அமிழ்தின் ஊற்று/நீ யார்?

நீ யார்?


புதிதான் உணர்ச்சி வானில்
பூத்திட்ட சோதிப் புள்நீ !
புதிதான் எண்ண யாழில்
புதைந்தெழும் இசை மணம்நீ!
புதிதான் இதயப் பாட்டில்
பொருள்நிறைக் காவி யம்நீ!
புதிதான் அனுப வத்தில்
புகழ்தரும் உண்மை யும்நீ!


கண்ணீரும் புன்சி ரிப்பும்
கண்டஓர் அற்பு தம்நீ !
எண்ணங்கள் ஒன்று கூடி
எடுத்தஓர் பொற்கோ யில்நீ!
மண்ணுெடு விண்க லந்து
மணந்திடும் அழுத மும்நீ!
பெண்ணுெடிங் காண்க லந்து
பெற்ற ஒர்செல்வ மும்நீ!

ஊழுழி கனவார் வத்தில்
உயிர் பெற்ற சிற்பக் காநீ
ஊழுழி செயலார் வத்தில்
உருப்பெற்ற தூய்த மிழ்நீ!
ஊழுழி இதயார் வத்தில்
ஓங்கிய மழைமின் னல்நீ!
ஊழுழி, அன்பார் வத்தில்
உலவிய காதற் பாநீ!