அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/இரவல் கொடுக்கலாமா?
(36) இரவல் கொடுக்கலாமா?
ஆங்கில நூல் ஆசிரியரான டி. குவின்ஸி, இரவல் வாங்கிய புத்தகத்தை திருப்பிக் கொடுப்பதே கிடையாது. கவனமாகப் பாதுகாக்கவும் மாட்டார்.
தனக்கு வேண்டிய விஷயங்கள் ஏதேனும் இருக்கக் கண்டால் அந்தப் பக்கங்களை வெட்டி எடுத்துக் கொள்வார்.
எவ்வளவு விலை உயர்ந்த புத்தகமானாலும் சரி, அந்த இரவல் புத்தகங்களிலிருந்து பக்கங்களை கிழித்துக் கொள்வாரேயன்றி வேறு தாளில் நகல் செய்து கொள்ள மாட்டார். . . -
நூலகங்களில் இப்படிச் செய்வோர் இன்றும் இருக்கின்றனர். .