அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/ஒரு சொல்லுக்குப் பொருள்

(10) ரு சொல்லுக்குப் பொருள்


ஹம்ப்ரீ பொகார்ட் என்ற நடிகர், அவருடைய மனைவி, நடிகை லாரென்பகால் ஆகிய மூவரும் ஒரு விளையாட்டுக் கழகத்தில், இனிமையாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது கொலம்பியா பட நிறுவனத்தின் தலைவர் ஹாரிகோஹன் அந்தப் பக்கமாய் வந்து நடிகர் பொகார்ட்டிடம் ஏதோ கிசு கிசுத்து விட்டுப் போனார்.

உடனே நடிகர் பொகார்ட், தன் மனைவியிடம், "நான் நடித்திருக்கும் படம் நல்ல வெற்றியைத் தரும்” என்று சொன்னார்.

"அதெப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டாள் நடிகை பகால், - -

"பட அதிபர் கோஹன்,' நமது படம்' என்று அதை இப்பொழுது என்னிடம் குறிப்பிட்டார். அது வெற்றிகரமான படம் அல்லவென்றால், இப்படிக் குறிப்பிடாமல் உன் படம் என்று அல்லவா குறிப்பிட்டிருப்பார் என்றார் நடிகர்.