அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/கண்டு களிப்புறும் ஆசை
(19) கண்டு களிப்புறும் ஆசை
பல வண்ணங்கள் மிளிர, அற்புதமான, சூரியன் மறையும் காட்சியைச் சித்திரம் தீட்டியிருந்தார் ஓவியர் டர்னர்.
அந்தச் சித்திரக் காட்சியைக் கண்ட ஒரு சீமாட்டி, "ஓவியக் கலைஞரே, இம்மாதிரி வண்ணங்களில், கதிரவன் மறையும் காட்சியை நான் கண்டதில்லையே” என்றார்.
“சீமாட்டி அவர்களே, நீங்கள் கண்டிருக்க வேண்டியதில்லை; அப்படிக் கண்டுகளிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசையாக இல்லையா?” என்று பதில் அளித்தார் அந்த ஓவியக் கலைஞர். .