அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/உழைப்பாளிக்குப் பதவி உயர்வு
(78)
உழைப்பாளிக்குப் பதவி உயர்வு
அமெரிக்காவில், மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான பிரம்மாண்டமான திரை அரங்கைப் பார்வையிடச் சென்றார் உரிமையாளர்.
திரை அரங்கோ மிகுந்த நஷ்டத்தில் ஒடிக் கொண்டிருந்தது.
உரிமையாளர் பார்வையிடப் போன நேரம் பகல் 11 மணி.
அப்பொழுது, காவலாளி மட்டுமே அங்கே இருந்தான். வேறு யாரையும் அங்கே காணவில்லை.
“மானேஜர் எங்கே?" என்று கேட்டார் உரிமையாளர்.
"அவர் வர நேரமாகும்” என்றான் காவலாளி.
“உதவி மேனேஜர் எங்கே?" என்றார்.
"அவரும் வர நேரமாகும்" என்றான் காவலாளி.
“மானேஜரும், உதவி மானேஜரும் இல்லாதபோது, திரை அரங்கை பார்த்துக் கொள்வது யார்?" என்று கேட்டார்.
"நான்தான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் காவலாளி.
"அப்படியானால், இந்த நிமிடம் முதல், இந்தத் திரை அரங்குக்கு நீயே மானேஜராக இரு. உன்னை நியமனம் செய்து விட்டேன்” என்றார் உரிமையாளர்.