கூடத்தில் ஒரு கூண்டில் இருந்த குயிலைக் கொண்டு வந்து இசைபாடச் செய்யலாம் என்று யோசனை கூறிற்று. ஆனால் மற்றவர்கள் தங்களிடையே அந்நியர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று எதிர்த்தார்கள். சந்தைக்காரனான கூடை இடையில் தலையிட்டுச் சமாதானம் செய்ய முன் வந்தான். "எல்லோருக்குமே தலைக்கனம் ஏறியிருந்தால், என்ன செய்வது? இந்த வீட்டையே தலைகீழாகக் கவிழ்த்தால்தான் ஒவ்வொரு பொருளும் தான் இருக்கவேண்டிய இடத்தை அறிந்து கொள்ளும்!', என்று அவன் எச்சரிக்கை செய் தான். "அப்படியே செய்வோம்! எல்லோரும் கலகம் செய்வோம்!" என்ற கோஷத்துடன் அங்கிருந்தவர்கள் யாவரும் கிளம்பும் சமயத்தில் சமையற்காரி உள்ளே வந்ததால், ஒவ்வொருவரும் சப்தம் செய்யாமல் தத்தம் இடத்தில் போய் அமர்ந்தனர். அறையில் பேச்சுமில்லை, மூச்சுமில்லை. ஆனால் ஒவ்வொருவரும் தாம் தாம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை மனத்துள் எண்ணிக் குமுறிக் கொண்டிருந்தனர்.
'சமையற்காரி முதலில் தீக்குச்சிகளைக் கொளுத்தினாள். ஆகா, அவைகள் எவ்வளவு பிரகாசமாக எரிந்தன!.
'அந்தக்குச்சிகள் "நாம் தான் முதன்மையானவர்கள் என்பதை எல்லோரும் இப்பொழுது தெரிந்து கொள்வார்கள்! என்று தமக்குள் எண்ணிக் கொண்டன. சிலவிநாடிகளில் அவைகள் எரிந்து சாம்பலாகி விட்டன.'
“சிறந்த கதை! இவ்வளவு நேரம் நான் தீக்குச்சிகளுடன் சமைய லறையில் இருப்பது போலவே எண்ணினேன். என் மகளை நிச்சயமாக மணந்து கொள்ளலாம்!" என்று பாராட்டினாள் அரசி.
'அதுவே சரி!' என்று பகர்ந்தார் அரசர். 'அடுத்த திங்கட்கிழமை நீ எங்கள் குமாரியை மணந்து கொள்ளலாம். இப்பொழுது முதலே நீ எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாகி விட்டாய்' என்றும் அவர் உவகையோடு தெரிவித்தார்.
திருமணத்திற்கு முந்திய நாள் இரவில் நகரெங்கும் விளக்கு களும், தீவட்டிகளும் பேரொளி பரப்பிக் கொண்டிருந்தன. அரச மாளிகைக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்காக உயரேயிருந்து பண்டங்களும், பணியாரங்களும், பிஸ்கோத்துகளும், மிட்டாய்களும் மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. பையன்கள் மரங்களில் ஏறி, ஜே, ஜே!' என்று பேரொலி எழுப்பியும், சீழ்க்கை யடித்தும் ஆரவாரம் செய்தார்கள். எங்கும் கோலாகலமாயிருந்தது.
மணமகனும் சும்மா இருக்கவில்லை. ஏராளமான வெடிகளையும், மத்தாப்பூக்களையும், வாணங்களையும் வாங்கித் தன் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு அவன் உயரே கிளம்பினான். ஒவ்வொன்றாகக் கொளுத்தி வானத்தில் பறக்கவிட்டான். ஆகாயம் எங்கும் ஒளிமயமான பாம்புகள், சக்கரங்கள், வால் நட்சத்திரங்கள், அனல் கோட்டைகள், வேட்டுகள் முதலியவைகள் ஒளிர்வதைக் கண்ட துருக்கியர்கள், உவகையால் துள்ளிக் குதித்தனர். அப்படித் துள்ளுகையில் அவர்களுடைய பாதரட்சைகள் தலைகளுக்கு மேலே பறந்தன.
அத்தனைக்கும் காரணமான மணமகன் உண்மையில் ஒரு தேவனாகவே இருக்க வேண்டும் என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
வணிகன் மகன் வனத்தில் இறங்கிய பின்பு, நகரத்தினுள் சென்று மக்கள் தன்னைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்துவர எண்ணினான். யாருக்கும் இந்த ஆசை இருப்பது இயல்புதானே!
ஆகா, அவன் கேட்ட செய்திகள் எவ்வளவு ஆச்சரியமானவை! ஒருவன், 'அவன் தெய்வம்! அவனை நான் கண்ணாரக் கண்டேன். அவன் கண்கள் இரண்டு தாரகைகள்! அவனுடைய தாடி நுரையோடு கூடிய கடலைப் போலிருந்தது!' என்று வியந்து பேசினான். 'அனல் மயமான பட்டுத் துகிலில் அமர்ந்து அவன் பறந்து சென்றதை நான் கண்டேன்! அவனைச் சுற்றி ஒளிமயமான தெய்வக் குழந்தைகளும் இருந்தார்கள்!' என்று மற்றொருவன் உறுதியாகச் சொன்னான்.
இவ்வாறு மக்கள் பலபல விதமாக அவனைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மறுநாள் அவனுடைய திருமணம் நடக்க விருந்தது. அந்நிலையில் அவன் தான் கேள்வியுற்ற அதிசயச் செய்திகளை அமுதம் போல் பருகினான்.
பொழுது விடியும் பொழுது அவன் வனத்திற்குச் சென்று தன் பெட்டிமீது அமர்ந்து புறப்பட வேண்டும் என்பதற்காகத் திரும்பினான். ஆனால் பெட்டி என்ன ஆயிற்று? அது எரிந்து சாம்பலாகக் கிடந்தது. இரவில் ஒரு வாணம் வெடிக்கும் பொழுது அதிலிருந்து ஓர் அனல் பொறி அந்த மரப் பெட்டியில் பற்றிக் கொண் டது. அவன் அதைக் கவனிக்காது விட்டு வைத்ததால், அது சிறிது சிறிதாகப் பரவி, பெட்டியையே எரித்துவிட்டது.
ஏழைக் காதலன் இனிமேல் பறக்க முடியாது; ஆகவே தன் எதிர்கால இராணியை அடையவும் முடியாது.
அவளோ, அன்று முழுதும் மாளிகை மாடியிலேயே அவனுக்காக நின்று கொண்டிருந்தாள். அவள் இன்னும் தான் காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவனோ, வீடு வாசல் இல்லாமல், உலகில் அலைந்து கொண்டிருக்கிறான். போன இடமெல்லாம் கதைகள் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் அந்தக் கதைகள் தீக்குச்சிகளைப் பற்றிய கதையைப் போல அவ்வளவு நல்ல கதைகளாக இருக்கவில்லை.