அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம் வெறுப்பு! விவாகரத்து தீர்ப்பு!

மதம் வெறுப்பு! விவாகரத்து தீர்ப்பு!


இரு துருவங்கள் இணைய முடியாது என்ற வாழ்க்கைப் பயணத்தில் நடத்து கொண்டிருந்த அன்னி, மீண்டும் கணவருடன் 'சிட்செ' என்ற கிராமத்தில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.


பிராங்பெசண்ட் அதே கிராமத்திற்கு மதகுருவாக நியமிக்கப்பட்டதால் அன்னி அவருடன் அந்த இடத்தில் வசித்தார். இப்போது மதகுரு சம்பளம், நானுாற்றுப் பத்துப் டவுனாக உயர்ந்தது: என்ன உயர்ந்தது என்ன பயன்?


அன்னியின் வாழ்வில் அமைதி அழிந்தது; கணவருடன் சுமூகமான தொடர்பு இல்லை. அடிமையாக அவரிடம் எத்தனை நாட்களுக்கு சண்டை சச்சரவுகளோடு, துன்ப வாழ்க்கை வாழ முடியும்?


மதம்தான் அன்னி வாழ்வின் துயரங்களுக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்! இல்லற வாழ்வுக்கு வந்த இடுக்கண்களுக்குக் காரணமே மதம்தான் என்று உணர்ந்தார்:


கிறித்துவ மதத்திடம் அவர் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் பற்றும் பாசமும் கொண்டிருந்தாரோ, அவ்வளவும் அவருக்கு மத எதிர்ப்பாக உருவெடுத்து விட்டது. நாளாகவாக அந்த எதிர்ப்பு மதத்தை விட்டே விலகிச் செல்லும் வெறுப்பாக மாறியது.


சிடசே கிராமத்து மாதாகோவில் மிக அழகானது. இக்கோவிலுக்கு அருகே மதகுருவுக்கும் வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டில்தான் அன்னியும் கணவருடன் குடியேறி வாழ்ந்தார்.


அந்த கிராமம் ஒரு சிறிய ஊர்: படித்தவர்கள் மிகமிகக் குறைவு. உழவர் பெருமக்களும், தொழிலாளர்களும்தான் அங்கே அதிகமாக வாழ்ந்தார்கள் சில சிறு வியாபாரிகள், ஒன்றிரண்டு பேர் குடி இருந்தார்கள்.


தன்னைப் போல மற்றொரு மதகுரு குடும்பத்துடன்தான் அன்னி தொடர்பு வேறு யாரும் பேச்சுத் துணைக் குக் கிடையாது. மற்றவர்களுடன் பழக்க வழக்கத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கணவருடைய கட்டளை:


அன்னி வழக்கம்போல் புத்தகங்களைப் படிக்க இப்போது ஒய்வு நிரம்பக் கிடைத்தது காரணம், வீட்டு வேலை குறைவுதான்! இந்த ஓய்வுநேரம் அவருக்குக் கிறித்துவ மத எதிர்ப்பு நூல்களைப் படிக்க, சிந்திக்க கட்டுரைகள், கதைகள் எழுதும் வாய்ப்பாக அமைந்தன.


இந்த சமயத்தில் அன்னிக்கு உடல் நலம் பாதிப்படைந்தது. மருத்துவத்திற்காக அவர் லண்டனில் இருந்த தாய் எமிலி வீட்டிற்குச் சென்றார்.


இலண்டனில் நூற்களைப் படிக்கப் போதிய நேரம் கிடைத்ததால் இஸ்லாம், பெளத்தம், இந்து மதம் ஜைன மதம், கிறிஸ்துவ எதிர்ப்பு போன்ற நூற்களைப் படித்து, தனது சிந்தனையை வளர்த்துக் கொண்டார். இந்த நூல்களைப் படித்ததால் அவருக்கு மத நம்பிக்கை தளர்ந்து வந்தது.


இந்த நேரத்தில் தாமஸ் ஸ்காட் என்னும் ஒரு முதிய பகுத்தறிவாளர் தொடர்பு வீடேறி கிடைத்தது ஸ்காட் மத எதிர்ப்புக் கொள்கைகள் அன்னியினுடைய எண்ணங்கட்கு ஏற்றார் போலவே அமைந்தன.


இதை உணர்ந்த அந்த மூதறிஞர், அன்னி தனது கருத்துக்களை கட்டுரை உருவில் எழுதித் தந்தால் அதைப் பத்திரிகையிலே வெளிவர ஏற்பாடு செய்வதாகக் கூறினார்!


அன்னி அதற்கு ஒப்புதல் தந்து மீண்டும் கணவன் வீட்டிற்கு வந்தார். அங்கே கிறித்துவ மதக் கொள்கைகளை மறுத்துக் கட்டுரை எழுதி ஸ்காட்டுக்கு அனுப்பினார்,

அக் கட்டுரையில் கிறித்துவக் கொள்கைகனை மறுத்தார் என்றாலும், அவர் கடவுளை நம்புபவன் முட்டாள் என்று திட்டவில்லை: நாத்திகவாதம் நெடியே இல்லாமல் எழுதியிருந்தார்.


அன்னி மாதா கோவிலுக்குச் சென்று இன்றவழிபாடுகளில் கலந்து கொண்டார். என்றாலும், பிற கூட்டு வழிபாட்டிலோ, மற்றக் கோயில் நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்ளாமல் இருந்தார்.


இந்தக் காரணம், ஏற்கனவே மூண்டிருந்த கணவன் மனைவி எதிர்ப்புப் பிரச்னைகளுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல மோதியது. பூசலும் பிணக்கும் சேர்ந்து அவர்களது இணக்கத்தை முரித்தன! இந்த மனக் குமுறல்கள் இருவரிடையே நாளா வட்டத்தில் வளர்ந்தன.


மத குரு மனைவியே கோவில் சடங்குகளில் கலந்து கொள்ளாமல் இருந்ததை கிராம மக்கள் அவரிடமே சுட்டிக் காட்டி வாதம் செய்தார்கள்! இதை பிராங்க் தனது பணிக்குரிய ஓர் அவமானமாகக் கருதி வீட்டில் குழப்பம் செய்தார்! ஆனாலும், அன்னி இதைப் பொருட்படுத்த வில்லை.


மாதா கோவிலுக்கு அன்னி சென்றார்: மதச் சடங்குகளில் கலந்துகொள்ள அல்ல; இசைப் பயிற்சி பெற்றிட: ஆப்போது கோவிலில் யாரும் இல்லை! கோவில் கதவுகளைத் தாழிட்டார்!


கோவில் மேடை மீது ஏறினாள் யாருமே இல்லாத ஆரங்கத்திலே அன்னி பேசினார்! தங்கு தடை இல்லை! அவை நடுக்கம் இல்லை; சொற்கள் வானத்திலே இருந்து பொழியும் மழைபோல கொட்டின!

சொற்பொழிவை முடித்தார்: தாழ்களை அகற்றினார் அங்கே இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து தனது பேச்சின் தன்மையைக் கண்டு வியந்தார். தன்னால் பலர் முன்னிலையில் பேசமுடியும் என்ற முடிவுக்கு வந்தார்:


தாமஸ் ஸ்காட்டு அன்னியிடம் தந்த வாக்குறுதிப்படி கட்டுரை பத்திரிகையில் வெளிவந்ததைக்கண்டார். அந்தக் கட்டுரை கிறித்துவ எதிர்ப்புக் கட்டுரை என்பதால், அது அன்னி பெயராலே வெளியிடப்படவில்லை.


இந்தக் கட்டுரையை பெசண்ட் உறவினர் ஒருவர் படித்துவிட்டார்; என்றாலும் அதன் எந்த ஒரு கருத்தையும் அவர் எதிர்க்கவில்லை. மற்றவர்கள் படித்தால் என்ன நேரிடுமோ என்று மட்டுமே வருத்தமடைந்தார்.


பிராங்க் பெசண்டிடமும், அன்னியிடமும் கட்டுரைப் பற்றி எடுத்துரைத்தார். இது போன்ற கருத்துக்களை எழுத வேண்டாம் என்று அன்னியைக் கேட்டுக் கொண்டார். அன்னி அவரது அறிவுரையை ஏற்க மறுத்து விட்டார்.


அடுத்து ஒரு கட்டுரையை அதே பாணியில் எழுதி ஸ்காட்டுக்கு அனுப்பி வெளியிட வைத்தார். கோவிலில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலே பலர் பகை அன்னிக்கு வாய்த்தது.


அன்னி உடல் நலம் மீண்டும் பாதித்தது. அதனால் தனது மாமனார் இல்லத்திற்குச் சென்று சிகிச்சை பெற்றார். குழந்தைகளையும் உடன் அழைத்துக் கொண்டு போய் தங்கி வைத்தியம் செய்தும், உடல் நலம் பெறவில்லை.


அதனால், குழந்தைகளோடு லண்டனில் உள்ள தனது தாய் வீடு சென்றார். தக்க மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற்றார். அன்னியின் உடல் பரிசோதிக்கப்பட்டதில், அவருக்கு இதய நோயும், தரம்புத் தளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.


இதய பாதிப்பு உயிருக்கு ஆபத்தை உருவாக்குவது என்று மருத்துவர் கூறியதால், அதற்கான சிகிச்சைகள் அவருக்கு நடந்தன. தாய் வீட்டில் இருந்தவாறே மருத்துவம் செய்து கொண்டிருந்தார்.


பிராங்க பெசண்டிடம், மீண்டும் உறவினர்கள் திரண்டு வந்து அன்னி கட்டுரை பற்றி கடும்வாக்கு வாதம் செய்தார்கள். உடனே பெசண்ட் மனைவிக்குக்கடிதம் எழுதினார். அக்கடிதத்தில்:


"அன்னி உனக்கு மதக் கோட்பாட்டில் நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. ஊராருக்காகவாவது நீ மதச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். கூட்டு வழிபாட்டிலும் தொடர்ந்து பங்கு பெற வேண்டும்,"


"இந்த ஏற்பாட்டிற்கு நீ சம்மதித்தால் திரும்பி வா! இல்லாவிட்டால் அங்கேயே தங்கி விடலாம்" என்று கண்டிப்பாக எழுதிவிட்டார்.


அந்தக் கடிதத்தைக் கண்ட அன்னி, ஒரு முடிவுக்கு வந்தார். மறுபடியும் கூலிகொடுத்துச் சூனியம் வைத்துக் கொள்ளக் கூடாது. அதனால் கணவரிடம் திரும்பிப் போகக்கூடாது என்ற கண்டிப்பான தீர்மானித்துக்கு வந்தார்.


தனது மனதுக்குப் பிடிக்காத மதச் சடங்குகளிலும், கூட்டுக் கூட்டத்திலும் கணவனுக்காகக் கலந்து கொள்வது தனது உள் மனதுக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமானது என்றும், அது வெளவால் வாழ்க்கைக்குச் சமமானது என்றும் கருதி, மேற்கண்ட கண்டிப்பான முடிவை மேற் கொண்டார். தாய் வீட்டிலேயே தங்கி, வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்க முனைந்தார்.


இந்த முடிவைக் கண்ட எமிலி மனம் கலங்கினார். இருபத்தாறு வயது கூட ஆகாத தனது மகளின் வாழ்வு இப்படித் தலைகீழாக மாறிவிட்டதே என வருந்தினார்: கண்ணிக் விட்டார்.


அன்னியின் கால்கள் முன்பே மண்டியிட்டுக் கதறி, "அன்னி உனது முடிவை மாற்றிக் கொள்ளம்மா" என்று மன்றாடினார் எமிலி.


"அம்மா, பெசண்ட்டை விட்டுத் தணியாகப் பிரிந்து வாழ்ந்தால் தானம்மா எனக்கு மன நிம்மதி கிடைக்கும்: அடிக்கடி நோய் வந்து என்னை வாட்டிட எனது மன வேதனைதான் காரணம்! அன்புக் காட்டாத கணவன் ஒருவரிடம் வாழ்வதைவிட நரகமே, மேலம்மா நெருப்பிலே கூடத் தூங்கி விடலாம்; இந்த சர்வாதிகார நெருப்பிலே படுக்கமுடியாது மறுபடியும் நான் கணவனிடம் போய் வாழ்வது, பாம்புடன் கூடிக்கலந்து வாழ்வதற்குச் சமம்! எப்போது அந்த ஆணாதிக்கப் பாம்பு தனது நச்சுப் பல்லால் கொத்திடுமோ என்று பயந்து பயந்து சாகின்ற வாழ்வை எத்தனை நாட்களுக்கு என்னை அனுபவிக்கச் சொல்கிறாய்?" என்று கண்ணிர் விட்டபடியே பெற்ற தாயின் பாதங்களைப் பிடித்துக் கதறி அழுதாள் அன்னி!


இந்த இளம் வயதிலே வாழாவெட்டி என்ற பெயரோடு நீ இருந்தால் கூட, இந்த உலகம் தூற்றுமே உன் பெயருக்குப் பழிவந்து சேருமே என்றுதான் அஞ்சுகிறேன் அன்னி, என்று எமிலி உருகிக் கதறிக் கண்ணிர் விட்டாள். தாயும்-மகளும் இப்படி மாறி மாறி அழுகின்ற சோகத்தைக் கண்டு, இரும்பு கூட தேய்ந்து தேய்ந்து கண்ணிர் விடுமோ” என்ற திலைதான் உருவானது.

உடன் பிறந்த அண்ணன் ஹாரி தழுதழுத்தாரே தவிர, ஓர் ஆறுதலும் ஒப்புக்காகக் கூடச் சொல்லவில்லை. ஆனால, பிராங்க் பெசன்டிடம் விவாகரத்து பெற்றே தீர வேண்டும் என்ற முடிவிலே அவரும் இருந்தார்.


நீதிமன்றம் சென்றது அன்னி விவாகரத்து வழக்கு: விவாகரத்து பெற்றார் தனது கணவரிடம் இருந்து அன்னி. ஆனால், ஆண் குழந்தை ஆர்தர் தந்தையிடமும், பென் குழந்தை மேபல் எமிலி தாயிடமும் இருக்க வேண்டும் என்றும், கணவர் பிராங்க், மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாகத் தர வேண்டும் என்றும் தீர்ப்புக்கூறப்பட்டது: பிள்ளைகள் கதறின: பிராங்குக்கு அப்போதும் கல்மணமே காட்சி தந்தது.


அன்னிக்கு ஜீவனாம்சம் பணம் வாழ்க்கையை நடத்தப் போதவில்லை என்பதை அறிந்த அண்ணன் ஹாரி, ஒரு நிபந்தனையுடன் வீடு ஒன்றைக் கொடுக்க முன் வந்தார்:


அந்த நிபந்தனை என்ன? "மத எதிர்ப்பாளர்களிடம் தொடர்புகொள்ளக்கூடாது மதத்தைப்பற்றி எதுவும் பேசக் கூடாது, என்பதே அது. எந்த நிபந்தனைக்கும் இனிமேல் கட்டுப்படக்கூடாது; அடிமையாகக் கூடாது என்ற முடிவை மேற்கொண்ட அன்னி, தனது அண்ணன் நிபந்தனையையும் ஏற்க மறுத்தார்:


எந்த நிபந்தனைக்கு அடிமையானாலும் சரி, அந்த வாழ்க்கை இருண்ட வீடாகவே இருக்கும். கூட்டில் இருந்து விடுதலைப் பெற்றால்தான் அந்த வாழ்வு சுதந்திரமாக இருக்கும்.


உண்ண உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை, அடைத்து வைத்து அடிமைப்படுத்தாமல் இருந்தாலே போதும். எழிலான சிறகுகளுடன் சிங்காரச்சிறகடித்து சுதந்தர வானிலை பறப்பதுதான் ஏற்றமிகுவாழ்க்கை! சுதந்தரம் என்பது, மனிதன் செய்ய வேண்டிய மாமல்லபுரம்: அஜந்தா, எல்லோரா, சிற்ப ஓவிய எண்ணங்களின் விலை மதிக்க முடியாத ஒன்று: மாண்பு அது! செயல் அரிதாக இருக்கலாம். உலகம் போற்றிப் புகழ்ந்து பாராட்டிடும் பயன்பாடல்லவா? அந்த அடிப்படை உரிமையை யார் பறித்தாலும் விடமாட்டேன்! என்று அன்னி தனக்குத் தானே மனதிலே சிந்தனை ஓவியமாக்கிக் கொண்டார்:


அந்த எழுச்சி எண்ணத்தோடு அன்னி தனது தாயின் வீட்டுக்கு அருகே வாடகைக்கு ஒரு வீடு எடுத்துக்கொண்டு, தனது மகள் மேபல் எமிலியுடன் தங்கினாள்!


வேலை ஏதாவது ஒன்றில் சேரலாம்; தகுந்த வருவாய்க்கு வழி தேடலாம் என்று பலவகையிலும் முயற்சி செய்தார்! ஆனால், அவர் முயற்சி தோல்வியே தந்தது; அதனால், தனக்குத் தெரிந்த தையல் வேலையைச் சுதந்தரமாகச் செய்தார்.


அந்த தொழிலில் போதிய வருமானம் வரவில்லை. வேறு வேலை தேடினார்: அன்னியின் மகளுக்கும் அவருக்கும் உணவும், தங்கிட இடமும் கொடுத்து மதகுரு ஒருவர் அவரை வேலையில் அமர்த்திக் கொண்டார்; ஊதியமும் அதுவாகவே அமைந்தது.


மூன்று மாதங்கள் ஆனதும், அன்னியின் தாயார் எமிலிக்கு உடல்நலமில்லை என்றதும், அன்னி லண்டனிலே உள்ள தமையன் வீட்டுக்குச் சென்று, தனது தாயாரின் அருகிருத்து, அல்லும் பகலும் பணிவிடை செய்து கொண்டிருந்தார். எமிலி உடல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிவந்தது.


ஆனாலும், மீண்டும் எமிலி தேசப்வாய் பட்டார். மரணம் அவரை நெருங்கி விட்டதைக் கண்ட அவரது தாயார், மகள் அன்னிக்கு எந்த ஆதரவையும் தேடி வைக்கவில்லையே என்ற கவலையுடன் மாண்டு போனார்: தாயை இழந்த அன்னியும்-ஹாரியும் கதறிக் கண்ணி விட்டார்கள்.