அன்பு வெள்ளம்/அன்பினைப் பின்
அன்பினைப் பின் தொடர்ந்து செல்க
அன்பு வேண்டும் என்றால், அன்பின் வழி நடந்திட வேண்டும் என்றால், அவ் அன்பின் பொருட்டு, 'நமது' என்னும் அனைத்தையும் புறக்கணித்துத் தள்ளிவிட வேண்டும் அப்படியானால் நாம் அன்பின் வழியில் நடக்கலாம். அந்த அன்பு வழி, முள்கள் நிறைந்ததாகவும் இருக்கும்; செம்மலர்கள் துவப்பட்டும் இருக்கலாம்; எப்படி இருப்பினும் நாம் அன்பு வழி நடப்போம். அன்பினையே பின்பற்றுவோம்; பின்பற்றிச் செல்வோம்.
நம் பணி, அயல் நாட்டில் இருக்குமானால் அங்கெல்லாம் கூட அன்பினைப் பின்பற்றிச் செல்வோம். அன்பு நம்மை அடையாளம் காட்டி அழைக்குமேயானால், அதனை ஏற்று காடோ, நகரோ ஊரோ, குடிசைகள் நிறைந்த சேரியோ எங்காயினும் செல்வோம் அன்பினைப் பின்பற்றி.