அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/அதைப்பிறகு பார்த்துக்கொள்ளலாம்


(43) தைப்பிறகு பார்த்துக்கொள்ளலாம்



பல அற்புதங்களைக் கண்டுபிடித்தவர் அமெரிக்க மேதை தாமஸ் எடிசன்.

அவருடைய 55வது வயது பிறந்த நாளைக் கொண்டாடப் பல பிரமுகர்கள் விருந்து உபசாரம் நடத்தினார்கள்.

அப்பொழுதுஎடிசனைப்பார்த்து,

இனிமேல், நீங்கள் என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

'75வது வயது வரை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பேன். 80வது வயதில் பெண்களோடு ஏதாவது வம்பளந்து கொண்டிருப்பேன்; 85 வது வயதில் கோல்ப் விளையாடக் கற்றுக் கொள்ளப்போகிறேன்” என்று கூறினார் எடிசன்.

'90 வது வயதில்?’ என்று கேட்டார்கள்.

எடிசன் ஒருவிதமாக தலையை அசைத்து விட்டு, “30 ஆண்டுகளுக்குப்பிறகு நடக்கப் போகிற விஷயங்களைப்பற்றி யெல்லாம் நான் திட்டமிட்டுக் கொண்டிருப்பதில்லை”என்றார்.