அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/அடக்கமான பெருந்தன்மை

(35) டக்கமான பெருந்தன்மை


பெல்ஜிய நாட்டின் கவிஞரும் நாடக ஆசிரியருமான மாரிஸ் மேட்டர்லிங்கின் எண்பதாவது பிறந்த நாளை மிகச் சிறப்பாக நடத்தி விருந்து வைக்க வேண்டும் என்று நண்பர்கள் மிகவும் ஆசைப்பட்டார்கள்.

மேட்டர்லிங்க் அதை மறுத்து விட்டார்.

"உங்களைப் பாராட்டி நாங்கள் விருந்து வைக்கக் கூடாது என்று ஏன் தடுக்கிறீர்கள்”என்று நண்பர்கள் அவரைக் கேட்டனர்.

"ஏனா? எத்தனையோ இளைஞர்கள் மரணம் அடையும் இந்தக் காலத்தில், எண்பது வயதுக் கிழவனைப் பற்றி உலகம் கவலைப்படுவது நியாயம் அல்ல” என்றார் மேட்டர்லிங்க்.

இப்பொழுது, இவ்வாறு கூறுபவர்கள் யார்?