அன்பு வெள்ளம்/அன்புக்கும் கவர்ச்சி
அன்புக்கும் கவர்ச்சி சேர்ப்போம்
நாம் பிறர்க்கு அளிக்கும் அன்பளிப்பு ஏதாயினும் அதனை கவர்ச்சியுள்ளதாகத்தான் பார்த்து தான் அளிக்கிறோம். அதேபோல, அளிப்பது வழங்குவது என்பதையும் ஒர் அற்புதக் கலையாகக் செய்தல் வேண்டும். நமக்குத் தேவையான, நம்மைத் தொடர்பு கொண்ட அத்தனைக் கலைக்கும் மேம்பட்டு, விளங்கும் கலையாக வழங்கும் கலையினையும் செய்திடல் வேண்டும்.
அந்தக் கலையினையும், அதாவது "பிறருக்கு வழங்குவது” 'அடுத்தவர்க்கு அளிப்பது' என்னும் கலையினையும் வழங்கு வது, அளிப்பது, நம் கடமைகளுள் ஒன்று எனக் கருதாமல், 'மனித நல நாட்டக் கடன் என்னும் நினைவில் - நிலையிலிருந்து, வழங்கு கின்ற, அளிக்கின்ற கலையாக மாற்றிக் கொள்ள வேண்டும். இயேசு வழங்கியது எல்லாம் ஏன் எதற்காக என்பதனைப் புரிந்து கொண்டு, அத்தகு உயர்ந்த நோக்கில் அன்பின் அடிப்படையில் வழங்குத்ல் வேண்டும். இயேசு கிறித்து, எண்னம், மொழி, செயல் அளித்ததன் - வழங்கியதன் திறன் அறிந்து - பொருள் அறிந்து வழங்கினார். அதனை நாம் கற்றுத் தெறிந்து தேர்ந்து பின்பற்றியே நாம் நல்லது எதை வழங்கினாலும் அளித்தாலும் பிறர்க்கு வழங்க வேண்டும். அளிக்க வேண்டும், தருதல் வேண்டும்.
கொடுப்பது அளிப்பது வழங்குவது தருவது அல்லது செய்வது ஆற்றுவது புரிவது ஆகிய எதைச் செய்தாலும் அதனோடு அன்பினைக் கலந்தால், அது பெறுபவரின் மனத்தில் - பெற்ற மகிழ்ச்சி நிறைவதோடு தெய்விக மணமும் சேர்ந்து கமழும்.