அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கணவன்-மனைவி இரு துருவங்கள்

3. கணவன்-மனைவி இரு துருவங்கள்


அன்னிக்கு வயது பத்தொன்பது தன் தாயாருடன் அவர் தனது வீட்டுக்குச் சென்றார்: கிராமத்தில் மின்னி என்ற பெயருடைய ஒரு பென்! அன்னிக்கு அவள் உறவினள்! இருவருக்கும் ஒரே வயது தோழிகளாகவே பழகினர்


இவர்கள் கிராமத்துக்குச் சென்றபோது ஈஸ்டர் விழா நாள்; பண்டிகைக்கான ஏற்பாடுகள் அந்த மாதா கோவிலில் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தன!


சில நேரங்கள் இந்த மாதா கோவிலுக்குத்தான், அன்னி தனது நாடோடி ராணி என்ற குதிரை மீதமர்ந்து சவாரி செய்து கொண்டு வருவாள்! கிராம மக்களே அன்னியின் அஞ்சாமையினையும், அவளது அழகுச் சவாரித் தோற்றமும் கண்டு வியந்து போவார்கள்!


அதனால்தான் அந்த மாதா கோவில் என்றாலே அன்னிக்கும் மின்னிக்கும் தனியொரு பாசம் ஏற்படுவது உண்டு.


எனவே, ஈஸ்டர் விழாவிற்காக அந்த இரு கன்னிகளும் சேர்ந்து வண்ண வண்ண மலர்களைக் கொண்டு கோவிலை வண்ண வண்ணமாக அலங்கரித்தார்கள். இறை பணி அல்லவா இளைஞர்களுக்கு ஒரே உற்சாகம் கொண்டாட்டம் அவர்களது கோலாகல ஆர்ப்பாட்டத்திலே கிராமமும் சேர்ந்து கொண்டது!


அந்த விழாவிலேதான் பிராங்க், பெசண்ட் என்ற ஒரு கதிய மனிதர் அறிமுகமானார்: இருபத்தெட்டு வயது பாளை மதபோதகர்! வணிகரின் மகன்! கேம்பரிட்ஜில் கல்வி கற்றவர்:


அன்னி எழிற் பூத்த பருவம் அடைந்தாலும், கள்ளம் கபடு, சூது வாது, உள்ளொன்று புறமொன்று, பேசாத பண்பினள்! எல்லாரிடமும் சரளமாகப் பழகும் தன்மையினள்!


அன்று வரை தனது திருமணத்தைப் பற்றியோ அல்லது குடும்ப வாழ்க்கையைப் பற்றியோ எதுவும் நினைத்துப் பார்க்காத நிலயினள்!


அதனால்தான், கிராமத்து ஈஸ்டர் விழாவின் போது புதிதாக அறிமுகமான பெசண்ட்டுடன் எவ்விதக் களங்கமும் இல்லாமலே பேசினார் அன்னி!


அன்னியின் அழகு, அன்றைய அலங்காரம்: கள்ளமான வெகுளிப் பேச்சு, வடிக்கப்பட்ட சிலை ஒன்றுடன் பேசுவது போன்ற அவளது தோற்றம் அனைத்தும் மதபோதகரை ஈர்த்தன!


இந்த பேரழகுப் பெண்ணை எப்படியாவது திருமணம் செய்து கொள்வது என்று திட்டமிட்டுக் கொண்டார். அன்னிக்கும் யார் இந்த பெசண்ட், என்ன அவன் வரலாறு என்பவை ஒன்றும் தெரியாது அறிமுகம் அன்றுதானே- புதுமுகம் தானே!


காதலரிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதன்றோ திருமணம்: இது எல்லாம் பெசண்டுக்குத் தெரியாது! ஏனென்றால், அவர்கள் இடையே மேரேஜ் சஸ் எ காண்ட்ராக்டு தானே!


பிராங்க் பெசண்ட் ஊருக்குப் புறப்படும்போது அன்னியிடம் வந்து, அன்னி! உன்னை நான் மணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்:


அதைக் கேட்ட அன்னி உடல் சிலிர்க்குமாறு திடுக்கிட்டார்; ஏனென்றால், திருமணத்தைப் பற்றி அவர் நினைத்ததும் இல்லை! தாயார் எமிலியும் அதுவரை திருமணம் என்ற சொல்லையே, அன்னி காதுகளில் ஒலிக்கவும் இடந்தரவில்லை! அதனால் அன்னிக்கு உள்ளம் சிலிர்த்தது:


திருமணம் என்பது தயார் செய்யும் முடிவு. அதற்கு அன்னி எப்படி, திடுதிப்பென்று சரி கூறமுடியும் மத போதகருககு இது கூடவா தெரியாது! தெரியும்; அழகு அவரை ஆட்டிப் படைத்து விட்ட ஆதிர்ச்சி பாவம்:


பிராங்க் பெசண்ட் எதிர்பாராவிதமாகத் திடீரென்று ஐ லவ் யூ ஐ மேரேஜ் யூ என்றால் எப்படி இருக்கும்: ஆதனால் பதிலேதும் கூறாமல் ஆப்படியே சிலைபோல நின்று விட்டார் பாவம் மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று அவர் கணக்குப் போட்டு விட்டார்.

அன்னியிடம், பிராங்க் கேட்ட கருத்தைக் பற்றித் தாயிடமும் கூறாமல் அலட்சியம் செய்து விட்டார். அம்மா தவறாகத் தன்னைப் புரிந்து கொள்ன இடம் தந்துவிடக்கூடாது என்ற அச்சமும் கவ்விக் கொண்டது அன்னியை:


மதபோதகர் சும்மா இருப்பாரா? நேராக எமிலியிடம் சென்றார்: அன்னியை நான் மணந்து கொள்ளப் போகிறேன், என்னுடைய வரலாறு இது, என்று தனது குடும்ப் விவரங்களையும், பணிபுரியும் இடத்தையும் குறிப்பிட்டுக் கேட்டார்.


கோயில் பாதிரியார் என்றதுமே எமிலிக்கு ஒரு திருப்தி பிறந்திருக்கும்; அத்துடன் பிராங்க் பெசண்ட் இன்னி சம்மதம் பெற்றே தன்னிடம் வந்து கேட்டுள்ளாரோ என்ற அரை குறை நினைப்பில், திருமணத்திற்கு அன்னியைக் கேளாமலே ஒப்புக் கொண்டார்.


தாய் சம்மதம் கொடுத்ததை அறிந்த அன்னி வருந்தினார்: திருமணத்தை நிறுத்திடலாமா என்று சிந்தித்தார்: ஆனால், எமிலி வாக்குத் தவறாத ஒரு தாயrயிற்றே! குழப்பமடைந்தாள் அன்னி ஒருவாறு தன்னையே தான் சமாதானப்படுத்திக் கொண்டு, தாய் வாக்குக்கு ஏற்றவாறு ஒப்புக் கொண்டார்:


அந்த நேரத்தில், மான்செஸ்டர் என்ற நகரிலிருந்து எமிலி குடும்ப நண்பர் ராபர்ட்ஸ் என்பவர், சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார்,


அவருடன் எமிலி, அன்னியுடன் கவிட்சர்லாந்து சென்றார்: இயற்கை திருவிளையாடல்களால் அழகு தவழ்ந்த பல இடங்களை அனைவரும் சுற்றிப் பார்த்தார்கள் அங்குள்ள புகழ்பெற்ற மாதா கோவில்களையும் கண்டுகளித்து விட்டு மன அமைதியுடன் லண்டன் வந்து சேர்ந்தார்கன்.

இதற்குப் பிறகுதான், பிராங்க் பெசண்ட் அன்னியின் திருமணத்திற்கான நிச்சயதார்த்தமும் நடந்தது அப்போதுதான் ஹாரியின் ஹாரோ படிப்பும் முடிந்தது! கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலே ஹாரி படிப்பதற்குச் சென்றார்.


அன்னிக்கும் பிராங்க் பெசண்ட்டுக்கும் செயிண்ட் வியோனார்ட்ஸ் என்ற இடத்திலே திருமணம் நடந்தது. இப்போதிலிருந்து அன்னியை அன்னி பெசண்ட் என்று அழைத்தார்கள்.


இங்கிலாந்து நாட்டு நாகரிகப்படி திருமணம் ஆன பெண்கள், தங்கள் பெயருக்குப் பின்னால் கணவன் பெயரையும் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததால், அன்னி என்ற பண் அன்னி பெசண்ட் ஆனார்.


திருமணம் ஆன நாளில் இருந்தே அன்னிக்கும் அவரது கணவருக்கும் எந்தவித மனப் பொருத்தமும் இல்லை; ஏன்?


பிராங்க் பெசண்ட் மதபோதகராக இருந்ததால், அவரது மனம் பழைமையிலேயே ஊறிக் கிடந்தது. அதனால், அவர் பெண்களை அடிமை என்றே கருதி நடத்தி வந்தார்,


வீட்டு வேலைகளைச் செய்பவளே பெண்; அவள் வேலைக்காரிகளை வேலை வாங்கத்தான் தகுதி உள்ளவள்: கணவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கடவுளால் உருவாக்கப்பட்ட ஜென்மமே பெண் ஜென்மம்; மஞ்சத்திலே புரள்வதற்கும், அடி உதைகளை வாங்குவதற்கும் உரியவளே பெண்” என்பது பிராங்க் பெசண்ட் பெண்ணினத்தைப் பற்றி கருத்துடையவர்:


ஆனால், அன்னிபெசண்ட் அப்படிப்பட்டவள் அல்லள்: அவள் சுதந்தரமாக வளர்ந்தவள்; கட்டுப்பாடு என்ற வேலியே அவள் கண்டவளல்ல; ஆணும் பெண்ணும் சமமே என்ற பண்பாடுடன் பழகியவள்; வீட்டு வேலைகளும் செய்தறியாதவள்; வேலைக்காரியிடம் வேலை வாங்கவே தெரியாதவள்; நூல்களைப் படிப்பதும், மத சம்பந்தமாகவும்: இறை உணர்வோடும் ஒழுக்கமாக நடந்து கொள்ளவே பழகியவள். அதனால், கணவன் போக்குக்கும், நினைப்புக்கும் அவனது செயல்கள் விரோதமாகவே இருந்தன.


இத்தகைய கொள்கை எதிர்ப்புகள் கணவன்-மனைவிக்கும் இடையே ஆரம்பம் முதலே உருவாகி விட்டதால், இருவரும் இரு துருவங்களாக மாறிடும் நில ஏற்பட்டு விட்டது.


இந்தச் சூழ்நிலையில் யாரை நோவது? காலத்தை நோவதா? அல்லது அன்னியின் வளரிப்புச் சூழலை நொந்து கொள்வதா? என்று புரியாமல் தம்பதிகள் இடையே மன மாச்சர்யங்கள் வீறிட்டு எழலாயின: குடும்பம், அன்னிக்கு ஒரு நரகமாகவே காட்சியளித்தது.


இந்த மனப்போராட்டத்தின் போராட்டத்தின் வேகத்தைத் தணித்துக்கொள்ள அன்னி நூல்களைப் படிப்பதும், அதைக் கொண்டு சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதுமாக இருந்தாள்.


இவ்வாறு அன்னிபெசண்ட் எழுதிய சிறு கதைகளை ஃபேமிலி ஹெரால்டு என்ற குடும்பத்தூதன் பத்திரிகைக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தாள்.


அந்த ஏடு, அவளின் கதைகளை வெளியிட்டு அதற்குரிய பணத்தையும் அனுப்பி வைத்தது. தனது வாழ்விலே தான் சம்பாதித்துப் பெற்ற பணமல்லவா? அதனால், அந்தத் தொகையைக் கண்டு மகிழ்ச்சிப் பெற்று இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாள்!


சிறுகதை எழுதுவதில் அனுபவம் பெற்ற அன்னி பெசண்ட் நாவலும் எழுதி அதே பத்திரிகைக்கு அனுப்பிய போது, அந்நாவலிலே அரசியல் உணர்வுகள்: ஊடுருவியதால் அதைப் பிரசுரிக்க முடியாமல் திரும்பி வந்து விட்டது,

ஏன் அப்படி அந்த நாவலில் அரசியலைக் கலந்து எழுதினார்? அப்போதைய இங்கிலாந்து நாட்டின் சமுதாயத்தில் பெண்களுக்குத் தன் நிலையைப் போலவே பிற பெண்களுக்கும் இருந்த அடிமை மனப்பான்மை நிலையைத் தான் அன்னிபெசண்டும் தனது நாவலிலே எதிரொலித்தார்!


பெண்கள் திருமணம் ஆகாதபோது வழங்கப்பட்ட சொத்துரிமை, திருமணமான பிறகு பறிபோய்விடும் நிலை இருந்ததை விளக்கி எழுதியிருந்தார்.


நாகரிகத்தில் சிறந்து விளங்கி, இங்கிலாந்து நாடு: பெண்கள் உரிமையை வழங்க மறுத்ததற்காக வருந்தவில்லை- வெட்கப்படவும் இல்லை.


பெண்ணினம், ஆணாதிக்கத்திற்கு அடிமைப்பட்டு வாழும் நிலையே இருந்தது; அதற்காக யாரும் கண்ணி சிந்தவோ, கவலைப்படுவதாகவோ இல்லை என்பதையே அன்னி பெசண்ட் அந்த நாவலிலே படம் பிடித்துக் காட்டினார்.


அந்த காட்சிகள் எல்லாம் அரசியல் உணர்வாக இருப்பதாகக் கூறி, ஃபேமிலி ஹெரால்டு பிரசுரிக்க மறுத்து, எழுதிய கதையைத் திருப்பி அனுப்பி விட்டது:


இங்கிலாந்து தாட்டு ஆட்சியிலே அப்போது எண்ணற்றோர் இவ்விதச் சமுதாயக் கொடுமைகளுக்குப் பலியாகிக் கொன்டிருந்தார்கள். அதிலே ஒருவராக அன்னி பெசண்டும் விளங்கினார்.


இந்த வாழ்க்கைப் போராட்டத்திலேயும் அந்தக் கணவனோடு வாழ்ந்து ஓர் ஆண் குழந்தையையும் பெற்றுவிட்டார் என்றால், அவர் எவ்வளவு சகிப்புத் தன்மையோடு வாழ்ந்திருக்கிறார் என்று நம் போன்றோர்க்குப் புரிகிறது அல்லவா?

அந்த ஆண் குழந்தைக்கு ஆர்தர்டிக்பை பெசண்ட் என்று பெயரிடப்பட்டது. இக் குழந்தை அன்னியின் மனச்சுமையை ஓரளவு குறைத்தாலும், அந்தப் பிரசவத்தால் அவளது உடல் மிகவும் பலவீனமானது: இந்த நிலையில் வீட்டு வேலைகளும் அதிகரித்து விட்டன! அனைத்தையும் அவளே செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாள்!


அந்த பலவீனமான உடல் நிலையிலேயே, அடுத்த ஆண்டில் ஒரு பெண் குழந்தையை அன்னி ஈன்றாள். அக் குழந்தையின் பெயர் மேயல் எமிலி. இவர் தாயாரை இப்படிப்பட்ட கணவன் எதிரில் அழைத்து வைத்துக் கொள்ள விரும்பாத அன்னி பெசண்ட், இரு குழந்தைகள் வேலைகளையும், வழக்கம் போல வீட்டுக்குரிய பணிகளையும் அவளே செய்து மிகவும் நொந்து கொண்டிருந்தாள்!


அதே நேரத்தில் அவளது தாயார் எமிலிச்கு நம்பிச்கையான ஒரு வழக்குரைஞர், அந்த அம்மையாரை ஏமாற்றி இருக்கும் பணத்தைப் பறித்துச் சென்று விட்டான்! அதனால் எமிலி கடன் சிக்கலிலே மாட்டிக் கொண்டு மகளுக்கு வேண்டிய உதவிகளையும் செய்ய முடியவில்லை.


குடியிருந்த வீட்டையும் எமிலி விற்று விட்டார்! மகன் ஹாரியிடமே சென்றுவிட்டார். மகன் தாயை அன்புடன் இருக்கச் செய்த்போதும்கூட, மகள் கவலையே எமிலிக்கு பெருத்த வேதனையைத் தந்துவிட்டது.


இந்த நிலையில் அன்னி பெசண்டின் இரண்டாவது பெண் குழந்தைக்கு மூச்சுக் குழாயில் சளி அடைப்பு: இந்த நிலையிலே அதற்குக் கக்குவான் நோய் இருமி இருமி இளைத்ததுடன் மட்டுமல்ல; பிழைக்குமா அது என்ற சந்தேக நிலையும் ஏற்பட்டுவிட்டது.


குழந்தை படும் வேதனையைக் கண்டு கண்ணிர் விட்டவாறே, இறக்கும் போதாவது அக் குழந்தை நிம்மதியாகச் சாகட்டுமே என்று எண்ணிய அன்னி, அக்குழந்தை சாக மயக்க மருந்து கொடுத்து விட்டாள்.


மயக்க மருந்து குழந்தையின் உடம்புக்குள் சென்றதும் குழந்தை சாகவில்ல்ை மாறாக, குழந்தையின் நோய் குணமானது; சளி அடைப்பு அற்றுப் போயிற்று பிழைத்து விட்டது குழந்தை! இதை அறிந்து அன்னி இறைவனுக்கு நன்றி கூறி, நிம்மதியானாள்:


குழந்தை குணமான பின்பு அன்னியே நோயில் வீழ்ந்தாள்: படுத்தப் படுக்கையானாள்; நினைவை இழந்தார்; சிகிச்சையின் பலத்தால் அன்னி மீண்டாள்!


நோய் அதிகமாகி எழுந்தபோது, அன்னியின் என்னங்களே மாறிவிட்டன: மத நம்பிக்கையிலும் இறை வழிபாட்டிலும் தளர்வு உண்டாகி, விரக்தி விளைந்து, அதுவே மத நம்பிக்கைக்கு விரோதமாகவே மாறிவிட்டது


"என் வாழ்வில் மன அமைதி இல்லை. ஏதுமறியா என் குழந்தை சித்திரவதைக்கு உள்ளாகி உடல் மெலிந்து உருக்குலைந்தது. என் தாயாரோ, துரோகி ஒருவனால் ஏமாற்றப்பட்டுக் கடன் தொல்லையால் அவதிப்பட்டார். ஒளிமிகுந்த என் குறுகிய வாழ்வு அடிமைத் தளையில் சிக்கிச் சீரழிந்தது. நானும் மூன்றாண்டுகளுக்கு மேல் நோயால் அவதிப்பட்டேன். என்னுடைய மத நம்பிக்கை இன்று எனக்கு விரோதியாகி இருக்கிறது. நான் ஆண்டவனைத் தொழுதிட மறந்ததில்லை. அதாவது ஏழைகளுக்கு உதலிட மறந்ததில்லை. ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவிட மறுத்ததில்லை. இருந்தும் அவதிக்கு ஆளானேன்" என்று அன்னி பெசனண்ட் தனது வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருக்கிறார்.


வாழ்க்கையில் அவர் அனுபவித்த கஷ்டங்களே, இறைவனிடம் அன்னி கொண்டிருந்த அணைக்க முடியாத நம்பிக்கையைத் தகர்த்தன. கடவுள் என்பவர் ஒருவர் உண்டா? என்று அன்னி சந்தேகப்படலானார்.


மதகுருவாகப் பணியாற்றிவரும் பிராங்க் பெசண்ட். தனது மனைவி அன்னியும், மகளும் நோயினால் கஷ்டப்பட்ட முழு விவரத்தையும் அறிவார்.


ஆனால், ஒரு மதகுருவுக்கு, குறிப்பாக ஒரு கிறித்துவனுக்கு இருக்க வேண்டிய சாதாரண இரக்கத்தையும் அவர் இழந்துவிட்ட மிருகமானார்.


இரக்கம்தான் இல்லை-போகட்டும், மனைவி, மகள் என்ற பாசத்தோடு இலை மறை காய் போன்ற உதவியையாவது செய்திருக்கலாம் அல்ல்வா?


குடும்பத்தில் கணவன் சரியில்லை; பெற்ற பெண் குழந்தை நோயிலே அகப்பட்டு செத்துப் பிழைத்த அபாய நிலையிலே இருந்து மீண்டது: பொழுது விடிந்து பொழுது போனால் கணவன்-மனைவியிடையே கடும் சச்சரவு சண்டை-கூச்சல்-குழப்பம்.


பெற்ற தாய் எமிலியிடமிருந்து, நம்பிக்கைத் துரோகி ஒருவன் பணப்பறிப்பு செய்து கொண்டு ஓடிவிட்ட துயரம்:


அன்னி படுத்தப் படுக்கையாகவே படுத்துவிட்ட நோயின் கடுந்தாக்குதல்; அம்மா கடனுக்காகக் குடியிருந்த வீட்டையே விற்றுக் கடனைத் தீர்த்துவிட்டு, படுத்து உறங்க சொந்த வீடும் இல்லாத அவலம்.


இவ்வளவு கொடுமைகளும், துன்பங்களும் ஒன்று கூடி, அன்னியை விரக்தியின் விளிம்புக்கு அழைத்துச் சென்று விட்டதால், வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தற்கொலை ஒன்றுதான் முடிவான வழியென்ற முடிவுக்கே வந்துவிட்டார். இதன் எதிரொலி என்ன தெரியுமா?

குளோரோபாரம் என்னும் மயக்க மருத்தைக்கொண்டு உயிரை முடித்துக் கொள்ள தீர்மானித்தார். அந்த மருந்து இருந்த கண்ணாடி புட்டியை எடுத்து அதன் மூடியைத் திறந்து விட்டார்: அப்போது அவரது உள்மனம் எதிரொலித்தது.


"அன்னி நீ ஒரு கோழை! இறந்த கொள்கைகளுக்காக ஆவியைத் தியாசம் செய்யவும் தயாராக இருப்பேன் என்று கூறினாயே! அந்த முடிவு என்னாயிற்று சிறிது கலமே நிற்கக்கூடிய இந்த துன்பத்தைக் கண்டா நீ இறந்து போக நினக்கிறாய்? என்று அன்னியின் மனமே வளைக்கேட்டது.


உள் மனத்தின் எதிரொலியைக் கேட்டு அன்னி மனம் மாறினார். தற்கொலை கோழைத்தனம். அத்துடன் பயங்கமான செயல் என்பதையும் அவர் உணர்ந்தார். அந்த எண்ணத்தைக் கைவிட்டார். கையில் வைத்திருந்த பாட்டிலைத் தாக்கி எறிந்தார். மயக்கமாகக் கீழே சாய்ந்தார். நெடு நேரத்திற்குப் பிறகே அவர் மயக்கம் தெளிந்தது.


வாழ்க்கை ஒரு கரடுமுரடான பாதை அதன் மீது நடத்தால் கல்லும் முள்ளும் குத்திக்காலைக் காயப்படுத்தாமலா இருக்கும்? இந்த துன்பங்கனை எதிர்த்துக் கடப்பதே வாழ்க்கைப் பயணம் என்று உணர்ந்து கொண்ட அன்னி ஒருவாறு தெளிந்து எழுந்து கணவன்-மனைவி இரு துருவங்கள் என்ற பாதையிலே தனது வழிப் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால், துருவங்கள் இரண்டும் ஒரு சேரமுடியாது என்பதை உணர்த்தே நடக்கலானார்!