அன்பு வெள்ளம்/இறைமைக்குக் கிடைத்த

இறைமைக்குக் கிடைத்த விடை - அன்பின் உறவு

ன்பின் வழி என்பது, அன்பு நெறியில் நடப்பது ஆகும். அன்பு வாழ்க்கை என்பது புதிய உடன்படிக்கையின் நெறியில் வாழ்வது ஆகும். -

அன்பு நெறி பிறழ்ந்து அடியெடுத்து நடந்தோம் என்றால் அது, இயற்கையின் போக்கிற்கு மாறுபட்ட நெறியில் நடிக்கிறோம் என்று பொருள். எவ்வெப்போது நாம் அன்புக்கு மாறுப்பட்டு செயல்படுகிறோமோ அவ்வப்போதெல்லாம் நாம்.இறைமையின் போக்கிற்கு மாறுப்பட்டுச் செயல்படுகிறோம் என்று ,ெஒருள். நம்முடைய முறையீட்டுக்குச் சரியான விடை பயன் கிடைக்கவில்லை என்றால் நாம் எல்லாம் ஒரே வகையான வினாவைத்தான்் அதாவது, "அன்பு நெறிவிட்டு விலகி நடக்கி றோமா?" என்றுதான் கேட்கிறோம்.

யோவான் 3:13:20 "என் உடன்பிறந்தோரே! உலகம் உங்களைப் பகைத்தால் வியப்படையாதீர்கள்".

நாம் உடன்பிறந்தோரிடத்தில் அன்பு கூருகிறபடியால், சாக்காட்டைவிட்டு நீங்கி, வாழ்விற்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். உடன்பிறந்தோரிடத்தில் அன்பு கூராதவர், இறப்பிலே நிலை கொண்டிருக்கின்றனர்.

தன் உடன்பிறப்பைப் பகைக்கிற எவனும் மானுடக் கொலை காரனாயிருக்கிறான். மானுடக் கொலைஞன் எவனோ அவனுக்குள் பெருவாழ்வு நிலைத்திராது என்று அறிவீர்கள்.

சான்றோர் தம்முடைய வாழ்வை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் உடன் பிறந் தோருக்காக வாழ்வைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

ஒருவன் இவ் உலகச் செல்வம் உடையவனாயிருந்து, தன் உடன்பிறந்தான்ுக்குக் குறை உண்டென்று கண்டு, தன் நெஞ்சத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலை கொள்கிறது எப்படி?

என் பிள்ளைகளே! உரையினாலும் நாவினாலும் அல்ல செய்கையினர்லும் உண்மையினாலும் அன்பு கூரக் கடவோம்.

இதனாலே, நாம் நம்மை உண்மைக்கு உரியவர்களென்று அறிந்து, நம்முடைய நெஞ்சத்தை அவருக்கு முன்பாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

நம்முடைய நெஞ்சமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால் தேவன் நம்முடைய நெஞ்சத்திலும் பெரியவராயிருந்து அனைத்தையும் அறிந்திருக்கிறார்.

இயேசுவின் திருப்பெயர், நமது கடவுளிடம் சென்றடையும் வழி வாய்ப்புத் தருகிறது. ஆனால், நாம் அன்பு நெறியை விட்டு விலகுவோமானால் - விலகிச் சென்றோமானால் பிறகு இயேசுவின் திருப்பெயரைச் சொல்லுவதால் நமக்கு எவ்வகை மதிப்பும் கிடையாது. அன்பு நெறியில் நடந்திடத் தக்கவரானால் மட்டும் நாம், நமது ஆண்டவராகிய இயேசுவின் திருப்பெயரைக் கூறலாம்.

அன்பு நெறியை விட்டுச் சென்றால், நமது கடவுளுடன் நமக்கு வாய்த்துள்ள தோழமை - நெருக்கம் தடைப்படும்; நமது பேரன்பு - பற்றுறுதி தளரும்; தூய திருமறை நம் நெஞ்சத்திற்கு ஏறத்தாழ மூடப்பட்டதாகிவிடும்.

அன்பு என்பது உலகிலேயே எளிதான் ஒன்று.

அன்பு என்பது கடவுளின் திருவருள் வெளிப்பாடு என்பது நமக்கு உணர்த்திடப்பட்டுள்ளது.

இயேசுவில் புதிதாகத் தோற்றுவித்த குடும்பத்தின் புதிய திட்டம் என்பது என்னவெனில் 'நாம் நம்மில் ஒருவரை மற்றொருவர் அன்புடன் விரும்புகிறோம் - இயேசு ஆண்டவர் நம்மை அன்புடன் விரும்பியது போல' என்பதுதான்.

நாம் நோய்வாய்பட்டு, அந் நோயிலிருந்து குணமாகவில்லை என்றால், அதற்கான விடை என்ன என்பதைவிட நாம் அன்பு நெறியில் நடக்கிறோமா? என்பதுதான்் நம் வினாவாக இருத்தல் வேண்டும்.

பெரும்பாலான மக்கள், நோய்வாய்ப்பட்ட பின்பு தன்னலமிக்கவர் ஆகின்றனர். இந்தக் கருத்து அனைவருக்கும் பொருந்தாது. ஆனால் பலருக்கும் இது பொருந்தும். நோய்வாய்பட்டவரை அவர்தம் குடும்பத்தினர் அனைவருமே அவர் பக்கத்திலிருந்து கவனித்து வருகிறார்கள். வேண்டிய பணிவிடைகள் செய்கிறார்கள். இருந்தும் அவர்கள் தன்னலத்தாலேயே அன்பின் பெரு வெளியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அந்த அன்பின் பெரு வெளியில் இருந்து சரியான விடை - பயன், வேண்டுதல் மூலம் அவர்களுக்குக் கிடைக்கிறது.

நாம் நோய்வாய்ப்பட்ட பொழுது நமக்காக யாரேனும் ஒருவர் வேண்டுவதால் நம்மைக் குணப்படுத்துகிறார் என்றால் அதனைக் கருத்தில் கொண்டு நாம் தொடர்ந்து அன்பு ந்ெறியில் நடந்துவரல் வேண்டும். இல்லையென்றால், நமக்காக வேறு எவர் வேண்டுதல் செய்தாலும் நோய்வாய்ப்பட்டதிலிருந்து நாம் மீளப் பெறுவதில்லை என்பது திண்ணம்.

வெறும் சொற்களால் மட்டும் நாம் அன்பு கொண்டவராக அன்பு நெறியில் நடப்பவராக ஆகமுடியாது. உள்ளபடியே நாம் அன்பில் நடந்திட வேண்டும். அன்புள்ளவராக - அன்பினால் வாழ்பவராக வேண்டும். நாம் அன்பு நெறியில் நடப்பவரானால் ஒருவர் மற்றொருவருடைய துன்பங்களையும் நாம் ஏற்க வேண்டும். ஏற்று அடுத்தவர் துன்பச் சுமைகளைக் குறைத்திட வேண்டும். அதுவே உண்மை அன்பு நெறியில் நடப்பவர்க்கு இலக்கணம்.

'அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை’.

கலி-133