5. இனி. . .!

ஊர்ப் பஞ்சாயத்துக் கேணியடி திமிலோகப்பட்டது-!

பூங்காவனத்தின் ஆசை மச்சான், ஆணழகன் சிங்காரவேலன் லாரியில் தாறு மாறாக அடிபட்டுச். சாகப் பிழைக்கக் கிடக்கிறானாம்!

ஊர் வாய் பேசியது; பேசுகிறது.

பாவம் டி! நம்ம பூங்காவனம் -! நீ சொல்லுறது நூத்திலே ஒரு சேதி தாண்டி, அஞ்சலை! தன்னோட உசிருக்குசிரான மச்சான் பேரிலே உசிருக்கு உசிராகப் பாசமும் நேசமும் வச்சிருக்கிற பூங்காவனம், விதியோட எழுத்திலே பாவப்றபட்ட சென்மம் ஆயிடாமல், ஆத்தா அங்காளம்மையோட புண்ணி யத்தினாலே மஞ்சளும், மஞ்சள் தாலியும் ஆசீர்வாதம் செய்கிற நல்ல புண்ணியவதியாக ஆகிப் பூடனும்!"

“ஆமாடி-ஆமா!’

நல்ல மனங்கள் உருகின.

இளைய வெயில் உச்சிப் பனைக்குத் தாவியது.

உண்மைக்கு அசலான, அச்சான இன்னொரு பெயர் தான் வாழ்க்கை!

ஆகவே தான், வாழ்க்கைக்கு உண்மை-உண்மை நிலை ஜீவ நாடியாகவும், ஜீவ கீதமாகவும் பூவை எஸ். ஆறுமுகம் ‌‌119 __________________________________

அமைந்திட வேண்டுமென்பது விதியாகவும் விதியின் விதியாகவும் அமைகிறது; அமையவும் வேண்டும்!

  உண்மை கொடிகட்டிப் பறந்திடவும் சத்தியமும், தருமமும் ஆனந்தக் கும்மி கொட்டிடவும் வாழ்ந்து காட்டத் துணிந்தவன் தான் பூங்காவனம்! ஏழ்மைக்குப் பிரதிநிதி தான். இருந்தால் என்னவாம்? அவள் மனம் விலைமதிக்க முடியாத சொக்கப் பச் சையாக அமைந்துவிட்டதே? போதாதா? 'போதும்' என்கிற மனம் அமைத்ததே அவளுக்குக் கிட்டிய பூர்வ ஜன்மப் புண்ணியம் தான்! ஆனாலும், அந்தப் புண்ணியத்தை மண்ணைக் கவ்வச் செய்யத் துணிந்த பாவப்பட்ட சோதனைகள் ஒன்றா, இரண்டா?
   குளமங்கலம் மண்ணுக்குக் குடிக் காணியாட்சிப் பாத்தியம், கொண்டாடிக் கொண்டிருந்த ஆண் பிள்ளைச் சிங்கம் வீரமுத்து, கண்டிக் கங்காணி கனக முத்துச்சேர்வைக்காரரின் பேரப்பிள்ளையாண்டான் என்னும் உறவையும் உரிமையையும் சவால் விட்டு. மெய்ப்படுத்திக் காட்டு பவன் மாதிரி, தன் முறைப் பெண்ணான அத்தை மகள் பூங்கா வனத்தை அடைந்திட ஒற்றைக் காலிலேயே தவம் செய்யலானான்!
  ஆனாலும், சூரப்புலி வீரமுத்துவை விடுதலைப் புலியாக- அதாகப்பட்டது, குரத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட வெறும் புலியாக ஆக்கி வேடிக்கை பார்க்கவும் வேடிக்கை காட் டவும் புரட்சித் தமிழச்சியாகவே பூங்காவனம் அமைந்து விட்டாள்.
  ‘முடவன் எவனுமே கொம்புத் தேனுக்கு ஆசைப்படக்கூடாது என்கிற அனுபவச் சட்டத்தைக்கூட புரிஞ்சுக்கிடத் துப்புக் கெட்டுப் போயிட்ட துப்புக்கெட்ட என்னோட அம் மான் மகன் வீரமுத்து 120                  அமுத வல்லி

__________________________________

எனக்கு முறை மாப்பிள்ளையாக இருக்கலாம். அதுக்காக, அந்த வீரமுத்துவுக்கு நான் வாக்கப்பட்டு அவனுக்கு முந்தானை விரிக்க வேணும்னு எங்காச்சம் விதி இருக்கா என்ன? நாட்டுக்கும் வீட்டுக்கும் பச்சையாத் துரோகம் செஞ்சுக் கிட்டு இருக்கிற அந்தச் சிகப்புப் பணக் காரக் குடிகாரன் வீரமுத்துவினாலே என்னா செஞ்சுப்புட எலுமாம்? துாவே-!

 காறித்துப்பிக் கொண்டே தலையைத் தட்டி முடி போட்டவளாகத் தலை நிமிர்ந்தாள் பூங்காவனம்.
 ராத்திரி வந்தது.
  வந்த ராத்திரி சிவராத்திரியாகவே வாய்த்தது. கன்னி நிலவாகவே. மெய் உருகி மெய்ம்மறக்கின்றாள் பூங்காவனம் 'அன்பான அருமைச் சிங்கார வேலனே!- எம்புட்டு ஆசை மச்சானே! இந்தச் சமைஞ்ச குட்டி பூங்காவனம் வாழ்ந்தால், இனி உங் களோட தானாக்கும் வாழ்வாள், ஆத்தா அங்காளம்மை பேரிலே ஆணை வச்சுச் சொல்லிப்புட்ட சங் கதியாக்கும் இது!’ தேவ குமாரனாகத் தோன்றாமல் தோன்றுகிறான் சிங்காரவேலன்!
  பாதிச் சாமம்,
  கதவு தட்டப்படுகிறது.
  பத்ரகாளியாகிறாள் பூங்காவனம். "என்னாங்கிறேன். ஆம்மான் மவன் காரவுகளே! ஓங்களுக்கு என்னா வேனும்? அதுவா, இல்லை இதுவா? ஊம்-சல்தியிலே செப்பிடுங்கங்கிறேன்!" நயமாக, விநய மாக வினவினாள்.’
  அவள் கட்டிய இடங்களிலே, வீச்சரிவாளும், பட்டாக் கத்தியும் விதியென நமட்டுச் சிரிப்புக் சிரித்தன! பூவை எஸ். ஆறுமுகம்         121

__________________________________

 “எனக்கு நீ தான் வேணுமாக்கும்!”
 ‘ஓ. அப்டிங்களா, அம்மான் மவன்காரவுகளே? பலே - ஒங்களுக்கு நான்தான் வேணும்னா, மூச்சுக் காட்டாமல் என்னை எடுத்துக்கிட வேண்டியது தானே? அப்பாலே, என்ன ரோசம் கெட்ட ரோசனை வேண்டிக் கிடக்குது? ஊ ம்-வாங்கங்கிறேன்... ஊம்...!”
  சிம்னி விளக்கு பெரிதாகவே எரிந்தது.
 மிருக வெறி கெட்டிமேளம் கொட்டப் பாய்ந்தான் சூரப்புலி வீரமுத்து.
 பூங்காவனம்  கண்கள்  சிவக்க ரத்தக்காட்டேரி ஆகிறாள்! காந்தி மகாத்மா மானசீகக் குருவாகி உபதேசம் செய்திருக்க வேண்டும்! மறு இமைப்பில், பூங்காவனத்தின் நகங்களும், பற்களும், மனிதத் தன்மையைப் பறிகொடுத்து நின்ற வீரமுத்துவிடம் விளையாடுகின்றன; விளையாட்டுக் காட்டுகின்றன
 ரத்தம் பீறிடுகிறது!
 வீரமுத்து வீரிட்டான்; "ஐயோ! வலி தாளல்லியே! எனக்கு மாப்புக் கொடுத்து என்னை விட்டுப் புடு புள்ளே! நன்னியோட நான் கண்காணாமல் ஒடிப்புடுவேன் !"
 சிங்காரவேலனின் புண்ணியத்திலே, வீரமுத்துவின் தலை தப்பியது.
 அன்றொரு நாள் அந்திக் கட்டில் ஊருணியில் குளித்து முழுகி மஞ்சள் ரவிக்கையையும் சிவப்பு நிறத்

அ-8 122 அமுதவல்லி __________________________________

திலான உள்பாவாடையையும் காயப் போட்டு விட்டுச் சுங்கடிப் புடவையின் ஒரு தொங்கலைக் கருவேல மரத்தின் ஈசான்யமுடுக்கிலே முடிபோட்டு, மறு முனையை உடம்பைச் சுற்றிக் கொண்டு உலர வைத்துக் கொண்டிருந்தாள் பூங்காவனம். எதிர் பாராத மாய விதியாகப் பேய் மழையும், சூறைக் காற்றும் கொட்டி முழக்கத் திக்கு முக்காடிப் போனாள் கன்னி; இடுப்புச் சேலையைக் காற்று கொள்ளை கொள்ளவே, தீமித்த வளாகத் துடித்த வேளை கெட்ட அவ்வேளையிலே, அங்கே செடி மறைவில் தேவ குமாரனாய்த் தோன் றின சிங்காரவேலன் கோவணத் துடன் நின்று, இடுப்பு வேட்டியைப் பூங்காவனத்தின் அழகு மேனியைக் குறிவைத்து வீசினான்!

  மானம் காத்த அந்த நல்ல புண்ணியவானையே இப்போது மனம் காக்கவும் நிர்ணயம் செய்து கொண்டாள் பூங்காவனம்.
  ஏழைமையும், ஏழைமையும் ஜோடி சேர்ந்தன.
  காலம் ஒரு புள்ளி மானுங்கூட!
  ஒரு நாள் அந்தி சந்திப்பொழுது; கம்மாய்க் கரை,
  எதிரில் பூங்காவனத்தின்  வீரமுத்து, சைக்கிளும் கையுமாக நின்றான்; உருமினான்:
"ஏ புள்ளே ...! பொட்டுப் பொழுதுக்குக் கால் பாவி நின்னு, பொட்டிலே அறைகிறதாட்டம் தான் சொல்லப்போற இந்த நல்ல சமாச்சாரத்தைக் காதிலே வாங்கிக்கிட்டுப் பறிஞ்சுப்புடு நாட்டையும் வீட்டையும் ஒசத்தியாய் நினைச்சு, பணப்பசை

பூவை எஸ். அறுமுகம்

123


மிஞ்சின இந்த வீரமுத்துவை, உம்புட்டு முறை மச்சானான என்னைக் கள்ளச் சாராயம் குடிக்கிறவன் என்னும் படியான ஒரு அற்ப சொற்பமான காரணத்தை வச்சுத் தட்டிக் கழிச்சுப் பூட்டு, எவனோ புறம் போக்குப் பயமவன் ஒருத் தன் கட் டின மஞ்சள் தாலியிலே கும் மாளம் போட்டுக் கிட்டு இருக்கிற உனக்குத் தாலிப் பொசிப்பு இன்னும் கொஞ்ச நாளைக் குத் தானாக்கும்!.. இதை ஒன் சுங்கடி முந்தானை யிலே முடிபோட்டு வச்சுக் கிடு!... ஆமா, செப் பிப் பூட்டேன்! உன்னோட ஆசையான, நேசமான-மச்சான் உசிரைப் பலி வாங்காமல், நான் நல்ல தூக்கம் துரங்கவே மாட்டேன்! இது சத்திய மான சத்தியமாக்கும்! நீ இல்லாமல், நான் இந்த மண்ணிலே முழுப்பைத் தியமாகிட்ட அநியாயத்துக்குப் பழிக்குப் பழி வாங்காமல் தப்புவேனா நான் ? நான் எப்பவுமே சூரப் புலியே தான்!”

புண்ணியத் தாலி ஊசலாடியது.

உதயசூரியனைக் கண் காணாமல் செய்த பெரு மையில், வெய்யில் சூடேறிக் கொண்டிருக்கிறது.

‘ஐயையோ... எந்தெய்வமே...!”

அலறிக் கதறிக் கொண்டே, தலைவிரிகோலமாக ஒடோடி வந்தாள் பூங்கா வனம்! நெற்றிக்கு மகிமை சேர்த்த மீனாட்சி குங்குமம் சன்னம் சன்னமாகக் கரைகிறது; கரைந்து கொண்டிருக்கிறது, கொண்டைப் பூக்கள் கெண்டை மீன்களாகத் துவண்டு வீழ்கின்றன; ரத்தமும் ரணமுமாகிக் குற்றுயிரும் குலை உயிருமாகப் பேச்சு மூச்சில்லாமல் வெறும் பிணம் கணக்கிலே. கண்மூடிக் கிடந்த சிங்காரவேல னின் பாதங்களிலே நெடுஞ்சாண்கிடையாகச சரண்

124

அமுதவல்லி

டைந்தாள் ரத்தக் கண்ணிர் மடை உடைகிறது. மடையை உடைக்கிறது.

அழகான முகம் முழுவதிலுமே அடிபட்ட ரணங்கள் பளிச்சிட்டன.

நெற்றிப் பொட்டுக்கு மேலே மண்டை பிளந்து விட்டாற்போன்று எலும்புகள் திமிறித் தெறித்தன!

மூச்சிறைக்க ஓடிவந்த நாட்டு வைத்தியர் நிதா னம் காத்து, அழகுச் சிங்கம் சிங்காரவேலனின் நாடியைச் சோதித்தார். ‘ஆத்தாடி! உம் புட்டு அருமை பெருமையான மச்சானோட அன்பான உயிர், சிவலோகம் பறிஞ்சு பொழுது உண்டனவே ஆகிடுச்சு, ஆத்தாளே!” வைத்தியர் செருமினார்.

“ஐயையோ! எம் புட்டு ஆசை மச்சானே! நிலை குத் தின பார்வையில் சிலையான பூங்கா வனம், மீண் டும் ரத்தக் காட்டேரி ஆகிறாள்: ‘'என்னோட நேச மச்சானை இப்படி அநியாயமாகச் சாகடிச்ச அநியா யக்காரப் பாவி யாருன் னு தெரிஞ்சா, அவனைத் தேடிப் பிடிச்சுக் கடிச்சு குதறி அந்தப் படு பாவி யோட உயிரைக் குடிச்சுப் புடுவேனாக்கும்!’ வின் முட்டி மண்முட்டக் கூக்குரலிட்டாள்!

மறு இமைப்பில், சிங்காரவேலனைப் பலிவாங் இய அந்தப் பாவியைக் கைகளைக் கட்டிய வண்ணம் பரபர வென்று இழுத்து வந்து நிறுத்தினார்கள் ஊர் இள வட்டங்கள்!

பூங்காவனம் ஏறிட்டு விழித் தாள், மின் அதிர்ச்சி 蠶 நிலைகுலைந்தாள்: “அட பாவி வீரமுத்து...! நீயா?

வீரக் கண்ணகியாக நீதிமுழக்கம் செய்து, வீரத் தமிழச்சியாகப் பாய்ந்த பூங்காவனம், வெறி தீர வீர 

பூவை எஸ். ஆறுமுகம்

125


முத்துவின் முகத்திலே எச்சிலை உமிழ்ந்து, அவன் தலை முடிகளைப் பற்றிக் குலுக்கி அவன் முகத்தை நிமிர்த்தினாள் !

சூரியன் சுட்டெரித்தான்.

‘தெய்வம் திருவுள்ளத்துக்கும் அஞ்சாமல், ஒன் னோ ட சவால் படி என்னோட மஞ்சள் தாலியைப் பறிச்சுக் கிட்ட ஒன் னை அம் மாஞ்சுளுவிலே உசி ரோ ட விட்டுப் பூ டுவேனா, என்ன ? என் தாலி யைப் பறிச்சுக் கிடுற தாய் எங்கிட்டே நீ செஞ்ச சபதத்தை மெய்ப்படுத்திக் காட்டவேணும் என்கிற பாவப்பட்ட மிருக வெறியிலே எனக்கு எமனாகி, என் மச்சா மேலே நயவஞ்சனையிலே லாரியை ஏத்தி எந் தெய்வத்தைச் சாகடிச்ச உன் னைக் கடிச்சுக் குதறி உன்னை உசிரோடவே சாகடிச்சுப் பழி க்குப் பழி வாங்கிட்டு, நானும் எம்மச்சான் பின்னாடி சிவலோகம் பறிஞ்சிடுறேன்!”

வீரமுத்துவின் சிவப்பேறிய விழிகளிலே கடுநீர் தளும்புகிறது: “அயித் தை மகளே! ஒரு பொழுதிலே, நான் உன் தாலியைப் பறிச்சுக் கிடுறதாகச் சவால் விட்டது என்னமோ நிஜம் தான்! ஆனா, அதுக்கும் இப்ப ஏற்பட்ட விபத்துக்கும் சாமி சத்தியமாய் எந்தச் சம்பந்தமுமே கிடையாது; தவிர வும், லாரி யிலே அடிபட்ட ஆள் உம் புருசன் என்கிற தாக்கலே நீ சொல்லித் தான் எனக்கு விளங்கிச்சு - என்னைப் பழிக்குப் பழி வாங்க வேண்டி, நீ என்னோட உயிரைத் தாராளமாய் குடிச்சுப்புடு! நான் சம்மதிக்கிறேன். ஆனா, அதுக்கு ஊடாலே, நடந்த நடப்பைச் சொன்னால் தான் எம்மனசு ஆறும்..."

வீரமுத்து பேச்சை முடிக்கவில்லை.

128

அமுதவல்லி

கிறுக்குப் பிடித்தவளாகத் தலை முடிகளைத் தாறுமாறாகவே பிய்த்துக் கொண்டவள். அடுத்த கணம் தன் கழுத்துத் தாலியையும் பிய்த்து எறி கிறான்!

‘தங்கச்சியோ...’

வீரமுத்துவின் ஆசைக் கண்ணாட்டி பவளக் கொடி நா தழ தழக்க விம் முகிறாள்.

வெறிச்சோடிக் கிடந்த சூன்யத்தை வெறித்த வாறு, நடந்த கதையை நைந்த குரலில் பேசி நின்றாள் பூங்காவனம்.

“எம் புருசன் குடிபோதையிலே லாரியை உன் மச்சான் மேலே ஏத்திக் கொன் னுப்புட் டாகளா? தங்கச்சிப் பொண்னே...! எம் மச்சான் எங்க கண்ணாலத்துக்கு முந்தி குடி காரராக இருந்தது வாஸ்தவம்தான்; ஆனா, என்னைக் கட்டிக்கிட்டப் புறம், குடியை மறந்து, மெய்யாலுமே நல்ல குடிமக னாக மாறிப் பூட்டாங்களாக்கும்! தங்கத் தாலி மின்னிப்பளிச்சிடக் கருவத்தோடு பேசினாள் பவளக்கொடி. .

மெய் நடுங்கப் பொறி கலங்கி மலைத்து நின்றாள் அபலை பூங்கா வனம்.

பவளக்கொடி செப்பினது மெய்யா லுமே சத்தி வந்தானோ? அப்படின் னா, என் அருமை மச்சானோட பெருமையான உ.சிரைப் பறிச்சுக்கி ட்டது பாழும் விதியேதானா? வீரமுத்து ஒடுங்கி நின்ற திசைநோக்கி மறு கி நடந்தாள். நெருக்கமாக வீர முத்துவை நெருங்கினாள்! கொஞ்சம் முந்தி தான் துப்பிய எச்சில் இன்னமும் காயாமல் இருக்கவே, சுங்கடி முந்தானையைக் கொய்து எச்சிலின் ஈரத் தைத் துடைத் தாள், பூங்காவனம். பூவை எஸ். ஆறு மூகம் ፲ 2?

தலை நிமிர்ந்து கண்ணிர் வழிந்தோட நின்ற வீரமுத்து, வாயைக் குவித்து ஊதினான். கள்ளச் சாராயத்தின் கெட்ட வாடை, நெடி எதுவுமே தடயம் காட்டவில்லை!

“அயித்தை மகளே பூங்காவனம்! பவளக் கொடிக்கு நான் திருப்பூட்டினதிலேருந்து என்னைக் குடியை மறக்கச் செஞ்சு, என்னை அசலாகவே நல்லவனவாகவும் மாற்றிப்புட்டா என் தெய்வம் பவளம்...! சாமி சத்தியமாச் சொல்லுறேன்; நான் உன் தாலியைப் பறிச்சுக்கிடப் போறதாக ஆத்திரத்தினாலே சவால் விட்டது. மெய்யான சங்கதிதான்! ஆனா, அந்தச் சபதத்துக்கும் இப்பைக்கு நடந்த விபத்துக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆவணத் தாங்கோட்டை - பனங்குளம் நெடுஞ்சாலையிலே நான் என்னோட சொந்த லாரியை வெரசாய் ஒட்டிப் போய்க்கிட்டு இருந்தேன். ஒரு மடக்கத்திலே நான் என் லாரியைத் திருப்பின சமயத்திலே, அந்தஆள் அது தான் உன் மச்சான், அத்து மீறிக் குடிச்சவர் கணக்கிலே தள்ளாடித் தடுமாறி வந்துக் கிட்டிருந்தார். ஒதுங்காமல் கொள்ளாமல் தன் போக்குக்கு தலை சுத்தினாப்பிலே நடந்து வந்தவர், லாரி மேலே மோதிக்கிட்டு மண்ணிலே சாய்ஞ்சிட்டார்: நான் பாடுபட்டு பிரேக் போட்டும், லாரியைக் கட்டுப்படுத்த முடியலே! தடம் மாறாமலே விழுந்து கிடந்த உம்மச்சான் மேலேறிடுச்சு உம் மச்சானோட அருமையான உயிர் பறிபோனதோடே விதியோட விளையாட்டும் முடிஞ்சிருச்சு இது தான் ஆத்தா சத்தியமாய் நடந்த நடப்பு என்னை நம்பு-பூங்காவனம்’ வீரமுத்து புலம்பி அழுதான்.

எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ? # 28 அமுதவல்லி

பூங்காவனம் இப்போது அழவில்லை! அப்புடீன்னா, சட்டத்தோட நீதிக் கூண்டிலே குற்றவாளியாய் நிறுத்தப்பட வேண்டியது மெய்யாலுமே விதியே தானா? நடந்தாள். அருமை பெருமை வாய்ந்த மச்சான் சிங்காரவேலனை மறுபடி அண்டினாள்; முகத்தோடு முகம் பொருத்தி ஒர் அரைக் கணம் அமர்ந்திருந்தாள்! மறுகணம், அவள் முகம் சுழித்தா ள்; முகம் சுளித்தாள்! உன் மச்சான் அத்து மீறிக் குடிச்சிட்டது கணக்கிலே தள்ளாடித் தடுமாறி வந்துக்கிட்டிருந்தார்!’ வீரமுத்துவின் வாய்மொழி களிலே விதி சிரித்ததோ, இல்லை வினை தான் சிரித் திருக்குமோ?

அப்போது

அங்கே

அருமை பெருமை மிகுந்த, ஆசையும் நேசமுமான அன்பு மச் சான் சிங்காரவேலனிடம் வெறும் பிணவாடையை மட்டுலுந்தானா பூங்காவனம் நுகர்ந்து உணர்ந்தாள்...? சே...!

“ஆத்தாளே.. அதுவரையிலும் ஒரு பாவமும் அறியாமலே இருந்திட்ட எம்மச்சானை சமுதாயக் குற்றவாளியாக ஆக்கி, என்னையும் பாவிப்பட்ட தொரு சென்மமாக ஆக்கி, அபூர்வமாச் சோடி சேர்ந்த எங்களைச் சோடி சேர்ந்தே அலங்கோலமாச் சோதிச்சுப்புட்டியேடி-ஆத்தாளே?”

வேரறுந்த சரக்கொன்றையென மண்ணிலே சரண் அடைகிறாள் பூங்காவனம்! வாய் திறக்க, அவளுக்கு இனிமேல் என்ன மிச்சம், மீதி இருக்கிறதாம்?-அந்த விதிக்கும் தான் இனி, என்ன விட்ட குறை, தொட்டகுறை இருக்கப் போகிறதாம்...?

பாவம்... !

பாவம், விதி...!

"https://ta.wikisource.org/w/index.php?title=அமுதவல்லி/இனி…!&oldid=1663789" இலிருந்து மீள்விக்கப்பட்டது