அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/புகழ் விளம்பரம்

(18) புகழ் விளம்பரம்


செவ்வாய்க் கிரகத்தைத் தவிர வேறு புதிய கிரகத்தைக் கண்டு பிடிப்பவர்களுக்கு ஐயாயிரம் டாலர்கள் பரிசு அளிப்பதாக பிரான்சு தேசத்தின் விஞ்ஞானக் கழகம் அறிக்கை வெளியிட்டது.

அதேபோல், அன்னா கஜ்மன் என்ற அம்மையாரும் இருபதினாயிரம் டாலர்கள் பரிசு அளிப்பதாக அறிவித்திருந்தார்.

பல விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். ஆனால், பரிசு அளிப்பதாகச் சொன்னவர்கள் மெளனமாக இருந்து விட்டனர்.

இவ்வாறு பலர் பொது, மேடையில் அறிவித்து பத்திரிகையில் விளம்பரம், புகழ் தேடிக் கொள்வார்கள். பிறகு பேச்சே இருக்காது.