ஆசிரியர்:அம்மூவனார்
←ஆசிரியர் அட்டவணை: அ | அம்மூவனார் (சங்ககாலம்—) |
இவர் ஒரு சங்க காலத் தமிழ்ப் புலவராவார். சங்கத்தொகை நூல்களில் 127 பாடல்கள் இவர் பாடியனவாகக் காணப்படுகின்றன. |
- பாடிய பாடல்கள் தொகை
1. அகநானூறு: 6 பாடல்கள் (10, 35, 140, 280, 370, 390)
2. ஐங்குறுநூறு: 100 பாடல்கள் (நெய்தல்: 101-200)
3. குறுந்தொகை: 11 பாடல்கள் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401)
4. நற்றிணை: 10 பாடல்கள் (4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397)
1. அகநானூறு
தொகுபாடல்: 10. நெய்தல் திணை
தொகு(இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை யெதிர்ப்பட்டுநின்று தோழி சொல்லியது)
- வான்கடற் பரப்பிற் றூவற் கெதிரிய வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய
- மீன்கண் டன்ன மெல்லரும் பூழ்த்த மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த
- முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப் முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மா சினை
- புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப புள் இறை கூரும் மெல் அம் புலம்ப
- நெய்த லுண்கண் பைதல கலுழப்நெய்தல் உண்கண் பைதல கலுழப்
- பிரித லெண்ணினை யாயி னன்று பிரிதல் எண்ணினை ஆயின் நன்றும்
- மரிதுற் றனையாற் பெரும வுரிதினிற் அரிது உற்றனையால் பெரும உரிதினின்
- கொண்டாங்குப் பெயர்தல் வேண்டுங் கொண்டலொடு கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும் கொண்டலொடு
- குரூஉத்திரைப் புணரி யுடைதரு மெக்கர்ப் குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
- பழந்திமிற் கொன்ற புதுவலைப் பரதவர் பழம் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
- மோட்டுமண லடைகரைக் கோட்டுமீன் கொண்டி மோட்டு மணல் அடை கரைக் கோட்டு மீன் கொண்டி
- மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும் மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
- வளங்கெழு தொண்டி யன்னவிவள் நலனே. வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே. (பாடல் எண்: 1)
அகநானூறு: 35. பாலைத்திணை
தொகு(மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது)
- ஈன்று புறந்தந்த வெம்மு முள்ளாள் ஈன்று புறம் தந்த எம்மும் உள்ளாள்
- வான்றோ யிஞ்சி நன்னகர் புலம்பத் வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்பத்
- தனிமணி யிரட்டுந் தாளுடைக் கடிகை தனி மணி இரட்டும் தாள் உடைக் கடிகை
- நுழைநுதி நெடுவேற் குறும்படை மறவர் நுழை நுதி நெடு வேல் குறும் படை மறவர்
- முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த முனை ஆ தந்து முரம்பின் வீழ்த்த
- வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
- வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் வல் ஆண் பதுக்கைக் கடவுள் பேண்மார்
- நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத் நடுகல் பீலி சூட்டித் துடிப் படுத்துத்
- தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
- போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந் போக்கு அரு கவலைய புலவு நாறு அரும் சுரம்
- துணிந்துபிற ளாயின ளாயினு மணிந்தணிந் துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து அணிந்து
- தார்வ நெஞ்சமொ டாய்நல னைளைஇத்தன் ஆர்வம் நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇத் தன்
- மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல மார்பு துணை ஆகத் துயிற்றுக தில்ல
- துஞ்சா முழவிற் கோவற் கோமான் துஞ்சா முழவின் கோவல் கோமான்
- நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப் நெடும் தேர்க் காரி கொடும் கால் முன் துறை ( )
- பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும் பெண்ணை அம் பேர் யாற்று நுண் அறல் கடுக்கும்
- நெறியிருங் கதுப்பினென் பேதைக் நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு
- கறியாத் தேஎத் தாற்றிய துணையே. அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே. (பாடல் எண்:2)
அகநானூறு: 140. நெய்தல் திணை
தொகு(இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் பாங்கற் குரைத்தது)
- பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
- ரிருங்கழிச் செறுவி னுழாஅது செய்த
- வெண்க லுப்பின் கொள்ளை சாற்றி
- யென்றூழ் விடர குன்றம் போகுங்
- கதழ்கோ லுமணர் காதல் மடமகள்
- சில்கோ லெல்வளை தெளிர்ப்ப வீசி
- நெல்லி னேரே வெண்க லுப்பெனச்
- சேரி விலைமாறு கூறலின் மனைய
பாடல்: 280. நெய்தல் திணை
தொகுபாடல்: 370. நெய்தல் திணை
தொகுபாடல்: 390. நெய்தல் திணை
தொகு2. ஐங்குறுநூறு- நெய்தல்: 101-200
தொகு11. தாய்க்கு உரைத்த பத்து
தொகுபாடல்: 101
அன்னை வாழிவேண் டன்னை உதுக்காண்
ஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே.
(பாடல்: 102)
அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்
நீல்நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாது
துன்புறு துயரம் நீங்க
இன்புற இசைக்கும் அவர் தேர்மணிக் குரலே.
பாடல்: 103
அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்
இவட்குஅமைந் தனெனால் தானே
தனக்கு அமைந்த தன்றுஇவள் மாமைக் கவினே.
- பாடல்
- 104.
அன்னை வழிவேண் டன்னை நம்மூர்ப்
பலர்மடி பொழுதின் நலம்மிகச் சாஅய்
நள்ளென வந்த இயல்தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வனஃ தூரே.
- பாடல்
- 105.
அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தெனப்
பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதலே.
- பாடல்
- 106.
அன்னை வாழிவேண் டன்னை அவர்நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்
தன்கடல் வளையினும் இலங்கும்இவள்
அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.
- பாடல்
- 107.
அன்னை வாழிவேண் டன்னைஎன் தோழி
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து
தண்கடல் படுதிரை கேட்டொறும்
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.
- பாடல்
- 108.
அன்னை வாழிவேண் டன்னை கழிய
முண்டக மலரும் தண்கடற் சேர்ப்பன்
எந்தோள் துறந்தனன் ஆயின்
எவன்கொல் மற்றவன் நயந்த தோளே.
- பாடல்
- 109.
அன்னை வாழிவேண் டன்னை நெய்தல்
நீர்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
எந்தோள் துறந்த காலை எவன்கொல்
பன்னாள் வரும்அவன் அளித்த போழ்தே.
- பாடல்
- 110.
அன்னை வாழிவேண் டன்னை புன்னை
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
என்னை என்றும் யாமே இவ்வூர்
பிறதொன் றாகக் கூறும்
ஆங்கும் ஆக்குமோ வழிய பாலே.
12. தோழிக்கு உரைத்த பத்து.
தொகுபாடல்: 111.
அம்ம வாழி தோழி பாணன்
சூழ்கழி மருங்கின் நாண்இரை கொளீஇச்
சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
அருந்தவம் முயறல் ஆற்றா தேமே.
பாடல்: 112.
அம்ம வாழி தோழி பாசிலைச்
செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்
தான்வரக் காண்குவம் நாமே
மற்ந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே.
பாடல்: 113.
அம்ம வாழி தோழி நென்னல்
ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டென மொழிய என்னை
அதுகேட் டன்னாய் என்றனள் அன்னை
பைபய வெம்மை என்றனென் யானே.
பாடல்: 114.
அம்ம வாழி தோழி கொண்கன்
நேரேம் ஆயினும் செல்குவம் கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடலம் பெண்ணை அவனுடை நாட்டே.
பாடல்: 115.
அம்ம வாழி தோழி பன்மாண்
நுண்மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணந் துறைவன் மறைஇ
அன்னை அருங்கடி வந்துநின் றோனே.
116.
அம்ம வாழி தோழி நாம் அழ
நீல இருங்கழி நீலம் கூம்பு
மாலைவந் தன்று மன்ற
காலை யன்ன காலைமுந் துறுத்தே.
117.
அம்ம வாழி தோழி நலனே
இன்ன தாகுதல் கொடிதே புன்னை
யணிமலர் துறைதொறும் வரிக்கும்
மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே.
118.
அம்ம வாழி தோழி யான் இன்று
அறன்இ லாளன் கண்ட பொழுதில்
சினவுவென் தகைக்குறவன் சென்றனென்
பின்நினைந்து இரங்கிப் பெயர்தந் தேனே.
119.
அம்ம வாழி தோழி நன்றும்
எய்யா மையின் ஏதில பற்றி
அன்பிலன் மன்ற பெரிதே
மென்புலக் கொண்கன் வாரா தோனே.
120.
அம்ம வாழி தோழி நலமிக
நல்ல ஆயின அளியமெல் தோளே
மல்லல் இருங்கழி நீரறல்விரியும்
மெல்லம் புலம்பன் வந்த மாறே.
13. கிழவற்கு உரைத்த பத்து
தொகு121. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
முண்டகக் கோதை நனையத்
தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே.
122.
கண்டகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினைவு வோளே.
123.
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்
தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே.
124.
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
வண்டற் பாவை வெளவலின்
நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே.
125.
கண்டிகும் அல்லமோ கொண்கநின்
தெண்டிரை பாவை வெளவ
ஊண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.
126.
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
யுண்கண் வண்டினம் மொய்ப்பத்
தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே.
127.
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
தும்பை மாலை இளமுலை
நுண்பூண் ஆகம் விலங்கு வோளே.
128.
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
உறாஅ வறுமுலை மடாஅ
உண்ணாப் பாவையை ஊட்டு வோளே.
129. கிடைக்காத பாடல்
130. கிடைக்காத பாடல்
14.பாணற்கு உரைத்த பத்து
தொகு131. நண்றே பாண கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ்வூர்க்
கல்லென் கௌவை எழாஅக் காலே.
132.
அம்ம வாழி பாண புன்னை
அரும்புமலி கானல் இவ்வூர்
அலரா கின்றுஅவர் அருளு மாறே.
133.
யானெவன் செய்கோ பாண ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென் றனஎன் புரிவளைத் தோளே.
134.
காண்மதி பாண இருங்கழிப் பாய்பரி
நெடுந்தேர்க் கொண்க னோடு
தான்வந் தன்றுஎன் மாமைக் கவினே.
135.
பைதலம் அல்லேம் பாண பணைத்தோள்
ஐதுஅமைந்து அகன்ற அல்குல்
நெய்தலம் கண்ணியை நேர்தல்நாம் பெறினே.
136.
நாணிலை மன்ற பாண நீயே
கோண்ஏர் இலங்குவளை நெகிழ்த்த
கானலம் துறைவற்குச் சொல்உகுப் போயே.
137.
நின்னொன்று வினவுவல் பாண நும்மூர்த்
திண்தேர்க் கொண்கனை நய்ந்தோர்
பண்டைத் தந்நலம் பெறுபவோ.
138.
பண்பிலை மன்ற பாண இவ்வூர்
அன்பில கடிய கழறி
மென்புலக் கொண்கனைத் தாரா தோயே.
139.
அம்ம வாழி கொண்க எம்வயின்
மாண்நலம் மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலம்சிதைக் கும்மே.
140.
காண்மதி பாணநீ யுரைத்தற் குரிகை
துறைகெழு கொண்கன் பிரிந்தென
விறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே.
15.ஞாழற் பத்து
தொகு141. எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண்துளி வீசிப்
பயலை செய்தன பனிபடு துறையே.
142.
எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப்
புள்இறை கூரும் துறைவனை
உள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே.
143.
எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை
இனிய செய்த நின்றுபின்
முனிவு செய்தஇவள் தடமெல் தோளே.
144.
எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்
தனிக்குரு உறங்கும் துறைவற்கு
இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே.
145.
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன் இனியே.
146.
எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர்
நறிய கமழும் துறைவற்கு
இனிய மன்றஎன் மாமைக் கவினே.
147.
எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
ஒள்தழை அயரும் துறைவன்
தண்தழை விலையென நல்கினன் நாடே.
148.
எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீஇனிது கமழும் துறைவனை
நீயினிது முயங்குதி காத லோயே.
149.
எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு
அணங்குவளர்த்து அகறல் வல்லா தீமோ.
150.
எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்
புணரி திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே.
16.வெள்ளங் குருகுப் பத்து
தொகு151. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
மிதிப்ப நக்க கண்போல் நெய்தல்
கள்கமழ்ந்து ஆனாத் துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே.
152.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கையறுபு இரற்றும் கானலம் புலம்பம்
துரைவன் வரையும் என்ப
அறவன் போலும் அருளுமார் அதுவே.
153.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
உளர ஒழிந்த தூவி குலவுமணல்
போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை
நன்னெடுங் கூந்தல் நாடுமோ மற்றே.
154. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானற் சேக்கும் துறைவனோடு
யானெவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே.
155.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடுபெயரும் துறைவதற்குப்
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே.
156.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி
தெள்கழிப் பரக்கும் துரைவன்
எனக்கோ காதலன் அனைக்கோ வேறே.
157.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலை யிருந்து மாலைச் சேக்கும்
தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனன்எம் காத லோனே.
158.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்
தண்ணந் துறைவன் கண்டிக்கும்
அம்மா மேனிஎம் தோழியது துயரே.
159.
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப
நின்ஒன்று இரக்குவன் அல்லேன்
தந்தனை சென்மோ கொண்டஇவள் நலனே.
160. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ
பண்டையின் மிகப்பெரிது இனைஇ
முயங்குமதி பெரும மய்ங்கினள் பெரிதே.
17.சிறுவெண் காக்கைப் பத்து
தொகு161. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்தநுதல் அழியச் சாஅய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பா ல்ஃதே.
162.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டு
பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்
துறைவன் சொல்லோ பிறவா யினவே.
163. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்
துறைவன் துறந்தெனத் துறந்துஎன்
இறையேர் முன்கை நீக்கிய வளையே.
164.
இருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணந் துறைவன் தகுதி
நம்மோடு அமையாது அலர்பயந் தன்றே.
165.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
ஆருகழிச் சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல்என்
இறையோர் எல்வளை கொண்டுநின் றதுவே.
166.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
வரிவெண் தாலி வலைசெத்து வெரூஉம்
மெல்லம் புலம்பன் தேறி
நல்ல வாயின நல்லோள் கண்ணே.
167.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி
நல்கான் ஆயினும் தொல்கே என்னே.
168.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
துறைபடி யம்பி அகமனை ஈனும்
தண்ணந் தூறைவன் நல்கி
ஒள்நுதல் அரிவை பாலா ரும்மே.
169.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
பொன்னிணார் ஞாழல் முனையில் பொதியவிழ்
புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை யறிந்தும்
என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே.
170.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்குந் துறைவன்
நல்லன் என்றி யாயின்
பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ.
18.தொண்டிப் பத்து
தொகு171. திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலது
முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு இசைக்கும்
தொண்டி அன்ன பணைத்தோள்
ஒள்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோ ளே.
172.
ஒள்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே
வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல்ஒலித் திரையென
இரவி னானும் துயிலறி யேனே.
173.
இரவி னானும் இந்துயில் அறியாது
அரவுறு துயரம் எய்துப தொண்டித்
தண்நறு நெய்தல் நாறும்
பின்இருங் கூந்தல் அணங்குற் றோரே.
174.
அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன
மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கு இழை
பொங்கரி பரந்த உண்கண்
அம்கலில் மேனி அசைஇய எமக்கே.
175.
எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள்
நல்நுதல் அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியா மடந்தை
தொண்டி யன்னநின் பண்புல கொண்டே.
176.
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்டொடி
ஐதுஅமைந்து அகன்ற அல்குல்
கொய்தளிர் மேனி கூறுமதி தவறே.
177.
தவறிலர் ஆயினும் பனிப்ப மன்ற
இவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு
முண்டக நறுமலர் கமழும்
தொண்டி அன்னோள் தோள்உற் றோரே.
178.
தோளும் கூந்தலும் பலபா ராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி யன்ன
என்கண்டும் நயந்துநீ நல்காகக் காலே.
179.
நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப
அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும்
இன்னொலித் தொண்டி அற்றே
நின்னலது இல்லா இவள்சிறு நுதவே.
180.
சிறுநனை வரைந்தனை கொண்மோ பெருநீர்
வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
பறைதபு முதுகுருகு இருக்கும்
துரைகெழு தொண்டி அன்னஇவள் நலனே.
19.நெய்தற் பத்து
தொகு181. நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைந்தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண்மணல் குரவை நிறூஉந்
துறைகெழு கொண்கன் நல்கி
உறைவுஇனிது அம்மஇவ் அழுங்கள் ஊரே.
182.
நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்
அருந்திறல் கடவுள் அல்லன்
பெருந்துறைக் கண்டுஇவள் அணங்கி யோனே.
183.
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாடன் நல்வய லூரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே.
184.
நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீனுநுண் குருகுஇளங் கானல் அல்கும்
கடல்அணிந் தன்றுஅவர் ஊரே
கடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே.
185. அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்துறை
இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய்
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்புஆர்த் தன்ன தீங்கிள வியனே.
186.
நாரை நல்லினம் கடுப்ப மகளிர்
நீர்வார் கூந்தல் உளரும் துறைவ
பொங்குழி நெய்தல் உறைப்ப இத்துறை
பல்கால் வரூஉம் தேரெனச்
செல்வா தீமோ என்றனள் யாயே.
187.
நொதும லாளர் கொள்ளார் இவையே
எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்
உடலகம் கொள்வோர் இன்மையின்
தொடலைக் குற்ற சிலபூ வினரே.
188.
இருங்கழிச் சேயிறா இனப்புன் ஆரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
வைகறை மலரும்நெய்தல் போலத்
தகைபெரி துடை காதலி கண்ணே.
189. புன்னை நுன்தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு மணியில் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென
நல்லன வாயின தோழியென் கண்ணே.
190.
தண்ணறு நெய்தல் தளையவிழ் வான்பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம் புலம்பன் மன்றஎம்
பல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே.
20.வளைப் பத்து.
தொகு191. கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக்
கழிப்புத் தொடர்ந்த இடும்பல் கூந்தல்
கானல் ஞாழற் கவின்பெறு தழையள்
வரையர மகளிரின் அரியள்என்
நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே.
192.
கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழுங்கப்
பாடிமிழ் பனித்துறை யோடுகலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தொழிஎன் வளையே.
193.
வலம்புரியுழுத வார்மணல் அடைகரை
இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்
துரைகெழு கொண்கநீ தந்த
அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே.
194. கடற்கோ டறுத்த அரம்போழ் அவ்வளை
ஒள்தொடி மடவரல் கண்டிக்கும் கொண்க
நன்னுதல் இன்றுமால் செய்தெனக்
கொன்ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே.
195.
வளைபடு முத்தம் பரதவர் பகரும்
கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்
கெடலரும் துயரம் நல்கிப்
படலின் பாயல் நல்கி யோளெ.
196. கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
தென்கழி சேயிறாப் படூஉம்
தன்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ.
197.
இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம்புதை ச்துப்பினள் இறைஞ்ச்நின் றோனே
புலம்புகொள் மாலை மறைய
நலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.
198.
வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகை
இளையர் ஆடும் தளைஅவிழ் கானல்
குறுந்துறை வினவி நின்ற
நெடுந்தோள் அண்ணல் கண்டிக்கும் யாமே.
199.
கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
வானுயர் நெடுமணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே
200.
இலங்குவீங்கு எல்வளை ஆய்நூதல் கவினப்
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே
விலங்குஅரி நெடுங்கண் ஞெகிழ்மதி
நலங்கவர் பசலையை நகுக நாமே.
3. குறுந்தொகை
தொகுகுறுந்தொகை - 49. நெய்தல் திணை
122. அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரெங் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே. (௧)
4. நற்றிணை
தொகுபார்க்க
தொகு- ஐங்குறுநூறு
- ஐங்குறுநூறு நெய்தல்
- [[]] [[]] [[]]