அமுதவல்லி/எல்லைச் சக்தி

6. எல்லைச் சக்தி

‘விந்தையான விமரிசனம் ஆமாம்; உன் சிந்தை தடு மாறாமல் பார்த்துக்கொள். உண்மையிலேயே நீ என்னை விட ஆடலில் சிறந்தவளென்றால், நீ சற்று முன் பெண்ணுள் ஆணாகிச் சூளுரைத்தாயே, அந்தச் சூளுக்கு-சவாலுக்கு-சபதத்துக்கு வெற்றி சொல்ல வேண்டுமென்றால், நீ அந்தப் பார்வதி யாகிவிடக்கூடாது. நினைவில் கிறுக்கி வைத்துக் கொள். உன் பேதை மனம் கிறுக்காகிவிடப் போகிறது. உஷார்! சிவபிரானால் சிந்தையொடுக்கப்பட்ட சக்தி யாகி, தில்லையில் போய் எல்லைக்கல்

பதித்துவிடக் கூடாது!...

நடன உலகம் அப்பால் உன் பெயருக்குப் பாரதம் பாடி விடும்...அது மட்டுமா? பரணியும் புனைந்து விடுவார்கள். நிஜமாகவே உன் விமரிசனத்திலே விந்தை என்ற சொல்லை அடைமொழியாக்கி விடாதே! போட்டியிடப் போகிறவனே தன் எதிர்க்கட்சிக் காரிக்குப் பாடம் படித்துக் கொடுக்கிறானே வென்று எண்ணி அப்படி உன் மீன் விழிகள் துடிக்கின்றனவோ?-சொல், உன் கண்களிடம்; நான் நாளை உன்னைச் சந்திக்கிறேன்-நடன அரங்கிலே! அல்ல, அல்ல!... எல்லையிலாப் பெருவெளிக்கு எல்லை கிழித்துக் கிடக்கும் மயானத்திலே, சக்தியின் அகந்தை ஒடுக்கக் கால் மாறிக் குனிந்துக் குழை I 30 அமுதவல்லி

நக்கிய பிஞ்ஞகனாக நாளை உன்னைச் சந்திக்கின்றேன். ஹ ஹ் ஹா! ... ஹ ஹ் ஹா...’

“மறந்து விடாதீர்கள் உங்கள் சபதத்தை” குளுரையை-வாதத்தை! ... நடன ரஸிகர்கள் தீர்ப்புச் சொல்லட்டும்; நாளை விடியட்டும். துரைராஜன் நடனத்தில் சிறந்தவரா? இல்லை, பார்வதி சிறந்தவளா?-அதோ, கலைங்கிரியிலே, வெள்ளைப் பணி மலை மீதிலே-ஏன், அந்த அலகிலா விளையாட்டுடை யானை முகத்தில் கூட இந்தக் கேள்விகளுக்குப் பதில் பிரதிபலிக்கிறதே?... என் மாதா பராசக்திகூடச் சொல்லாமல் சொல்லி என்னை ஆசிக்கிறாளே, வெற்றி என் பக்கம் தானேன்று! சந்திப்போம். நாளை!. ஹ ஹ்ஹா! ஹஹ் ஹா!... இந்தப் பார்வதிக்குத் தான் வெற்றி, வெற்றி, வெற்றி!’

“இந்தத் துரைராஜனைச் சுட்டெரித்து, அவன் சாம்பலைப் பூசிக்கொண்டு தான் நிற்கப் போகிறேன். அப்பொழுது தான் என் நாட்டியம் நிறையும். ஆமாம்; வெற்றி எனக்கேதான்! நான் பார்வதியல்லவா? என் அகந்தையை அந்தச் சிவனே கூட மாற்றவோ, மாற்றுக் குறைக்கவோ, முடியாது. நான் பார்வதி! “

நிஜமாகவா?”

“ஆம்” என்னுடைய அன்னை சக்தியின்மேல்

ஆணை .. இது மெய்யான சேதி, சகுந்தலா.’

“அப்படியென்றால்; நீ சோமநாதனைத் தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாயா? உனக்கு நடனம் பயில்வித்த-உன்னைக் காதலித்த, பூவை எஸ். ஆறுமுகம்

துரைராஜனைக் கைவிட்டு விடத் தீர்மானித்து விட்டாயா, பார் வதி?...’

“ஆமாம்; நூற்றுக்கு நூறு உண்மை. போட்டியாம்- போட்டி! நாட்டிய உலகம் என்னை வானளாவப்புகழ்கிறது; இந்தத் துரைராஜன் என்னை வாய் கொண்ட மட்டும் தூற்றுகிறான். பார்க்கிறேன்!. இன்றைய நடனப் போட்டியிலே எனக்கே தான் வெற்றி!’

“அப்படி யென்றால், உன் மலர் மாலை .?’

‘சோமநாதனின் அழகுக் கழுத்துக்கேதான்!”

‘சபாஷ், நீல கண்டா! உன் புத் திசாலித் தனத்துக்கு யாம் பெரிதும் மெச்சினோம். இந்தா, பிடி உத்தரீயத்தை!’

‘நான் தப்பித்தேன், துரை. அந்தி நெருங்குகிறதல்லவா? தில்லையிலே கல்லுருவாகச் சமைந்து நிற்கச் சபித்த அந்த ஒரிஜினல் பிரானாகவே நீ வடி வெடுத்து, ஒரு சாபம் இட்டது போதாதென்று. எங்கே என்னை யும் வேறு சபித்துவிடப்போகி றாயோ என்று உயிர் நடுங்கிப் போனேன். நல்ல வேளை, நான் தப்பித்தேன், பிழைத்தேன்!”

‘அஞ்சேல்...’

‘அபயம்!”

“பேஷ், பேஷ்!”

“சோமநாதன் வாயில் மண்போட வேண்டும்!”

அதை நான் ஏன் சொல்ல வேண்டும்? என் வாயில் நீ சர்க் கரையைப் போட்டு விடுவாயல் லவா...?’’  அமுதவல்லி


“நண்பா, வெற்றி எனக்கே தான், தீட்டிய இடத்திலேயே பதம் பார்க்கக் கனவு காண்கிறாள் பேதை பார்வதி. எனக்கு வெறி ஏறுகிறது. அது புகழ் வெறி: கலைவெறி! நான் பயில்வித்தேன். அவள் புகழ் பெறட்டும்; ஆட்சேபணம் ஏதும் எனக்குக் கிடையாது. ஆனாலும், பெண் பிறவிக்கு அகந்தை கூடா தல்லவா? பார்க்கலாம், யாருக்கு வெற்றி என்று : தமிழ்க்கலைக் கூடம் இன்று இரவு வழங்கப் போகும் தீர்ப்பைக் கண்டு உலகம் மூக்கில் விரலை வைக்கப் போகிறது. அவளுடைய விசிறிகள் தேவைப்படத்தான் போகின்றன. நீலகண்டா, நல்ல காலம், அந்த சிவசக்தி நடனத்தை எனக்கு நீ நினைவுபடுத்தினாப்!”

“ஆமாம்...’

‘வெற்றி இந்தப் பார்வதி கொழுநனுக்கே தான்!’’

‘என்ன, பார்வதி கொழுநனா?”

“ஆம்; சிவன் என்று அர்த்தம்!”

‘ஒஹோ!’

“ஆஹோ!’

‘ஆஹா அற்புதம்!... தாம் தித் தாம், தை தித்தை!. வெகு நேர்த்தி!...”

“சிவபிரானும் பார்வதியுமே நேரில் பூலோகத்துக்கு விஜயம் செய்து விட்டார்களா, என்ன? ஆஹா! பூவை எஸ். ஆறுமுகம் 133

தேவர்கள், நாரதர், கின்னரர்! மயானத்தாண்டவம்...!”

4.அதோ, சிவனுக்கு வெறி மூண்டு விட்டதே...?”

பார்வதியின் பாதங்களிலே எத்தகைய இந்திர ஜாலம் என்ன குழைவு ஸ்வரஜதியில் தான் எத் துணை ஜீவன், கற்பனை!”

‘தன்னை மறந்தலயம் என்கிறார்களே, இதுதானா? சிவனுக்கும் போட்டி வெறியா? சக்தியைத் தோற்கடிக்கச் செய்யும் சாகஸமா ? ஆ குழை நழுவி விட்டதே?’’

‘சங்கரியின் கண்களிலே ஏன் இந்தக் கலக்கம்?... சக்தி தான் பெரிதா?’’

“ஆஹா, அதோ, ஆதி கால் தூக்கி ஆடி அந்தக்

குழையைப் பாதத்தால் எடுத்துக் காதில் அணிந்து கொள்கிறாரே?’’

“சக்தி தோற்றுவிட்டாள்! அவள் பெண் தானே? அவளால் அப்படி முடியுமா, பாவம்?’’

“ஐயா, ரசிகரே? அதோ பாரும், சிவனுக்குப் போட்டியாக சக்தி காலைத் தூக்கி ஆடிவிட்டாள்...! சக்தி தான் ஜெயித்தாள். அவள் எங்கள் இனமல்ல ) வா ? ...”

“ ஆ!’

“ஐயோ, அக்ரமம்! புராணம் ஏடு திருப்பப்பட்டு விட்டதா?’’

‘நடனத்திலா?”

“இல்லை. நடப்பு உலகத்துக்கு."  அமுதவல்லி

“விசித்திரமான புராணக் கற்பனை !’ ‘அதிசயமான போட்டி!’

‘அர்த்தமில்லாத காதல்!” “அற்புதம்!”

மோசம்...படுமோசம்!”

‘நீ பெண் அல்ல!...பேய்! காளி! இவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்திலே நீ அந்தப் பயலுக்குப் போட்டியாகக் காலைத் தூக்கிச் சமமாக நடனம் ஆடி விட் டாயே? நிருத்ய ஆசிரியரின் மகனான நானா-இந்தச் சோமநாதனா இனி உன்னை ஏறெடுத்துப் பார்ப்பேன்? அது வெறுங்கனவு. சில பிரானுடன் போட்டிபோட்டுத் தோற்ற அந்தக் கல்வழகி - எல்லைச் சக்தி கூட உன்னுடைய இந்தத் துணிச்சலைக் கண்டுதில்லை கவிழ்ந்திருப்பாளே? நீ பெண்ணா? நீ காளி!... மகா துர்க்கை!... ஒடு, திருவாலங்காட்டை விட்டுத் தில்லைக்கு ஒடு!...”

“ஆண்மையுள்ள ஆணழகரே, நிறுத்துங்கள் உங்கள் சொற்பொழிவை. நான் பெண்; அசல் தமிழ்ப்பெண். உலகம் தெரிந்தவள்தான் நான். அந்தத் தில்லைச் சக்தியா நான், அப்படிக் கால் தூக்கி நடனம் ஆடாமல் இருக்க? நான் பார்வதி அல்லவா? பார்வதி ஒரு நாளும் அந்த துரைராஜனுக்குத் தோற் றவள் அல்ல! ஞாபகம் இருக்கட்டும், மிஸ்டர் சோம நாதன் தாங்கள் இனி என்னை ஏறெடுத்துப் பார்க்கவே வேண்டாம்; கண்களை மூடிக்கொண்டு ஜபம் செய்யுங்கள். நீங்கள் கண்ணை மூடுவதற்கு எவளாவது ஒர் அபலை வந்து உங்கள் கண்களைத் திறப்பாள்...’ பூவை எஸ். ஆறுமுகம்

“வார்த்தைகள் அளவுக்கு மிஞ்சிக் கனம் பெறுகின்றன. அப்படியென்றால், நடன நாடகம் என்ன ஆவதாம்? அதன் உயிர்க் கருத்து என்ன ஆவதாம்?’’

  • அது தூசுக்குச் சமானம். சிவனுக்கு அந்தச் சக்தி தோன்றிருக்கலாம். இந்தப் பார் வதி நடனத்தில் எவனுக்கும் சளைக்கமாட்டாள்; தோற்கமாட் டாள்; என் சபதம், சூளுரை, வெற்றி பெற்றுவிட்டது. நான் நடன ராணி பார்வதி!...”

இந்தப் பதிதையின் நிழல் பட்டாலே நமக்குப் பாவம்... வாருங்கள் அப்பா! ...’

ஒடுங்கள்!.. இல்லையென்றால், உங்களைச் சபித்துவிடுவேன். உள்ளத்தைப் புரிந்து கொள்ளத் திராணியில்லாத-நடனத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள மூளை இல்லாத நீங்கள் எங்கள் தமிழ் நாட்டுக்குத் தேவையேயில்லை. ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்; இந்தப் பார்வதி பண்பை உயிராகக் காக்கும் தமிழ்ப் பெண்.’

‘பார்வதி, நடனத்திலே நான் தோற்றேன் என்றே வைத் துக்கொள்; நான் வருந்த மாட்டேன்... ஆனால், நான் போட்டியிலே வெற்றி பெற்றுவிட் டேன். தோற்றவன் வெற்றி பெற்ற கதை தான் இங்கேயும் நடக்கிறது. எப்படியோ, என் நாடகம் பலித்துவிட்டது. ஆமாம்; காதல் போட்டியிலுங்கூட நான் தான் உனக்குச் சமம்?. இந்தத் துரைராஜன் அந்தச் சோமநாதன் அல்லவே?...’

‘அன்பரே, என்னை எல்லைச் சக்தியாக ஆக்கத் தீர்மானித்துவிட்டீர்கள் போலும்!,. நான் தமிழ்ப் பெண் பார்வதி!. நீங்கள் எனக்கு நிழல் தர விரும்பினால், அது என் பூஜா பலன் தான்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=அமுதவல்லி/எல்லைச்_சக்தி&oldid=1663790" இலிருந்து மீள்விக்கப்பட்டது