அன்பு வெள்ளம்/அன்பில் இருவகை
அன்பில் இருவகை என்பதில் வேறுபடுகிறார் இயேசு
இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த பின்பு ஓர் அழகான காட்சி இன்னும் நமது நினைவில் பசுமையாக நிழலாடுகிறது.
கவ்வும் கடுங்குளிர் மிக்க காலைப்பொழுது, இரவு முழுவதும் கடலில் நெடுந்தொலை சென்று வலை வீசியும் மீனேதும் வலைக்குள் அகப்படவில்லை - இயேசுவின் சீடர்களான மீனவர்களுக்கு.
கடும்பசியும் கடுங்குளிரும் அவர்களை வீணில் வலைவீசிக் கொண்டிருப்பதை விடுத்துக் கரைக்குத் திரும்ப வைத்தது. கரையருகே வரும்போது கரை மேல் ஒருவர் தீமூட்டி ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
அவர்களை நோக்கி "பிள்ளைகளே புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா?" என்றார்.
அதற்கு அவர்கள், "ஒன்றுமில்லை” என்றார்கள். அப் பொழுது அவர், "நீங்கள் படகுக்கு வலது புறமாக வலையைப் போடுங்கள் உங்களுக்கு அகப்படும்” என்றார்.
அப்படியே அவர்கள் வலையைப் போட்டுத் திரளான மீன்கள் அகப்பட்டதனால், அதை இழுக்க மாட்டாதிருந்தார்கள்.
ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த தொண்டனான யோவான், இயேசுவைப் பார்த்து, "அவர் கடவுள்" என்றான்.
'அவர் கடவுள்' என்று சீமோன் கேட்டவுடனே, தான்் ஆடையில்லாதவனாக இருந்தபடியால், தன் மேற்சட்டையைக் கட்டிக் கொண்டு கடலில் குதித்தான்். கரைக்கு வந்தான்். மற்றவர்களும் படகிலிருந்து கொண்டே மீன்கள் உள்ள வலையை இழுத்துக் கொண்டு கரைக்கு வந்தார்கள்.
அவர்கள் கரையிலே வந்து இறங்கினபோது கரி நெருப்பு போட்டிருப்பதையும் அதன்மேல் மீன் வைத்திருப்பதையும் அப்பத்தையும் கண்டார்கள்.
இதுபோன்ற அரிய காட்சிகளுடன் அக் காட்சிகளைப் படைத்த இயேசுவும் நம் நினைவில் கொண்டு பார்க்கலாம். அந்த ஆவல் நமக்கு உண்டெனினும் அதையே திரும்பத் திரும்பப் பார்ப்பதினால் நாம் அடையப் போகும் பயன் ஏதும் இல்லை. ஆனால் நாம் மேற்கண்ட காட்சியினை நினைவுத் திரையிலிட்டுக் கண்டதனைச் சற்றே ஆய்ந்து பார்த்தால் ஒர் உண்மை விளங்கும்.
இயேசு இவ் உலகத்தைத் தம் திருவருள்மொழியால் ஆண்டுகொண்டார். தமது அளப்பரும் துயரங்களால் - பாடுகளால், உலகில் தாம் ஆற்றிட வேண்டிய அத்துணைப் பணிகளையும் ஆற்றிய பின்பு, வானுலகில் மாட்சிமை மிகும் கடவுளின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்க வேண்டிய இயேசு, ஒருகணம் அந்த மேநிலையை விடுத்து, உலகில் தம் தொண்டர்களாக விளங்கிய மீனவர்கள் கடுங்குளிரினையும் கடும் பசியினையும் போக்கிட அந்தக் காலைப்பொழுதில் அவர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்தார் என்றால் என்னவென்பது?
அவர் உலகில், அன்று ஆங்கே தோன்றி அவர்களுக்காக உணவு சமைத்துப் படைத்திட்டது ஏன் என்பதை ஆராய்ந்தால் நமக்கு ஒன்று புலனாகும். புலனாக வைக்கிறார் இயேசு அன்பு, அறம் (Love-charity) என்னும் இருவேறு சொற்களும் ஒன்றுபோல் தோன்றினாலும் வெவ்வேறு பொருள் கொண்டது என்பதனை நமக்கு அறிவுறுத்தவே, தம் மன்பதை அன்புப்பணியின் வாயிலாக விளக்கிடவே, இயேசு அக் காலைப் பொழுதில் கடுங்குளிரில் தொண்டர்களான மீனவர்களுடைய கடும்பசியைப் போக்கிட அவ்வாறு சமைத்துக் கொண்டிருந்தார் , உணவு படைத்தார்.
அவர்கள் இயேசு படைத்த அப்பத்தையும் மீனையும் உண்டபின்பு, இயேசு, சீமோன் பேதுருவை நோக்கி, "யோனாவின் குமாரானகிய சிமோனே! இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாக இருக்கிறாயா? என்றார். அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே! உம்மை அன்புடன் விரும்புகிறேன் என்பதை நீர் அறிவீர்” என்றான். அவன் மொழியில் 'விரும்புகிறேன்' என்பதற்குப் "பிலியோ' (Phileo) எனும் சொல்லினைப் பயன் படுத்தினான்.
இரண்டாம் முறையாக அவர், அவனை நோக்கி, "யோனா வின் குமரானாகிய சிமோனே, நீ என்னிடத்தில் அன்பா யிருக்கிறாயா? என்றார்.
'அன்பு' (Phileo) என்னும் சொல்லுக்கு மாறாக 'அகாபா' (Agapa) என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். அதற்கு பீட்டர் ஆகிய சிமோன் "ஆம்! ஆண்டவரே! உம்மை - அன்புடன் விரும்புகிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றான். இப்போதும் சீமோன் முதலில் சொன்ன சொல்லாகிய "பிலியோ" (Phileo) என்னும் சொல்லினைப் பயன்படுத்தினான்.
மூன்றாம் முறையாக, இயேசு அவனை நோக்கி 'யோனாவின் குமரானாகிய சீமோனோ, நீ என்னை விரும்புகிறாயா? என்றார். இம்முறை மட்டும் இயேசு சீமோன் சொல்லிய பீலியோ என்னும் சொல்லைப் பயன்டுத்தினார்.
இரண்டு முறை 'அகபா' என்னும் புதிய சொல்லைப் பயன் படுத்தினார் இயேசு.
பேதுரு, துக்கப்பட்டான், "ஆண்டவரே! நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்; நான் உம்மை அன்புடன் விரும்புகிறேன் என்பதையும் நீர் அறிவீர்” என்றான்.
இயேசு பயன்படுத்திய இரு சொல்லையும் தொண்டர்கள் அறிந்திருந்தனர். ஆயினும், 'ஏன்? ஆண்டவரே அன்புடன் விரும்புகிறாயா? என்னும் சொல்லுக்கு இருமுறை அன்பு என்னும் சொல்லுக்கு 'அகபா' என்னும் சொல்லினையும் மூன்றாவது முறை மட்டும் அன்பு என்னும் சொல்லுக்கு பிலியோ (Phileo) என்று பீட்டர் பயன்படுத்திய சொல்லையே பயன்படுத்தினர்?' என்று கேட்கவில்லை.
ஆனால் இருவேறு சொற்களுக்கும் (பிலியோ) அன்பு என்னும் சொல்லுக்கும் (அகபா) அறம், அருளிரக்கம் என்னும் சொல்லுக்கும் கிட்டதட்ட ஒரே பொருள் இருப்பினும் இரு சொல்லும் ஒன்றுக்கு மற்றொன்று வேறு பொருள் தருவதாகும் என்பதனைத் தொண்டர்கள் அறியார். ஆனால் இயேசு நமக்கு அவ் இரு சொல்லினையும் வேறுபடுத்திக் காட்டுகிறார்! எப்படி? இயற்கையாக மாந்தருக்கு இருக்கும் அன்பினையும், அவர் உயிர்த்தெழுந்து தொண்டர்களுக்கும் மற்றவர்களுக்கும் காட்சி தந்த பின்பு, இயேசு கொண்ட அன்பினையும் ஒப்பிட்டுப் பார்த்திட முடியும் என்பதனை. 'அன்பு' என்பது இரக்கத்தோடு நின்று விடாமல் மேற்கொண்டு சென்று ஈகை'யாகவும் விளங்குவதுதான்் அன்பின் பொருள் விளங்கும் என்று விளக்காமல், விள்க்கி யிருக்கிறார்.
பங்கமில் செய்கைய ராகிப்பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது - குறள் 9