அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/அவர் நேரில் கண்டார்

(82) வர் நேரில் ண்டார்



மாமன்னர் மகா அலெக்ஸாண்டருக்கு தளபதி ஒருவர் இருந்தார். தளபதி, தன் மகன் நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கேள்வியுற்று, அவனைக் காண்பதற்காக, அவன் படுத்திருந்த அறைக்குச் சென்றார்.

அறைக்குள் அவர் நுழையும் போது அழகான இளம் பெண் உள்ளே இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

அறையினுள் சென்று மகனைப் பார்த்த போது, நோய் எதுவும் இல்லாமல் அவன் உடல் நலத்தோடு இருப்பதைக் கண்டார் தளபதி.

"அப்பா என்னுடைய நோய் போய் விட்டது!” என்றான் மகன்.

"ஆமாம், ஆமாம். நான் உள்ளே நுழையும் போது அது வெளியே போனதை நானே பார்த்தேன்” என்றார் தளபதி புன்முறுவலோடு.